என்னவோ மயக்கம்-7

அருண் சென்ற பின்னே,பிரம்மை பிடித்தாற்போல் நின்ற ப்ரத்யா ,இயந்திரம் போல் தன்னை செலுத்தியவள்,கால் போன போக்கில் செல்ல,எப்படியோ தன் அறைக்கு வந்துவிட்டாள்.

எதிர்ப்படும் வழியில் தன்னை வித்தியாசமாய் பார்த்த ஷெரினை அவள் கண்டுகொள்ளவேயில்லை.

“சம்திங் இஸ் ராங்”முணுமுணுத்தபடியே அறைக்கு வெளியில் நின்று போனை நோண்டிக்கொண்டிருந்தாள் ஷெரின்.கண் மட்டும் அடிக்கடி அறைக்குள் இருக்கும் ப்ரத்யாவை நோக்கிக் கொண்டேயிருந்தது.

சேரில் கண்மூடி அமர்ந்திருந்த பிரத்யாவிற்கோ பலவிதப்பட்ட சிந்தனைகள்!!

“ஏன்! எதுக்காக இப்படியெல்லாம் நடக்குது? “

“தப்புத்தான்! எல்லாமே என் தப்பு(தவறு) தான்! எப்படி எனக்கு தெரியாம போச்சு? “

“வாழ்க்கை முழுக்க இந்த பாரம் என்னை துரத்துமா?”

“இப்போ என்ன செய்யட்டும்? என்னால இந்த வலியை தாங்கிக்கவே முடியலையே! எப்போ யார் அந்த வீடியோ கிளிப்பிங் பார்த்துட்டு,என்ன கேட்பாங்கன்னு பயந்து பயந்தே வாழனுமா?”

“அருண்..அருண்..இப்போ அவனுக்கும் தெரிஞ்சு போச்சே!! முடிஞ்சுது..எல்லாமே முடிஞ்சுதுன்னு சொல்லிட்டு போயிட்டான்!”

“அதெப்படி எல்லாம் முடியும்? அந்த கிளிப்பிங் அவனுக்கு யார் அனுப்பியிருப்பா?”

“இப்போ எல்லாருக்குமே அது தெரிஞ்சிருக்குமா? அப்போ எல்லாரும் பார்த்திருப்பாங்களே..”உள்ளம் கதறிய வினாடி..

“இல்லையே..இதை ஏற்கனவே நிறைய பேர் பார்த்திருக்காங்களே! இப்போ இப்போ நான் என்ன செய்யட்டும்..தப்பு என் மேல தானே..நான் கவனிச்சிருக்கணும் தானே?”

“இவ்வளவு பெரிய சொகுசு வாழ்க்கை எனக்கு கிடைச்சுது..ஆனால்? ஆனால்??பிரத்யூ...பிரத்யூ..”-வாய்விட்டே கதற ஆரம்பித்தாள்.

ஷெரின் காதில் அவளது கதறல் கேட்க..அவள் அவசரமாய் அறைக்குள் நுழைய சில நொடிகள் தான் எடுத்தது.ஆனால் அதற்குள்ளாகவே பழங்களை நறுக்கும் கத்தியை எடுத்து தன் கையை வெட்டிவிட்டாள்.

“ஏய்..என்ன..என்ன பண்ணிட்டு இருக்க நீ”-கத்தியவள்,

“ரேவ்ஸ்..ஹே ரேவ்ஸ்..இங்க வாயேன்”என்று அறையே அலறும்படி கத்தினாள்.

ரேவ்ஸ் மட்டுமல்ல..இன்னும் சிலரும் ஓடி வர,ப்ரத்யா யாரையும் உணரவேயில்லை..

உணர்வே இல்லாதது போல,குற்ற உணர்ச்சியில் மரணித்துக் கொண்டிருந்தாள்.உடல் வலியெல்லாம் இங்கே சாதாரணம்! மன வலி தான் பிய்த்தெடுத்தது.

சூழ்நிலையை புரிந்த ரேவ்ஸ் ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்ய,ஷெரின் அவளின் கையிலிருந்த கைக்குட்டையை எடுத்து,பிரத்யாவின் கையை சுற்றி இறுக்கமாக கட்டியவள்,

“லூசாடி நீ?”-கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை.

ஆம்புலன்ஸ் வர நேரமெடுக்கும் போல தெரிய,செய்தி கேட்டு வந்த வார்டனிடம் சுற்றி இருந்தவர்கள் தகவல் சொல்ல,ஷெரினும் ரேவதியும் ப்ரத்யாவை வலுக்கட்டாயமாய் சிரமப்பட்டு எழுப்பி,கூட்டிக்கொண்டு வந்து,எதிர்ப்பட்ட டாக்சியில் ஏறிக்கொண்டார்கள்.

அவளது கையை கீழே விடாமல்,மேல் நோக்கியபடி தூக்கிப்பிடித்துக்கொண்டே ஷெரின் வந்தாள்.கொஞ்சம் ரத்தம் போவது மட்டுப்பட்டது.

பதட்டத்தில் இருந்த இரு பெண்களுமே தோழியை பார்த்தார்கள் தான்.அவள் கண்ணில் இருந்து நீர் வரவேயில்லை..காயம் பெரிதோ? சிறிதோ? அடிபட்டால் வலிக்குமல்லவ்வா? அழுகாமல் கூட இருந்தால்,இதென்ன பிடிவாதமா? மன இறுக்கமா?-புரியாத நிலையில் அவர்களும் பதட்டத்துடனையே இருக்க,மருத்துவமனையும் வந்துவிட்டது.

இப்போது தான் தற்கொலையோ விபத்தோ,முதலுதவி செய்த பின்னர் போலீசிற்கு தகவல் சொல்லிக்கொள்ள சட்டம் அனுமதி அளித்துவிட்டதே! அதனால் உடனடியாக கைக்காயத்திற்கு மருத்துவம் பார்க்க அறைக்குள் அழைத்து செல்லப்பட்டாள்.

பதட்டத்தில் இருந்த ஷெரின்,”ரேவ்ஸ்,இப்போ தற்கொலை முயற்சிக்கு போலிஸ் கம்பிளைன்ட் பண்ணியே ஆகணுமா? பிரச்சனை ஆகிடாது”-ஆசை ஆசையாய் உரம் போட்டு வளர்த்த நகங்களை(ஹி ஹி) கடித்து துப்பியபடி கேட்கவே,

“அவ மாமாக்கு முதல்ல இன்பார்ம் பண்ணிடலாம்.அதுக்கு மேல அவங்க பொறுப்பு”எனவும்,அதுவே சரியாகப் பட,ரவீந்தர் மனைவி இந்துவிற்கு அழைத்து சுருக்கமாக தெரிவித்துவிட்டாள்.

இந்துவே மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி பேசிவிட்டு,ஷெரினை அழைத்தவள்,”இந்தர் நாளைக்கு மார்னிங் அங்க இருப்பார்.இது நைட் டைம்.ஸோ நீங்களும் இங்கேயே தங்கிடுங்க.ஹாஸ்டல்க்கு நான் தகவல் சொல்லிடறேன்.விஐபி ரூம் புக் பண்ணியிருக்கேன்”விவரத்தை சொன்னவள் பதிலை எதிர்பார்க்காமல் அணைத்துவிட,

“ரேவ்ஸ்..நாம தான் பயந்து சாகறோம்.இந்து சிஸ்டர் எவ்வளவு நிதானமா பேசறாங்க தெரியுமா”ஆச்சர்யத்துடன் பிரமித்தே கூற,

“உனக்கு விவரம் பத்தாது ஷெரின்.ரத்த சொந்தமா இருந்தால்,பதறுவாங்க.யாரோ ஒருத்தி தானே! அதுவும் இந்தர்-க்கு முதல்ல மேரேஜ் பண்ண முடிவு செய்திருந்த பொண்ணாச்சே ப்ரத்யா!! அந்த கோபம் அவங்களுக்கு நிறையவே இருக்கு..”என்றவள்..

“நமக்கும் இதே நிலை தானே!! அடிபட்டுடுச்சுன்னு வீட்டுக்கு தகவல் போனா,பில் கட்டிட்டேன்.வீட்டுக்கு வந்து சேர்-ன்னு மெசேஜ் மட்டும் வரும்.போன் கூட வராது”வெறுப்பாய் பேசியவளின் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமே!!

தன் வீட்டிலையும் அதே நிலை தான் என்பதால் மறுத்துப் பேசாமல்,மருத்துவர் வரும் வரை காத்திருந்தார்கள்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவருடன்,ரேவ்ஸ் செல்ல,ஷெரின் அறைக்குள் நுழைந்து படுத்திருந்த ப்ரத்யாவை பார்த்தாள்.

கையில் சிறு காயம் தான்.தூங்காமலையே விழித்திருந்தாள்.

“ஏன் இப்படி பண்ண ப்ரத்யா”

“............”

“எனக்கு தெரியும்.அந்த அருண் ராஸ்கல் தான் எதுவும் சொல்லியிருப்பான்.பார்ட்டிலருந்து பாதில வந்தப்போவே கவனிச்சேன்”கோபமாய் பொரிந்து தள்ள,

“விடு ஷெரின்.நான் தான் ஏதோ நினைப்பில பண்ணிட்டேன்”

“அவனை சொன்னா மட்டும் பேசு! இவ்வளவு நேரம் நீ எப்படி இருந்த தெரியுமா? இதுக்கு தான் இந்த காதல் கமிட்மென்ட் எல்லாம் வைச்சுக்கக் கூடாதுன்னு சொல்றது..சிம்பிளா டேட்டிங் முடிச்சுட்டு கழட்டி விட்டுடனும்”(அடிப்பாவி மவளே..டேட்டிங்ஆஆஆஆ..மக்கள் அடிக்க போறாங்க)

இப்போதும் அவள் மௌனமாகிவிட,இவள் முறைத்துக்கொண்டிருக்கும் போதே மருந்தின் வீரியத்தில் அவள் தூங்கிவிட்டாள்.

ரேவ்ஸ் வந்து பார்த்தவள்,”பெரிய காயமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க ஷெரின்.ரெண்டு நாள் தங்கிட்டு போக சொல்றார்.அருண்-க்கு கூப்பிட்டு சொல்லிடுவோம்”என்றவள் அவனுக்கு அழைக்க,

“அருண்..ப்ரத்யா”என்று ரேவ்ஸ் சொல்லி முடிக்கக் கூட இல்லை.

“அவ...ளை...அ...வளை..ம்ம்..ம்ம்..யார் ப்ரத்...த்துயா..ஓஓ..என்னோட எ....க்...ஸ் எக்ஸ் லவரா..ச்சீ”என்று குழறலாக பேச,போனை வெறித்தவள்,அதை அணைத்துவிட்டு,

“ட்ரின்க் பண்ணியிருக்கான்.நாளைக்கு பார்த்துக்கட்டும்.நீ பக்கத்து ரூம்ல ரெஸ்ட் எடு.நான் இங்க இருக்கேன்”எனவும் அருணின் மேல் கோபத்துடனையே பக்கத்து அறைக்குள் போனாள்.

அடுத்த நாள் காலை,விழித்தெழுந்த ஷெரின்,அருண் பக்கத்து அறைக்குள் நுழைவதை பார்த்தவள்,குடுகுடுவென்று ஓடி வந்தாள்..

அவன் கதவை திறந்த போதே,இவளும் உள்ளே நுழைந்து அவன் முன்னே நிற்க,அவன் முறைத்து பார்த்தான்.

அதையெல்லாம் கவனியாதவள்,”ஏன்டா..எங்க ட்ரெஸ் இங்க லைட்டா விலகியிருந்தாலும் உத்து உத்துப் பார்த்து கமென்ட் அடிக்க தெரியுதுல்ல”என்று தன் நெஞ்சை காட்டி சொன்னவள்,

அவன் புரியாது முறைக்கவும்,”அதையும் தான்டி,அதுக்குள்ள ஒரு மனசு இருக்கதை ஏன்டா பார்க்க மாட்டேங்கறிங்க?”எனவும் முகம் சிறுக்க,

“உன்கிட்ட நான் பேச வரலை”என்றவன் அவளை தாண்டி ப்ரத்யாவை பார்த்தான்.

அவளும் அவனை பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.நேர்கொண்ட ஆனால் விருப்பமில்லாத வெறித்த பார்வை!!

ரேவ்ஸ் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று எண்ணியவள்,

“போதும் ஷெரின்.நாம கிளம்பலாம்.காலேஜ்-க்கு டைம் ஆகிடுச்சு..வர்றோம் ப்ரத்யா”என்றவள் ஷெரினின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே சென்றாள்.

பல நாள் மனதில் வைத்திருந்ததை கேட்டுவிட்டதால்,நிம்மதியுடனே ஷெரினும் சென்றுவிட,பிரத்யாவின் கைக்காயத்தை பார்வையிட்டவன் மேற்கொண்டு பேச விருப்பமில்லாதது போல,அறையையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

எங்கே யார் இருந்தாலும்,தன்னையே ஆர்வத்துடன் பார்க்கும் அவனின் பார்வையை மட்டும் கண்டு பழகியவளுக்கு,இன்றைய அவனின் செயல் அவளுக்கு காயத்தை தான் ஏற்படுத்தியது.

தன் கையிலிருந்த வாட்சை பார்த்தவன்,”உனக்கு சரியாகிடும்னு நம்பறேன்.பாய்”பட்டும் படாமல் சொல்லிவிட்டு எழுந்திருக்க,

“உட்கார் அருண்.நாம பேசலாம்”-நிதானமாய் கூற,

“நமக்குள்ள இனி பேசிக்க,எதுவும் இல்லைன்னு நினைக்கறேன்”என்றான்.

“அதை நீ மட்டும் முடிவு பண்ணிட முடியாது அருண்.ஒரு ரிலேஷன்ஷிப்ல நாம ரெண்டு பேரும்  இருந்தோம்.இப்போ இல்லைன்னு ஆகும் போதும்,நீ என்னோட முடிவு..ஐ மீன் என் பேச்சையும் நீ கேட்டுத்தான் ஆகணும்”

‘முடியாது’என்று சொல்லத்தான் நினைத்தான்.அவனால் முடியவில்லை..காதலித்து தொலைத்துவிட்டானே!

அமைதியாக அமர்ந்தவன்,”எனக்கு உன் மேல நிறைய கோபம் இருக்கு.அதை வெளிப்படுத்தற அளவுக்கு நீ தகுதியானவ கிடையாதுன்னு அமைதியா இருக்கேன்”என்றான்.

வலித்தது தான்!! பேசட்டும் என்று அமைதிகாத்தாள்.

“அது மட்டுமில்ல..உனக்கு உன் வாழ்க்கையை உன் விருப்பபடி வாழ உரிமையிருக்கு.கொஞ்ச நாள் என் கூட வாழ..இல்லை ஊர் சுற்றவோ..அதுவுமில்லையா என்னை ஏமாற்ற நீ நினைச்சிருக்கலாம்.அது புரியாம ஏமாந்தது என் தப்பு தான்..ஸோ நீ விளக்கம் சொல்லி உன் எனெர்ஜியை வேஸ்ட் செய்யனும்னு இல்லை”

“உன்னை ஏமாத்தினா எனக்கு என்ன கிடைக்கும் அருண்.பணமா? என்கிட்ட இல்லாததா?”

“........”

“அப்போ செக்ஸ்-க்காக உன் பின்னாடி அலைஞ்சேன்னு நினைக்கறியா? அதுக்கும் ஆள் கிடைக்காதுன்னு நினைக்கறியா? பணத்தை வீசி எறிஞ்சா...இல்லை கொஞ்சம் கவர்ச்சியா பேசினா..இதெல்லாம் சுலபமா கிடைச்சிடும்..”(ஒரு காலத்தில இது ஆண்களுக்கான வசனம்..but now??? Its common to both)

உயிராய் காதலித்த காதலியிடம் கேட்க கூடாத வார்த்தைகள் தான் இவை.அடக்கப்பட்ட கோபத்தில் தான் இருந்தான்.பதில் பேசி,மறுமுறை அவளை தற்கொலைக்கு தூண்டிவிடக் கூடாதென்றே அமைதியாய் இருக்க,அவளது பேச்சு அவனை கோபப்படுத்திக் கொண்டேயிருந்தது.

“உன்கிட்ட விளக்கம் சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன்..இனி நமக்குள்ள எந்த உறவும் இருக்க போறதில்ல தான்.ஆனால் நீ,என்னையே நினைச்சிட்டு,குடிச்சு சீரழிஞ்சிடக் கூடாது பார்..அதான்..அதான் சொல்றேன்”

“நான் ஒன்னும்”-மறுக்கப் போனவன்,அவளது பார்வையில் அமைதியாகிவிட்டான்..அமைதியடைந்தான் என்றும் சொல்லலாம்.

“நான் கையை அறுத்துக்கிட்டதுக்கு காரணம் நீ என்னை தப்பா நினைச்சேன்-றதுக்காக இல்லை.அந்த க்ளிபிங்கை நீ மட்டுமில்ல..இன்னும் பல ஆயிரம் பார்த்திருக்காங்க”எனவும்,

சேரை தள்ளியவன்,”வாட்”என்று கோபத்துடன் கத்த,

அதை பொருட்படுத்தாமல்,”படிப்பு செலவுக்காக சிலர்,இந்த மாதிரி செய்யறாங்க..”என்ற உடனே,

அவனது பொறுமை பறக்க,அவளது கழுத்தை பிடிக்க வந்தவன்,”என்னடி விளையாடறியா.படிப்பு செலவுக்காக இப்படி கீழ்த்தரமா இறங்கினேன்னு கதை விடப் போறியா.கொன்னுடுவேன் உன்னை!”என்றவன்,வெறுப்புடன் திரும்பியும் பாராமல் நடக்க,

அவளது நிதானமும் பறக்க“உண்மையாவே,இது படிப்பு செலவுக்காக செய்த வேலை தான்.ஆனால்..அதுல இருக்கது நான் இல்லை”என்று கத்தினாள்.

“என்ன”-என்றபடி திரும்பியவன்,

வேகநடையிட்டு ஓடி வந்து,அவளை எழுப்பி தோளை பிடித்தவன்,”நீ சொல்றது..உண்மை..உண்மை தானே”என்றான் கண்களுக்குள் உயிரை தேக்கி!!

அசராமல் அவனை பார்த்து”உண்மை தான்.ஆனால்..”என்றவளின் வாயை அடைத்தவன்,அவளை இறுக அணைத்து,

“எனக்கு வேறெந்த விளக்கமும் தேவையில்லை”என்றவன் அவள் மறுப்பாய்..எதுவும் சொல்லிவிடுவாளோ..என்று அஞ்சியவனாய் அவளை தன்னுள் புதைத்துக்கொண்டான்.

ஆவேசமான இறுகிய அணைப்பு தான்.ஆனால் மனதிற்கு அமைதி கொடுத்தது.சந்தோஷத்தை கொடுத்தது.மலை உச்சியில் இருந்து குரல் வற்ற கத்திக்கொண்டே இருக்க ஆவல் கொண்டது.

அவனது இதய துடிப்பு பன்மடங்காய் எகிறி குதிக்க,அவனது அணைப்பிலிருந்து விலக நினைத்தாள்.முடியவே இல்லை.

“நேத்துல இருந்து நான் நானாவே இல்லை ப்ரத்யா.நீ வேணும்னே தானே என்னை சாவடிக்க இப்படி பண்ற”என்று இப்போது அவளது முகத்தை நிமிர்த்தி கேட்க,தன் கையை அவள் குறிப்பாய் பார்க்க..

அதில் வருத்தமுற்றவன்,”எதுக்காக நீ இப்படி பண்ண! காலைல போதை தெளிஞ்ச உடனே,பிரஷ் கூட பண்ணலை..ஓடி வந்துட்டேன்”

“ச்சீ”என்று அவள் விலக,

“ஹ ஹா..எனக்கு இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா”என்றவன் மீண்டும் அணைக்க வர,அவனிடமிருந்து எட்டி விலகி,

“இனி நாம பிரண்ட்ஸ் மட்டும் தான்..இல்லை கிளாஸ்மேட் மட்டும் தான்”என்றாள்.

“நான் உன்னை ஒரு நாள் கூட பிரண்டா பார்த்ததே இல்லை ப்ரத்யா..இனியும் எப்படிடி பிரண்டா பார்ப்பேன்”-நெற்றி புருவம் ஏற,கிண்டல் கேலியோடு கேட்க,

“ஐ ஹேட் யூ”என்றாள் என்பதாவது முறையாக!!

இந்த வார்த்தையிலையே அருணிற்கு சார்ஜ் ஏறிவிட்டது

“உன் குழலோடு விளையாடும்
“காற்றாக உருமாறி
“முந்தானைப் படியேறவா”காதோடு பாடியவன்..அவளை விலக்கி..

“என்ன முந்தானையை காணோம்..அட்லீஸ்ட் துப்பட்டா..”என்று அதை தேட அதுவும் கிடைக்காமல் பார்க்க..முறைத்தாள் அவனை..ரசித்தான் அவளை!!


எப்படி நேற்று அவள் உண்மை என்று சொன்னவுடன் விளக்கம் கேட்காமல் கோபத்தை வெளிப்படுத்தாமல் விலகினானோ..அதைப் போலவே இப்போதும் அவளது உண்மை என்ற வார்த்தையில்..வேறெதையும் ஆராயாமல் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான்..இந்த நொடியை கொண்டாடவும் செய்தான்.ஆனால் அவள்?

No comments:

Post a Comment