காணும் யாவும் நீயாக-24

 ஹாய் பிரண்ட்ஸ்..காணும் யாவும் நீயாக கதையின் அடுத்த அத்தியாயம் பகிர்ந்துவிட்டேன்..படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..


காணும் யாவும் நீயாக-24

காணும் யாவும் நீயாக-23

 ஹாய் பிரண்ட்ஸ்..காணும் யாவும் நீயாக கதையின் 23வது அத்தியாயத்தை பதிந்துவிட்டேன்..படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்ஹ்டுகொல்லுங்கள்.நன்றி..


காணும் யாவும் நீயாக

காணும் யாவும் நீயாக-21

 

அத்தியாயம் 21

 

இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்திருந்த நந்தினி,விடிந்ததும் குளித்து தயாராகி விஷ்வாவிற்கு பொன் செய்துவிட்டாள்.

 

நந்தினி தான் அழைக்கிறாள் என்று புரிய,மணியை பார்த்தான்.கடிகாரம் ஆறென்று காட்ட..’இவ விடவே மாட்டா போலையேநொந்துகொண்டு போனை எடுத்து பேசினான்.

 

என்ன விஷயம்?”எரிச்சலோடு கேட்க..

 

ஏன் இப்படி குரல்ல கோபத்தை வைச்சுக்கிட்டே பேசறீங்க விஷ்வா..கொஞ்சமாவது அன்பா பேசலாமே?”என்று அவளும் ஆரம்பிக்க..

 

இப்போ எதுக்கு போன் செய்தேன்னு சொல்றியாஇல்ல போனை வைக்கவா?”எனவும்,

 

போனை வைச்சா உங்களுக்கு தான் நஷ்டம்..மதுவை பற்றி ஆபிஸ்ல விசாரிச்சேன்..என் ரூம்-க்கு வந்தீங்கன்னா நான் கேள்விப்பட்ட விஷயமெல்லாம் சொல்வேன்என்றாள்.

 

என்ன தகவல் கிடைச்சது..போன்லயே சொல்லலாமே நந்தினி..”

 

அது முடியாது..உங்களோட போன் பேசறதுக்கா..காலைலயே குளிச்சு..ரெடியானேன்..வீட்டுக்கு வாங்க..பேசிக்கலாம்என்றவள் போனை வைத்துவிட

 

இந்தப் பெண் எல்லாம் தெரிந்து தான் பேசுகிறாளா? இல்லை வேண்டுமென்றே என் உணர்வுகளை தூண்டி விளையாடப் பார்க்கிறாளா?’சந்தேகத்துடனே படுக்கையைவிட்டு எழுந்துகொள்ள மனமில்லாமல் படுத்திருந்தான்.

 

மணி ஏழரையை தாண்டியதும்,எப்போதும் போல எழுந்து அன்றாட வேலைகளை பார்த்தவன்,அலுவலகத்திற்கு சற்று முன்பாகவே கிளம்பவும்,கிருஷ்ணனும் எதுவும் சந்தேகப்பட்டு கேட்கவில்லை.

 

நேற்று அலுவலகம் செல்லாததால் இன்று விரைவாக போகிறான் என்று நினைத்துக் கொண்டார்.

 

விஷ்வா நேராக சென்றது..நந்தினியின் அப்பார்ட்மென்ட்டிற்கு தான்..தன்னுடைய லொகேஷனை நந்தினி முன்பாகவே ஷேர் செய்திருக்க..விரைவாகவே நந்தினியின் அப்பார்ட்மென்ட்டிற்கு சென்றுவிட்டான்.

 

காலிங் பெல் அடிக்கவும்..யாரென்று கேமராவின் வழியாக பார்த்தவள்,விஷ்வாவை பார்த்ததும் அவசரமாக கதவை திறந்து வழிவிட்டாள்.

 

என்ன சாப்பிடறீங்க?”சந்தோஷமாகவே விசாரிக்கதான் தாமதமாக வந்தும்..கோபத்தைக் காட்டிக்கொள்ளாது சந்தோஷமாக உபசரிப்பவளை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது என்று புரியாமல் தடுமாறித்தான் போனான்.

 

விஷ்வா அமைதியாக இருக்கவும்,”என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டேன்?”திரும்ப கேட்கவும்,

 

டீ..”என்றான்.

 

கிட்சனில் சென்று டீ எடுத்துக்கொண்டு வந்தாள்.

 

வீட்டின் பிரம்மாண்டத்தை ஆராய்ந்த விஷ்வா..நந்தினி கொடுத்த டீயை பருகியவன்,”நீ வாங்கற சம்பளம்,இந்த அப்பார்ட்மென்ட் வாடகைக்கு சரியா இருக்குமே?”எனவும்,

 

வாடகையா..? வேலைக்கு வந்தவுடனே,இந்த அப்பார்மென்ட் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சிட்டோம்..”என்றாள்.

 

நந்தினியின் செல்வ செழிப்பை மறந்துவிட்டு பேசிவிட்டோம் என்று புரிய..”சாரி..உன்னோட உழைப்பிலவர்ற சேலரியில..ரென்ட்-க்கு தங்கியிருப்பென்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்எனவும் நந்தினிக்கும் கோபம் வந்தது.

 

ஆனால் கோபத்தை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டாள்..

 

பதில் பேசாது அமைதியாக இருக்கும் நந்தினியின் மனம் புரிந்தாலும்..தான் பேசியதற்காக..அவளை சமாதானம் செய்யக் கூடாதென்று நினைத்தான்..

 

மது விஷயமா உனக்கு என்ன தகவல் கிடைச்சது?”கேட்கவும்..நந்தினி அமைதியாகவே அமர்ந்திருக்க..

 

நீ என்னை இதுக்காக தான் கூப்பிட்டதா ஞாபகம்என்று நினைவுபடுத்த..

 

என்னை கஷ்டபடுத்தாம,உங்களால பேசவே முடியாதா விஷ்வா..இது தான் உங்க இயல்பா..இல்லை நான்றதுக்காக இப்படி பேசறீங்களா?”கண்ணில் நீரோடு கேட்க..விஷ்வாவிற்கு சங்கடமாகிவிட்டது..

 

நான் இப்படி தான் நந்தினி..எனக்கு ஸ்வீட்டா பேச தெரியாதுஅதோட நீ நெருங்கி வர்றது,நம்ம ரெண்டு பேருக்குமே ஆபத்துஇந்த பேச்சு வேண்டாமேஎனக்கு தேவையான தகவலை சொன்னா..நான் கேட்டுட்டு போயிடுவேன்நமக்குள்ள அடுத்து காண்டாக்ட் இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்எனவும்,

 

மனசு ரொம்ப வலிக்குது விஷ்வா..நீங்க வேணும்னு நான் இறங்கி வர வர,என்னை ரொம்ப காயப்படுத்தறீங்க..”என்றவள்,

 

கண்ணீரை துடைத்துக்கொண்டு..விஷ்வாவை நேர்பார்வையாக பார்த்தவள்..”மது எங்க ஆபிஸ்ல..வேற டீம்ல வேலை செஞ்சிருக்காங்க..வேலைல ரொம்ப திறமையானவங்க..ரொம்ப சோஷியலா எல்லார்கிட்டவும் பழகுவாங்களாம்.ஆனா .”என்றவள்..

 

விஷ்வாவை ஒருகணம் அமைதியாக பார்த்தவள்,”மனசை திடப்படுத்திக்கோங்க விஷ்வா..மதுவுக்கு ஏற்கனவே ஆபிஸ்ல ஒருத்தர்கூட அஃபேர் இருந்திருக்கு..ஒரு சின்ன பிரச்சனைல ரெண்டு பேருக்கும் ப்ரேக்அப் ஆகிடுச்சாம்..

 

கொஞ்ச நாள்ல,வீட்டுல பார்த்த உங்களை கல்யாணம் செய்திருக்காங்க..அப்புறம்…..அவங்க லவ்வை மறக்க முடியாம..அடிக்கடி அந்த பையனோட வெளியேயும் போயிருக்காங்க..

 

அவனை மறக்க முடியாம தான் தற்கொலை செய்துகிட்டதா..மதுவோட பிரன்ட் ஆபிஸ்ல சொல்லியிருக்காங்க..இந்த விஷயம் மதுவோட பேரன்ட்ஸ்-க்கும் தெரியும்னு எனக்கு தோணுது..

 

அந்த பையனும் காதலை மறக்க முடியாம தான்,மது செத்துப் போயிட்டதா ஆபிஸ்ல சொல்லியிருக்கான்மது இறந்த கொஞ்ச நாள்ல,அவனும் ஆபிஸ்விட்டு போயிட்டதா சொல்றாங்க..இவ்வளவு தான் எனக்கு தெரிஞ்சதுஎன்று முடிக்க..விஷ்வாவால் அதை நம்பவே முடியவில்லை.

 

எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தவன்..சிறிது நேரத்தில் தன்னை சரி செய்துகொண்டு,”ஓகே..நான் கிளம்பறேன்எனவும்..

 

சாப்பிட்டு போங்க விஷ்வா..ஆர்டர் பண்ணிட்டேன்என்றாள்.

 

விஷ்வா மறுக்கவும்,”நீங்க எவ்வளவு விலகினாலும்...நான் விலகப் போறதில்ல விஷ்வா..உங்களோட பாஸ்ட் தெரியாம தான் லவ் பண்ணேன்..இப்போ என்னோட விஷ்வா..இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான்னு தெரிஞ்ச பிறகு..எப்படி விலகியிருப்பேன் விஷ்வா

 

என்னோட பீலிங்க்ஸ் உங்களுக்கு புரியுமான்னு தெரியல..ஆனாலும் சொல்றேன்உங்கள இந்த கஷ்டத்தில இருந்து விடுவிச்சு..என்னோட குழந்தை மாதிரி..உங்களை பத்திரமா நெஞ்சுக்குள்ள பொத்தி வைக்கனும்னு தோணுது விஷ்வாஎனவும் விஷ்வா அதிர்ச்சியாக பார்த்திருந்தான்.

 

நந்தினி அதிகம் யோசிக்கவில்லை.

 

விஷ்வாவின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவள்…”நான் யார்கிட்டவும்,இவ்வளவு தாழ்ந்து பேசினதில்ல..உங்ககிட்ட இப்படி பேசறதுக்கு,எனக்கு கொஞ்சம் கூட வருத்தமேயில்ல விஷ்வா..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..அவ்வளவு சீக்கிரம் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு..உங்களை சந்தோஷமா வைச்சுக்கனும்னு ஆசைப்படறேன் விஷ்வா..”என்றெல்லாம் பேசிக்கொண்டே செல்ல..

 

வேண்டாம் நந்தினி..இது சரிப்பட்டு வராது..மதுவை பற்றி நீ கேள்விப்பட்டது உண்மையா..பொய்யான்னு எனக்கு தெரியாது..ஆனா நான் மதுவுக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்..

 

என்னால இன்னொரு கல்யாணத்தைப் பற்றி நினைச்சே பார்க்க முடியாது..நீ உன் மனசை மாத்திக்க..இனி எக்காரணத்தைக் கொண்டும்,உன்னைப் பார்க்க வர மாட்டேன் நந்தினிஎன்று எழுந்துகொண்டவனை பார்த்தவள்..

 

செத்துப் போனவளுக்கு கொடுக்கற மரியாதையை,எனக்கும் கொடுக்கலாமே விஷ்வா..உயிரோட இருக்கற என்னோட காதலை..ஆசைகளை..இப்படி நீங்க சிதைக்கிறது நியாயமா? ஒருவேளை நானும் செத்துப் போயிட்டா..அப்போவாவது என்னோட காதல் புரியுமா?”என்று பிதற்றிக்கொண்டே சென்றவளை அடிக்க கை ஓங்கிவிட்டான் விஷ்வா.

 

நந்தினி பயத்தில் முகம் வெளிற பார்த்திருக்க,கோபத்தை கட்டுப்படுத்த முடியாத விஷ்வா..”இப்போ என்ன தான்டி செய்ய சொல்ற? நீ பேசறதைஎல்லாம் கேட்டுட்டு தலையாட்டி பொம்மையா இருக்க சொல்றியா?”என்று கத்தியவனை..சமாதானம் செய்ய வந்தவளை தடுத்துவிட்டான் விஷ்வா..

 

காதல்..இப்படி கட்டாயப்படுத்தினா எப்படி வரும்..மனசில ஆசை இருந்தாலும்..உன்னோட பிடிவாத குணத்தை பார்க்கும் போது,வெளிப்படுத்த தோணவே தோணாது..உன்னோட இஷ்டத்துக்கு எல்லாத்தையும் உடனுக்குடனே நடத்தி முடிச்சிட முடியாது நந்தினி..

 

“உன்னை பிடிச்சிருக்குன்னு இப்படியே கூட்டிட்டு போனா..என்னோட சொந்தக்காரவங்க என்ன சொல்வாங்க தெரியுமாபொண்டாட்டி செத்துப் போனவுடனே புதுமாப்பிள்ளையாகிட்டான்னு கேலி பண்ணுவாங்க..உன் வீட்டு சைடும் என்ன சொல்வாங்க தெரியுமா..? பணத்தை பார்த்து..பொண்ணை மயக்கிட்டான்னு பேசுவாங்க..ஏற்கனவே இருக்கற கஷ்டத்துல இது வேறையா?”என்று நிறுத்த

 

அப்போ அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னு தான் யோசிக்கிறிங்களா விஷ்வா?”என்று கேட்கவும்,

 

ஆமாம்என்றான்..!

 

அப்போ நாம இவங்க யாரும் நம்மை கண்டுக்காத இடத்துக்கு போயிடலாம் விஷ்வா..நம்ம ரெண்டு பேர்கிட்டவும் படிப்பு இருக்கு..வேலை ஈசியா கிடைக்கும்.யாரோட தொந்தரவும் இல்லாம சந்தோஷமா வாழலாம்

 

நீ சரியான சுயநலவாதி நந்தினிஉன்னோட அப்பா அம்மாவை யோசிச்சு பார்த்தியா?”

 

அவங்களை யோசிக்காம எப்படி இருப்பேன்..நான் ஆயிரம் தப்பு பண்ணாலும்..நான் அவங்களோட பொண்ணு..மன்னிச்சு ஏத்துக்குவாங்க..இப்போ பிரச்சனை செய்யறது நீங்க தான்..!மனசில ஆசை இருந்தும்..ஊர்ல எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு..கோழைத்தனமா பேசிட்டு இருக்காது நீங்க தான் விஷ்வா..

 

“எனக்கு வரப்போற கணவன் ரொம்ப தைரியமா இருக்கணும்னு நினைச்சேன்..யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லன்னு..பிடிவாதமா என்னை கைபிடிக்கறவனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..என்னோட ஆசைக்கு..எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கோழை விஷ்வா நீங்க..உங்களை போய் லவ் பண்ணத நினைச்சாலே..எனக்கு அசிங்கமா இருக்கு..”என்று நிதானம் தவறி வார்த்தைகளை விட்டவளைஆத்திரம் குறையாமல் பார்த்தான்.

 

இப்படி பார்த்தா..தைரியமான ஆளா நீங்க..? எனக்கு இருக்க தைரியம் கூட உங்களுக்கு இல்லை..அதை ஒத்துக்க மனசில்லாம தானே..ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..இதுல இன்னொரு கல்யாணம் எப்படின்னு டிராமா போட்டுட்டு இருக்கீங்க..?”என்று மேலும் மேலும் கோபத்தை தூண்ட..

 

நான் தைரியமானவன்னு நிரூபிக்க ரொம்ப நேரம் ஆகிடாது நந்தினி..ஆனால் அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமானதா இருக்கும்..இதை இப்படியே விட்டுடலாம்..நீ ஆசைப்பட்ட மாதிரி,தைரியமான பையனா பார்த்து,லவ் பண்ணி..கல்யாணம் பண்ணிக்க..உன்னோட உதவிக்கு ரொம்ப நன்றிஎன்று கிளம்பியவன்..கதவை திறக்க முயன்றான்..

 

என்னோட பர்மிஷன் இல்லாம வெளில போக முடியாது விஷ்வா..எனக்கு இன்னைக்கே..இப்போவே கட் அண்ட் ரைட்டா ஒரு பதில் வேணும்..”

 

நான் தான் சொல்லிட்டனே?”என்றவனிடம்,

 

இதுக்கு மேல எப்படி புரிய வைக்கறதுன்னே எனக்கு தெரியல விஷ்வா..”என்று சோர்ந்து போனாள்.

 

நந்தினியை பார்க்க விஷ்வாவிற்கும் பாவமாக தான் இருந்தது.

 

ஆனால் அதற்காக மனதை மாற்றிக்கொள்ள விஷ்வா விரும்பவில்லை.

 

எனக்கு மட்டும் பழசெல்லாம் ஞாபகம் வந்துட்டா..அப்போ என்ன ஆகும்னு யோசி நந்தினி..மதுவை இப்போ மறந்துட்டேன்ஒருவேளை பழசெல்லாம் ஞாபகம் வர்ற சமயம்..உன்னோட ஞாபகங்கள் எல்லாம் மறந்து போயிட்டாஎன்ன செய்ய முடியும் நந்தினி..?மதுவோட நினைப்பில..உன்னை ஒதுக்கி வைச்சா..நம்ம வாழ்க்கையே நரகமாகிடாதா நந்தினி..”என்று கேட்கவும்நந்தினியாலும் பேச முடியவில்லை.

 

கவலையோடு விஷ்வாவையே பார்த்திருக்க..விஷ்வாவிற்கு பரிதாபமாக இருந்தது.

 

எனக்கு யோசிக்க டைம் கொடு நந்தினி..முதல்ல மதுவோட பிரச்னையை முடிச்சிடறேன்..அதுக்கப்புறம் நான் நம்மைப் பற்றி யோசிக்கிறேன்..இப்போ கதவை திறந்து விடுஎன்று இறங்கி வர

 

நம்மைப்பற்றிஎன்ற வார்த்தை நந்தினியையும் சமாதானம் செய்ய,எதிர்பேச்சு பேசாமல் கதவை திறந்துவிட்டாள்.