காணும் யாவும் நீயாக..15

 காணும் யாவும் நீயாக..நிஷா லக்ஷ்மி 

அத்தியாயம் 15

 

அலுவலகம் விட்டு,நேராக வீட்டுக்கு வந்த பிரதாப்,சோபாவில் படுத்து கண் மூடியிருந்த தம்பியை எழுப்பியவன்," உன்னோட பிரெண்ட் கிட்ட வீடு பத்தி கேட்டியா விஷ்வா"என்று கேட்கவும்,

 

கிச்சனிலிருந்து வெளிய வந்த ராதிகா, "அவன் மட்டும் தனியா,ஊருக்கு போறேன்னு சொல்றான்.நமக்கு தொந்தரவா இருக்க விரும்பலையாம்" எனவும்,

 

"நீ ஊருக்கு போகவே கூடாதுன்னு தானே,என் கூடவே வச்சிருக்கேன் விஷ்வா.காலைல கிளம்பும் போதும்,ஊருக்கு போக வேண்டாம்னு தான் சொல்லிட்டு போனேன்..இப்போ மறுபடியும்,நீ அங்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம் விஷவா."என்று கோபமாக கேட்க,,

 

 "இனி எது நடந்தாலும்,நானே பேஸ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் பிரதாப்.என் முடிவில் நீ தலையிடாதே.." என்றவன்,அறைக்குள் சென்று ரெடியாக வைத்திருந்த பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

 

 இப்படி உடனடியாக கிளம்புவான் என்று எதிர்பாராத பிரதாப்,"அப்போ இவ்வளவு நாளா உன்னை பார்த்துக்கிட்ட,நான் முட்டாளா விஷ்வா" இயலாமை கலந்த கோபத்துடன் கேட்க,

 

"எல்லா நேரமும் என்னை..நீ பாதுகாக்க முடியாது பிரதாப்.என்னோட பிரச்சனைகளை நான்தான் பேஸ் பண்ணி ஆகணும்"என்றவன்,

 

நீ முன்னாடியே எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லியிருக்கலாம்.இப்ப பாரு...தேவையில்லாம ஒரு பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து,அவங்க குடும்பத்து முன்னாடி அசிங்கப்பட்டு நிற்கறோம்"வருத்தம் கலந்த,கோபத்தில் பேசவும்,

 

"உனக்கு இன்னொரு லைஃப் அமைஞ்சா,நல்லதுன்னு யோசிச்சேன் விஷ்வா"என்றான்.

 

 "எனக்கு நல்லது..ஓகே..ஆனா  அந்த பொண்ணுக்கு..?"என்ற கேள்வியுடன் நிறுத்தவும்,

 

"அந்த பொண்ணுக்கும் நல்லதுதான்...உன்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை,எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான்.."என்றவன்,

 

"உன்னோட முதல் கல்யாணம்,ரொம்ப சீக்கிரம் முடிஞ்சு போச்சு.அதிகபட்சம் ஒரு இருபது நாள் கூட, நீ மது கூட வாழல..அப்படி இருக்கும்போது,நீ காலம் முழுக்க தனியா வாழணும்னு என்ன அவசியம்..?

 

"அதனாலதான்  நந்தினி உன் கிட்ட லவ் சொல்லும் போது,நான் எதுவும் காட்டிக்கல.." எனவும்,

 

சோகம் கலந்த புன்னகையுடன்,"ஒருவேளை நானும் நந்தினியை லவ் பண்ணி..எங்களுக்குள்ள கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சிருந்தா, என்ன ஆகியிருக்கும்..யோசி பிரதாப்..

 

"அப்போ உண்மை தெரிஞ்சு,எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு, கல்யாணமும் நின்னு போயிருக்கும்.இந்த அசிங்கமெல்லாம் நமக்கு  தேவையா..? என்றவன்,

 

பிரதாப்பின் மனம் வாடுவதை உணர்ந்து,"நீ என் உடம்புக்கு,எதுவும் ஆகிடக்கூடாதுன்னு தான்..எல்லாத்தையும் மறச்சேன்னு எனக்கு புரியுது பிரதாப்...உன்னை குற்றவாளியா பார்க்கக் கூட நான் விரும்பல..கிளம்புறேன் பிரதாப்எனவும்,

 

ஒரு அரை மணி நேரம் கழிச்சு போ விஷ்வாஎன்றாள் ராதிகா.

 

அரை மணி நேரத்துல,என்ன ஆகப்போகுது ராதிகாஎன்று விஷ்வா கேட்க,

 

இன்னும் அரை மணி நேரத்துல,உன்னோட அப்பா அம்மா வந்திடுவாங்க.அவங்களோடவே நீ போய்டுஎனவும் பிரதாப் மனைவியைத் திட்டினான்.

 

அவங்கள எதுக்கு வர சொன்ன?”என்று கேட்கவும்,

 

எல்லாம் காரணமாகத்தான் பிரதாப்.நம்மை சுற்றி நடக்கிற விஷயங்கள், உனக்கும் தெரியும்.விஷ்வாவை தனியா எங்கேயும் அனுப்ப முடியாது. அதனாலதான் மாமா அத்தையை வர சொன்னேன்என்றவள்,விஷ்வாவின் பேகை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று வைத்து விட்டு வந்தாள்.

 

விஷ்வா இயலாமையில் அண்ணனை பார்க்க,பிரதாப்போ அம்மாவை எப்படி சமாளிப்பது என்று புரியாமல்,தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

 

ராதிகா..மாமா,அத்தை வருகைக்காக டீ போட்டு ரெடியாக காத்திருந்தாள்.

 

 ராணி,மருமகளுக்கு போன் செய்யவும்,”எங்க இருக்கீங்க அத்தை,”என்று கேட்டாள்.

 

வீட்டுக்கு வெளியில நிற்கிறோம் ராதிகா..நீயோ..இல்ல விஷ்வாவோ வந்து கூட்டிட்டு போங்கஎனவும் ராதிகாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதாப்,தான் சென்று அம்மா அப்பாவை அழைத்து வந்தான்.

 

கண்ணீரை அடக்க முடியாமல்,ராணி தவிப்புடன் நடந்து வர,அம்மாவைப் பார்த்தவுடன் விஷ்வாவிற்கு தன்னாலேயே கண் கலங்கியது.அதை மறைத்துக் கொள்ள அவன் திரும்பவும்,ராஜா என்று மகனின் கையைப் பிடித்து தனதருகே அமர வைத்துக் கொண்டார் ராணி.

 

விஷ்வா சற்றும் யோசிக்காமல்,அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டான்.

 

கிருஷ்ணனோ சின்ன மகனே பார்த்துக்கொண்டே,பெரிய மகனிடம் கேள்வி கேட்டார்.

 

இவ்வளவு நடந்திருக்கு....எங்ககிட்ட எதுவுமே ஏன் சொல்லல பிரதாப்.உங்க இஷ்டப்படி எல்லாத்தையும் செஞ்சுட்டு,இப்போ இப்படி அசிங்கப்பட்டு நிற்கறது நல்லாவா இருக்கு..?

 

அதுலயும் ஒருத்தர் வீட்டை விட்டு போங்கண்ணு..சொல்ற அளவுக்கா,நம்ம நிலைமை இருக்கு..?”என்று பெரிய மகனிடம்,தன மனக்கவலையை வெளிப்படுத்த,தன் மேல் தவறு இருந்ததால் எதுவும் பேச முடியாமல்,அமைதியாக நின்றான்.

 

ராதிகாவிடம் எதுவும் கேட்க முடியாத கிருஷ்ணன்,சின்ன மகனிடம்நீ கிளம்பு விஷ்வா..நம்ம வீட்டுக்கு போகலாம்எனவும்,கலங்கியிருந்த  கண்ணை துடைத்துக்கொண்ட விஷ்வா கிளம்பவும்,

 

அவர்களை தடுத்த ராதிகாஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.. அதுக்குள்ள யாரும்,..நம்மளை கழுத்தைப் பிடிச்சு,வெளியில தள்ள போறதில்லஎன்றவள் இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

 

அங்கு இருப்பதே கிருஷ்ணனுக்கு சுத்தமாக பிடிக்காததால்நாங்க ஹோட்டல்ல தங்கிக்கறோம்எனவும்,

 

விஷ்வாவை அழைச்சிட்டு போறதுக்கு மட்டுமா மாமா,உங்களை இவ்வளவு தூரம்,வர சொன்னேன்..பிரச்சினை என்னன்னு தெளிவா உங்ககிட்ட சொல்லியாச்சு.

 

அதுக்கான தீர்வு என்னன்னு இங்க இருந்தே பாருங்க..ஊருக்கு போனா அங்க இருக்க பிரச்சனைகளையும் சமாளிக்கணும்..புதுசா கிளம்பியிருக்கிற பிரச்சனையும் சமாளிக்கணும்னா,அது முடியாது மாமா..

 

அதனால கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்கஎனவும்,கிருஷ்ணாவும் யோசித்தார்.

 

ஆனால் அவரால் சரவணன் வீட்டில்..நீண்ட நேரம் இருக்க முடியாது என்று மட்டும் உறுதியாக தோன்றியது..என்னதான் தவறு தன் மகன்கள் மேல் இருந்தாலும்,பாதிக்கப்பட்டது சரவணனின் மகள் என்றாலும்,மகன்களை அவமானப்படுத்தியவர்களின் வீட்டில் அவரால் இருக்க முடியவில்லை.

 

அப்போ நீங்களும் எங்களோட,ஹோட்டலுக்கு வாங்க..ஒரு ரெண்டு நாள் ஒண்ணா இருந்து,என்னன்னு பேசி முடிச்சுட்டு கிளம்புவோம்என்றார்.

 

பிரதாப்பிற்கும்,அதுதான் சரி என்று தோன்றியது.

 

விஷ்வா மறுப்பு தெரிவிக்கும் முன்,”ஹோட்டலுக்கே போகலாம்என்றான்.

 

ஒருவழியாக அனைவரும் கிளம்பி ஹோட்டலுக்கு செல்ல,இவர்கள் கிளம்புவதை தங்கள் வீட்டு கேமராவிலிருந்து மீனாட்சி கவனித்துக் கொண்டுதான் இருந்தார்..

 

எல்லாம் நன்மைக்கே என்று கடவுளை வேண்டிவிட்டு,நந்தினியின் அறைக்கு வந்தவர்,நந்தினி எதையுமே சாப்பிடாமல்,அப்படியே வைத்து இருப்பதை பார்த்ததும்,தட்டை எடுத்துக் கொண்டு நந்தினியின் அருகே வந்தார்.

 

எனக்கு வேண்டாம்மாஎன்று நந்தினி சாப்பிட மறுக்கவும்,

 

இப்ப என்ன கெட்டுப் போச்சுன்னு,நீ இப்படி உட்கார்ந்துட்டு இருக்க நந்தினி..நம்ம நல்ல நேரம் தான்,கடவுள் நம்மளை காப்பாத்தியிருக்கார்.இதே..நிலைமை கை மீறிப் போனதுக்கப்புறம், நமக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா,அந்த சூழ்நிலையை நம்மளால ஹேண்டில் பண்ணி இருக்கவே முடியாது நந்தினிஎன்றவர் உணவை எடுத்து நந்தினியின் வாயில் வைக்கவும்,மறுத்தால் அதற்கு ஏதாவது அம்மா சொல்லுவார் என்பதால்,வேறு வழியில்லாமல் உணவை வாங்கிக் கொண்டாள்.

 

நீ..உன்னோட பிடிவாத குணத்தை கொஞ்சம் மாத்திக்கோ நந்தினி.இந்த முறை நீ தப்பிச்சுட்ட..எல்லா முறையும்,கடவுள் நம்மளை காப்பாத்துவார்னு சொல்ல முடியாது.புரிஞ்சு நடந்துக்கோஎன்று உணவை ஊட்டி..முடித்துவிட்டு சென்று விடவும்,நந்தினி கண்ணை மூடி அமர்ந்தாள்.

 

நிச்சயம் விஷ்வாவை,தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதை தீர்க்கமாக உணர்ந்தாள்.

 

விஷ்வாவின் நினைவிலிருந்து மீள,தன்னிடம் இருப்பது ஒரே ஒரு வழி தான் என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது.

 

படிப்பை முடிக்கப் போகிறோம்..ஏதாவது வேலைக்கு சென்றால் தேவையில்லாத நினைவுகளிலிருந்து மீண்டு விடலாம் என்று எண்ணி போனை எடுத்து,அவள் சில கம்பெனிகளில் தன்னுடைய சிவி-யை அனுப்பி வைத்தாள்.

 

அவளே எதிர்பாராத விதமாக,அன்று மாலையே இண்டர்வியூக்கு,அழைப்பு வர,கவனத்தை திசை திருப்பி,சந்தோசத்துடன் ஆன்லைன் தேர்வை நல்லபடியாகவே முடித்தாள்.

 

உடனடியாக தேர்வு முடிவும் வந்துவிட,முதல் கட்ட தேர்வில் நந்தினி தேர்வாகி இருக்க,அடுத்தகட்டமாக,நேரடி இன்டர்வியூக்கான அழைப்பும், அவளுக்கு உடனடியாக வந்துவிட்டது.

 

அதை தன் அம்மாவிடம் சென்று பகிர்ந்து கொள்ளவும்,மதியமிருந்த மகளுக்கும்,இப்போதிருக்கும் மகளுக்கும் உள்ள வேறுபாடு தெரிய மகளிடம்,”என்ன கம்பெனிஎன்று விசாரித்தார்.

 

அவள் கம்பெனி பெயரை சொல்லவும்,”அப்பாகிட்ட கேட்டு சொல்றேன் என்றவர்,உடனடியாக சரவணனுக்கு ஃபோன் செய்து விவரத்தை கூறினார்.

 

இது நல்ல விஷயம் ஆச்சே..இப்போ நந்தினி இருக்கற நிலையில,நம்மளால கல்யாணம் விஷயத்தையும் பேச முடியாது. அதனால கொஞ்ச நாளைக்கு வேலைக்கு அனுப்பலாம்..”என்றவர்,

 

நாளைக்கு டிரைவர் கூட போயிட்டு வரட்டும் நல்லதுதான்என்றார்.

 

 சரிங்கஎன்றவர்,நந்தினியிடமும் விவரத்தை பகிர்ந்துகொள்ள,நந்தினி சந்தோஷப்பட்டாலும்,மனதின் ஓரம் விஷ்வாவின் நினைவுகள்,அவளை தொந்தரவு செய்து கொண்டுதான் இருந்தது.

 

தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டவள் அம்மாவிடம்,”நான் இப்போ கிளம்பினால் தான்மா,நைட்டு ஹோட்டல்ல ரெஸ்ட் எடுத்துட்டு,காலைல பிரஷா போக முடியும்எனவும் மீனாக்ஷிக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

 

நானும் கூட வரேன்என்றவர்,கணவரிடமும் விபரத்தை கூறிவிட்டு கிளம்பினார்.

 

வழியில் செல்லும் போது,கம்பெனியை பற்றி தான் சேகரித்த விவரங்களை அம்மாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

 

மீனாக்ஷிக்கும் மகளின் பதிலில்,நல்ல கம்பெனி என்ற புரிதல் வர,ஒரு வருடம் மட்டும் வேறு கம்பெனியில் வேலை செய்யட்டும்..அடுத்து தங்கள் கம்பெனியை நிர்வகிக்க பழகி கொள்ளட்டும் என்று திட்டமிட்டபடியே சென்றார்.

 

****

ஹோட்டலில் தங்கி விட்ட பிரதாப் குடும்பத்தினர் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.யாராலும் எதுவும் பேச முடியவில்லை..

 

ஏதாவது பேசினால்,விஷ்வாவின் மனம் காயப்பட்டு விடுமோ என்றே அனைவரும் அமைதியாக இருக்க..மாமாவிடம் பேசவேண்டும் என்று நினைத்த ராதிகா,கணவனிடம்நீங்க ரெண்டு பேரும்,வெளில போய் சாப்பாடு வாங்கிட்டு வாங்க.இந்த ஹோட்டல்ல விலை ரொம்ப அதிகம் என்று கூறவும்,பிரதாப்பும் புரிந்து கொண்டவன்,விஷ்வாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

 

நீயும் இப்படி எங்களை ஏமாத்துவேன்னு நினைக்கல ராதிகா..?”ராணி கோபமாக கேட்கவும்,

 

எப்படி சொல்றதுன்னு தெரியலத்தை..விஷ்வாக்கு கல்யாணம் நடந்தால், நல்லதுன்னு நாங்க நினைச்சோம்..ஆனா மது இப்படி..ஆவியா வந்து, எங்க எதிர்ல நிற்பான்னு,நாங்க யாருமே நினைச்சுப் பார்க்கலத்தை..

 

விஷ்வாக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்தா...அவன் எப்படி வேணா நடந்துக்குவான்..குறிப்பா மதுவோட ஆவி,விஷ்வா கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சா,அவ மேல இருக்க காதல்ல, உயிரை விடுவேன்னு கூட சொல்ல வாய்ப்பிருக்கு..எனவும்,ராணி மிகவும் பயந்து விட்டார்.

 

அவளை நாம எதுவுமே செய்யலையே ராதிகா.எதுக்கு தற்கொலை பண்ணிகிட்டான்னு,இன்னும் முழு விபரமும் கிடைக்கலையே..? நாம ஏதாவது செஞ்சு,அதனால மது இறந்திருந்தா..இப்படி நம்மளை பயமுறுத்தறதுல அர்த்தம் இருக்கு..விஷ்வாவையும் கொன்னுடுவேன்னு எப்படி அவளால் சொல்ல முடியுதுஎன்று பயத்தில் அழுதவர்,

 

ஏதாவது பண்ணனும்-ங்கஎன்று கணவரிடம் கூறவும்,

 

எனக்கு இந்த ஆவி,பேய்,பிசாசுகள் மேலெல்லாம்,சுத்தமா நம்பிக்கையே இல்லை ராணி..நீங்க சொல்றதெல்லாம் கேட்கும் போது.. எனக்கு உங்கமேலையே நம்பிக்கை வரல..அப்படி இருக்கும்போது நான் என்ன செய்வேன்னு எதிர்பார்க்கற..?”என்று கேட்கவும் கணவரை முறைத்தவர்,

 

 மருமகளிடம்,”அவகிட்ட நீ எடுத்துச் சொல்லியிருக்கலாமே ராதிகா எனவும்,

 

மாமியாரை முறைத்தவள்,”பேச்சுவார்த்தை நடத்த அவ ஒண்ணும் உயிரோட இல்லத்தை.அவகிட்ட போய் ஆர்கியூமென்ட் பண்ணிட்டு இருக்க முடியாது..அவ கண் முன்னாடி வந்தாலே,என்ன நடக்குதுன்னு கூட உணரமுடியல..மனசை கட்டுப்படுத்தி,அவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறாஎன்றவள்,

 

இப்ப கூட மது,நம்ம கூடவே இருக்க மாதிரி,எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு எனவும்,

 

வேண்டுமென்றேஒரு நிமிஷம்..எதுவும் பேசாம அமைதியாக இருங்கஎன்றாள்.

 

அந்த ஒரு நிமிட அமைதியே, ராணிக்கு அதிகம் பயம் கொடுத்தது.

 

மாமனாரும்,மருமகளும் ராணியை பார்த்து சிரிக்கவும்,தன்னை காமெடி பீசாக்கிவிட்டர்கள் என்று புரிய..மருமகளை திட்ட ஆரம்பித்தார்.

 

ராதிகாவும் எதிர்த்து பேசாமல்,சிரித்துக்கொண்டே அவர் அர்ச்சிப்பதை கேட்டுக் கொண்டிருக்க..பிரதாப்பும்,விஷ்வாவும் உணவுகளோடு வந்துவிட ராணி திட்டுவதை நிறுத்தினார்.

 

பிரதாப்பிடம் கிருஷ்ணன்,”நாங்க விஷ்வாவை கூட்டிட்டு கிளம்பறோம் பிரதாப்என்றார்.

 

என் மேல நம்பிக்கை இல்லையாப்பாஎன்று பிரதாப் கேட்க,மகனை சமாதானம் செய்தார் ராணி..

 

இப்ப நடக்கற விஷயமே வேற பிரதாப்..நம்ம ஊருக்கு போனா தான்.. ஏதாவது கோவில் குளம்னு போய்,பிரச்சனையை தீர்க்க முடியும்எனவும்,

 

 விஷ்வாவும்,”இங்க இருக்கது சரி வராதும்மா..நீ சொல்றபடி,நம்ம ஊருக்கே போயிடலாம்..அங்க போனாலாவது எனக்கு பழச்செல்லாம் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்எனவும் பிரதாப்பால் அதற்கு மேல் செல்ல வேண்டாமென்று மறுக்க முடியவில்லை.

 

அரைமனதுடன் சம்மதிக்க..மறுநாள் விடியலிலையே..அப்பா,அம்மாவுடன் விஷ்வா,தன் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டான்.