kaanum yaavum neeyaaga-1

 காணும் யாவும் நீயாக..!

அத்தியாயம் 1

அதுவொரு அழகிய மாலை நேரம்!

கோடைகாலத்து வெப்பத்தை தணிக்க,அடைமழை பெய்து கொண்டிருந்தது.

ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி,அண்ணி கொடுத்த காபியை அருந்திக் கொண்டிருந்தான் விஷ்வா..!

யோசனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின்,தோளில் கை வைத்த,விஷ்வாவின் அண்ணன்,பிரதாப்,”ரொம்ப ஆழமான யோசனை போலிருக்குகேட்டபடி,தானும் கையில் காபி கோப்பையோடு அருகில் நின்றான்.

எல்லாம் நம்ம வீட்டைப் பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன் பிரதாப்..இந்நேரம் நம்ம வீட்டுல இருந்தா..எவ்வளவு ஜாலியா இருக்கும்.அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன்எனவும்,

நீ இங்க வந்து,ரெண்டு நாள் கூட ஆகல விஷ்வா..நேத்து நைட் தான்,இங்க வந்து இறங்கியிருக்க...!அதுக்குள்ள இப்படி போர் அடிக்குதுன்னு சொன்னா,உன்னோட அண்ணி என்ன நினைப்பா..? உன்ன சரியா கவனிக்கலைன்னு நினைச்சுட்டு,நீ இப்படி பேசறேன்னு நினைக்க மாட்டாளா..?”என்றான் வருத்தத்துடன்..!

ராதிகா மேல எல்லாம் குறை சொல்ல முடியுமாடா..எப்பவும் என்னோட பெஸ்ட்டின்னா அது ராதிகா தான்.உன்ன விட,அவங்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

நான் அம்மாவை மிஸ் பண்றதா தான் சொன்னேன்.அவங்களும் நம்ம கூட வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல..அப்பாவை கவனிச்சுக்கணும்னு அங்கேயே இருந்துட்டாங்க..”எனவும்,

அடுத்த முறை அம்மா,அப்பா ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துடறேன்..போதுமா..பீலிங்க்ஸ் படம் ஓட்டாம,கொஞ்சம் நார்மலுக்கு வாபிரதாப் அதட்டவும்,

ம்ம்ம்என்றவன்,

நீ ஏன் இப்படி ஊர் ஊரா அலையற...ஒரு ஊர்ல உருப்படியா வேலை செய்யாம,ஷிப்ட் ஆகிட்டே இருக்க..?”எனவும்,

ஒரே இடத்துல வேலை செஞ்சுட்டு இருந்தா,மூளை மழுங்கிப் போயிடும்டா..அது தான் காரணம்..அதோட ஒரு கம்பெனிய விட,இன்னொரு கம்பெனில நல்ல சேலரி தராங்க..வேறென்ன வேணும்என்றான்.

எனக்கு என்னவோ,நீ இப்படி ஷிப்ட் ஆகிட்டே இருக்கது,சுத்தமா பிடிக்கல..அம்மா,அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னா,உன்னால பார்க்கக் கூட வர முடிய மாட்டேங்குதுஎன்று ஆரம்பித்தவனிடம்,

அதான் அவங்களை பக்கத்துல இருந்தே கவனிக்க,நீ இருக்கியேடா..அந்த தைரியத்துல தான்,நானும் இப்படி ஊர் சுத்திட்டு இருக்கேன்..”என்றவன்,

வெளியே ராதிகா வருகிறாளா என்று பார்த்தவன்,”ராதிகா என்மேல ரொம்ப கோபமா இருக்கா..இப்போ குழந்தை வேண்டாம்னு,நான் தான் தள்ளிப் போட்டுட்டு வரேன்.அவளுக்கு அதுல ரொம்ப கோபம்..!!

நம்ம ஊர் பக்கம் இருந்தா,சொந்தக்காரவங்க,ஏதாவது கேட்டு டார்ச்சர் பண்ணிட்டே இருக்காங்க..அவளால அதையெல்லாம் தாங்கிக்க முடியாது விஷ்வா..அவ உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார்.ஏற்கனவே ரெண்டு தடவை அபார்ஷன் ஆகிடுச்சு..!

இனி அடுத்ததுன்னா,அவ உடம்பு தாங்கனும்லடா..நான் சொன்னா அவளே புரிஞ்சுக்க மாட்டேங்கறா..!!எனக்கு ராதிகா தான் ரொம்ப முக்கியம் விஷ்வா..அவளுக்காக தான் இதெல்லாம் செய்யறேன்எனவும்,விஷ்வாவும் புரிதலின் அர்த்தமாய் சிரித்தான்.

ராதிகாவின் கொலுசொலி சத்தம் கேட்கவும் அண்ணன்,தம்பி அமைதியாகிக்கொள்ள,உள்ளே வந்த ராதிகா..”அப்படியென்ன தான் ரகசியம் பேசுவிங்களோ..!நான் இந்த பக்கம் வந்தவுடனே,அமைதியாகிடறீங்கசிரித்துக்கொண்டே கேட்கவும்,

நீ தான்,அவனோட பெஸ்ட்டின்னு சொல்லிட்டு இருந்தான்..நீயும் இல்லைன்னா,இங்க இருக்கவே முடியாதுன்னு புலம்பிட்டு இருக்கான்.அம்மா ஞாபகம் வேற வந்துடுச்சாம்பேசியதை அப்படியே கூறிவிட,

விஷ்வாவுக்கு அம்மான்னா உயிர்..எப்பவும் அவங்க நினைப்பு தான்என்றவள்,

உன்னோட உடம்பு சரியாகற வரைக்கும்,நீ ஊருக்கு போறதைப் பற்றியே யோசிக்கக் கூடாது விஷ்வா..உன்ன முழுசா தேற்றி அனுப்பறேன்னு,என்னோட மாமியார்கிட்ட சவால் விட்டுட்டு வந்திருக்கேன்.நீ எதுவும் இடையிலையே போய்,சொதப்பி வைச்சிடாதப்பாகெஞ்சவும்,

உனக்காக நான் இங்கேயே இருக்கேன்என்றவன்,

ரெண்டு மாசத்துக்கு கிட்சன் பொறுப்பை நான் ஏத்துக்கட்டுமாஎன்று கேட்கவும்,

எனக்கு நீ ஹெல்ப்பா இருந்தா ஓகே..நீயே எல்லாம் செய்வேன்னா வேண்டாம்..அப்புறம் உங்கம்மா,உடம்பு முடியாத பையனை வேலை வாங்கினேன்னு,சண்டைக்கு வருவாங்க.அவங்களை சமாளிக்க என்னால முடியாதுஎன்று எதையோ நினைத்தாற்போல் தலையை உலுக்கிக் கொண்டாள்.

எந்த வீட்டுலையும் மாமியார்,மருமகளுக்கு ஒத்துப் போறதில்லபொதுவாய் சொன்ன விஷ்வா..

நைட் டிபனுக்கு நான் ஹெல்ப் பண்றேன்..எனக்கு இப்போ கை,கால் வலி எதுவுமே இல்ல..ஓரளவுக்கு வேகமாவே நடக்க முடியுது.ரெண்டு மாசம் ஹாஸ்பிட்டல்ல..எதுவும் செய்யாம இருந்ததே போதும்..இனியாவது கொஞ்சம் ஆக்டிவா இருக்கேன்எனவும்,

வா போகலாம்..”என்று ராதிகா கிட்சனிற்கு செல்லவும்,விஷ்வாவும் பின்னேயே சென்றான்.

பிரதாப்பிற்கு போன் வரவும்,எடுத்து பேசிவிட்டு,போனை வைக்கவும்யார்டாவிஷ்வா கேட்கவும்,

எம்டி தான்..வீட்டுக்கு வர சொல்றார்.அக்கவுன்ட்ஸ்ல ஏதோ டவுட்டாம்எனவும்,

ரொம்ப சிக்கல்ல வந்து மாட்டியிருக்க பிரதாப்...எம்டியோட கெஸ்ட் ஹவுஸ்ல இருந்தா,எப்படி உன்னை நிம்மதியா தூங்க விடுவார்..நீ வெளிலையாவது வீடு பார்த்திருக்கலாம்எரிச்சலோடு பேச,

கொடுக்கற காசுக்கு வேலை வாங்கறார்..அதோட நானும் இங்க புதுசு..எனக்கு தெரியாத விஷயங்களையும் பொறுமையா எடுத்து சொல்லி,புரிய வைக்கிறார்.உண்மையை சொல்லணும்னா,இனி நான் வேற ஊருக்கு ஷிப்ட் ஆகவே போறதில்ல..அந்த அளவுக்கு மனுஷன்,நல்லவரா இருக்கார்பாராட்டுப் பத்திரம் வாசித்தவன்,

நான் போயிட்டு வரேன்..ராதிகாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு,அவளோட வேலையை அதிகமாக்கிடாததம்பியை எச்சரித்துவிட்டு,மனைவியிடமும் கூறிக்கொண்டு,பக்கத்திலிருந்த எம்டி சரவணின் வீட்டிற்கு சென்றான்.

இனி இவன் திரும்பி வர பத்து மணியாகுமா ராதிகாஎனவும்,

ஆமாம்..ஆனால் அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட,சரவணன் சார்,கூட வைச்சுக்க மாட்டார்..அவரே மறந்தாலும்,அவங்க வைஃப் ஞாபகபப்படுத்தி,அனுப்பி வைச்சிடுவாங்கஎனவும்,

நீயே அவங்களைப் பற்றி நல்லபடி சொன்னா,அப்போ நல்லவங்களா தான் இருப்பாங்க..நானும் டைம் இருக்கும் போது,அவரை போய் பார்க்கிறேன்என்றான்.

அவர் காலேஜ்லையே வேகன்சி இருக்காம் விஷ்வா.நீ ஏன் ட்ரை பண்ணக் கூடாது..நல்ல சேலரி பேகேஜ் கொடுக்கறாங்க

எனக்கு நம்ம ஊர் பக்கம் வேலை வேணும்.அம்மா,அப்பா கூட இருக்கணும்..அதை விட,இந்த சேலரி எதுவும் பெருசில்ல

உன்கிட்ட இதை பேசினது,என் தப்பு தான்..அத்தை கூட இருக்கணும்னு,டெல்லில கிடைச்ச வேலைக்கே போகாத ஆளாச்சேசலித்துக்கொண்டவள்,

உனக்கு சப்பாத்தி ஒகே தானேஎன்று கேட்டு,அதற்கான வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

என்னோட போன் எல்லாம் ரெகவர் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்களா ராதிகா?”

ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு விஷ்வா..அதோட நீ அதுல உன்னோட போட்டோஸ் மட்டும் தான் எப்பவும் வைச்சிருப்ப..பெருசா வேறெந்த முக்கியமான விஷயமும் இருக்காதே..இப்போ தான் புதுசா போன் வாங்கிட்டியே..”எனவும்,

என்னோட நம்பரும் அதோட போயிடுச்சே ராதிகா..என்னோட சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட்ஸ் எதுவும்..என்னால ஓபன் பண்ண முடியல.என் நேரம்.. லேப்டாப் கூடவா மொத்தமா சிதைஞ்சு போகணும்..”என்றவனை பார்த்தவள்,

பழைய நம்பரை வாங்க முடியலை விஷ்வா..இப்போ இருக்க புது நம்பர்ல ,எல்லாத்தையும் அப்டேட் பண்ணிக்கோ..!ஆனால் எல்லாத்துக்கும் கொஞ்ச நாள் போகட்டும்..”எனவும்,

நானும் அவ்வளவா சோஷியல் நெட்வொர்க்ஸ்ல,ஆக்டிவா இருக்க மாட்டேனே ராதிகா..அதான் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்து போச்சு..இப்போ பொழுது போகலைன்னு,புதுசா அக்கவ்ன்ட் ஓபன் பண்ணனும்னு நினைச்சாலும்,எரிச்சல் வருது..எனக்கு டிவில படம் பார்க்க பிடிக்கிற அளவுக்கு,போன்ல எதையும் யூஸ் பண்ண பிடிக்கலஎன்றான்.

அப்போ ப்ரீயா விடு..பிரதாப் நிறைய ஹாலிவுட் ஹாரர் மூவிஸ் எல்லாம் டிஸ்க்ல வைச்சிருக்கான்.நீ டைம் பாஸ் ஆகலைன்னா,பார்..நானும் உனக்காக என் பிரண்ட்ஸ்கிட்ட,நல்ல கலெக்ஷன் வாங்கி தரேன்

தேங்க்ஸ் ராதிகா..உனக்கு இங்க எல்லாம் பிடிச்சிருக்கா?”

எல்லாமே பிடிச்சிருக்கு விஷ்வா..மனநிம்மதியோட இருக்கேன்.எம்டி வைஃப்..மீனாக்ஷி ரொம்ப நல்ல டைப்..வீக்எண்ட் கோவிலுக்கு போறவங்க,என்னையும் கூட்டிட்டு போவாங்க..எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வேவ்லென்த்..வேறென்ன வேணும்எனவும்,

யாரா இருந்தாலும்,கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணிக்கோ ராதிகா..அவங்க இடம் கொடுக்கறாங்கன்னு,நாம ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாதுஎன்று அட்வைஸ் செய்யவும்

இதெல்லாம் நீ சொல்லவே வேண்டாம்..நான் இதுல எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கேன்.அதோட நானும் வேளைக்கு போயிட்டு சாயந்திரம் தான் வரேன்.பிரதாப்பும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்..அப்படியே பொழுது போயிடும்..”என்றாள்.

இதற்கு மேல் என்ன சொல்வதென்று புரியாமல்,ராதிகா சப்பாத்தி போட,அங்கேயே நின்றபடி சாப்பிட ஆரம்பித்தான்.

அடுத்து என்ன செய்யலாம்னு பிளான்ல இருக்க?”ராதிகா கேட்கவும்,

ரெண்டு மாசம் கழிச்சு தான்,எதையும் யோசிக்கணும் ராதிகா..உடம்பு ரெகவர் ஆனாலும்,மனசு இன்னும் சரியாகல..அதோட அப்பப்போ வர்ற தலைவலி..உயிரே போற மாதிரி இருக்கு..டாக்டர் கொடுத்த டேப்லெட் மட்டும் இல்லைன்னா,செத்துப் போயிட்டா கூட நல்லா இருக்கும்னு தோணும்..”என்றான்.

ரொம்ப டிப்ரஸ்டா இருக்க விஷ்வா..நாங்க வேலைக்கு போயிட்டா,உனக்கு இன்னும் கஷ்டமா இருக்கும்..நீ இங்க பக்கத்துல இருக்க காலேஜ்ல ஜாயின் பண்ணா என்ன?”என்று வேலைக்கு செல்வதைப் பற்றி திரும்பவும் ஆரம்பித்தாள்.

நான் தான்,ஊருக்கு போயிடுவேன்னு சொன்னேனே?”

ஒரு ரெண்டு மாசத்துக்கு மட்டும்,நீ போ விஷ்வா..அந்த காலேஜ் லெக்சரர் ப்ரெக்னன்ட்டா இருக்காங்க..உன்னோட டிபார்ட்மென்ட் தான் அவங்களும்..!டெலிவரி டைம்ல போக முடியாது..!!

மேனேஜ்மென்ட் வேற ஆளை போட்டாலும்,இவங்களை ரிப்ளேஸ் பண்ண முடியாதுன்னு சொல்ற அளவுக்கு,இவங்களுக்கு நல்ல நேம் இருக்கு..ஒரு ரெண்டு மாசம் மட்டும் நீ போய்,அவங்க வேலையை பார்த்தீன்னா..எல்லாருக்குமே ஹெல்ப்பா இருக்கும்என்றாள்.

எனக்கு தலைவலி வருதே..அதுக்கு என்ன செய்யலாம்?”

அந்த டைம் மட்டும்,நீ ரிலாக்ஸா இருக்க மாதிரி பார்த்துக்கலாம்..அந்த காலேஜ் மீனாக்ஷி அம்மாவோடது தான்..சரவணன் சார் தலையீடு சுத்தமா இருக்காது.ஸோ நீ ப்ரீயா இருந்துக்கலாம்என்றெல்லாம் எடுத்து சொல்ல..

நீ எப்பவும்,என்னை இந்த அளவுக்கு கம்பெல் பண்ண மாட்ட..!இந்த அளவுக்கு போர்ஸ் பண்றேன்னா..ஏதாவது விஷயம் இருக்கும்..ஸோ நான் போறேன்..!

அதுக்கு முன்னாடி,அவங்ககிட்ட பேசணும்.ஸ்டுடென்ட்ஸ் எப்படி..இவங்க எவ்வளவு டீச் பண்ணியிருக்காங்க..இவளுக்கான பொறுப்பை எப்படி ஹேண்டில் பண்றாங்க..எல்லாம் தெரியணும்..”எனவும்,

நாளைக்கே அவங்ககிட்ட பேசறேன்..மீனாக்ஷி அம்மாகிட்டவும் நாளைக்கே பர்மிஷன் வாங்கிடறேன்சந்தோஷப்பட்டவள்,

உனக்கு கோபமில்லையேஎன்று சந்தேகமாய் கேட்டாள்.

நீ எது செஞ்சாலும்,என்னோட நல்லதுக்காக தான் இருக்கும் ராதிகா..நான் உன்னை நம்பறேன்..அவ்வளவு தான்என்றவன்..ஹாலுக்கு சென்றான்.

சிறிது நேரத்தில் பிரதாப்பும் வந்துவிடவும்,ராதிகா விஷயத்தை பகிர்ந்துகொண்டாள்.

இது ரொம்ப நல்ல விஷயமாச்சே..!இனி நீ வீட்டுல இருந்து என்ன பண்ணுவன்னு கவலைப்படாம,நாங்க ஆபிஸ்ல வொர்க் பண்ணுவோம்..அம்மாவும் அங்க நிம்மதியா இருப்பாங்கஎன்றவன்,

இங்க தங்கியிருக்கற டிரைவர் பேமிலிகிட்ட பேசினேன் ராதிகா.அவங்க பையனை,விஷ்வாவுக்கு துணையா தூங்க அனுப்பறேன்னு சொல்லியிருக்காங்கஎனவும் விஷ்வா தனது அதிருப்தியை வெளியிட்டான்.

நேத்து நைட் நீங்க ரெண்டு பேரும்,என் கூட தூங்கினதையே நான் விரும்பல பிரதாப்.அப்படி இருக்கும் போது,ஏன் நீ இப்படியெல்லாம் செய்யற?”பிடித்தமின்மையை வெளியிட,

எங்களை நீ..உன் பெட்ரூம்ல தூங்க வேண்டாம்னு சொன்னதினால தான்,இந்த மாற்று ஏற்பாடே பண்ணேன் விஷ்வா..உனக்கு உடம்பு சரியாகற வரைக்கும்,உன் கூட யாராவது இருந்துட்டே இருக்கணும்னு டாக்டர் சொல்லிருக்காங்க..அதனால தான் இதெல்லாம் செய்யறோம் விஷ்வா..”என்றவன் ஆதரவுக்கு மனைவியை எதிர்பார்க்க,

அவனின் கெஞ்சலை புரிந்துகொண்ட ராதிகா..”இது சரிவராதுன்னா,உன்னோட அண்ணன் மட்டும்,உன்னோட தூங்கட்டும்.தனியா இருக்கதுல,எனக்கு எந்த பிரச்சனையும் இல்லஎனவும்,

‘அதெப்படி முடியும்’சங்கடத்திற்கு உள்ளானவன்,விஷ்வா வேறு வழியில்லாமல்,பிரதாப்பின் யோசனைக்கு ஒத்துக் கொண்டான்.

அந்த சின்ன பையனுக்கும்,தனியா ஒரு பெட் அரேஞ் பண்ணிடுங்க..கீழ படுக்க வைக்கிற வேலையெல்லாம் வைச்சுக்கக் கூடாதுஎனவும்,

எங்களுக்கு நீ இதெல்லாம் சொல்லணும்னு அவசியமே இல்ல விஷ்வா..நாங்க பார்த்துக்கறோம்என்றவன்,இந்த விஷயத்தை அம்மாவிடம் பகிர்வதற்கு போனை எடுத்தான்.

ராதிகா மணி பத்தாவதை கணவனுக்கு உணர்த்தியவள்,”இது அவங்க தூங்கற நேரம்.நாளைக்கு காலைல சொல்லிக்கலாம்..இப்போ அந்த பையனை கூட்டிட்டு வாங்கஎனவும்,டிரைவரின் மகனை அழைக்க சென்றான்.

நீங்க ரெண்டு பேரும்,என்னை சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்றீங்கராதிகாவிடம் குறை சொல்ல,

நீ,நம்ம வீட்டோட செல்ல பிள்ளை விஷ்வா...எல்லாரையும் அக்கறையா கவனிச்சுக்கறதில,உன்னை மிஞ்ச,உன்னோட அண்ணனால கூட முடியாது..!

இப்போ உனக்கு முடியலைன்னும் போது,நாங்க அக்கறையா இருக்கதுல தப்பில்லையே விஷ்வா..இன்னும் ரெண்டு மாசம் தான்.அப்புறம் உன்னை யாரும் கண்டுக்க மாட்டோம்.. போதுமா..”எனவும்,எதுவும் பேச தோன்றாமல்,லேசாக புன்னகைத்துவிட்டு அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான்.

அருகில் சிறிய படுக்கை ஒன்றை,அண்ணன் தயார்படுத்துவதும்,சின்னவன் ஷ்யாம் அதில் படுத்துக்கொள்வதும் அவனுக்கு தெரிந்து தான் இருந்தது..!

ஆனால் அவன் எடுத்துக்கொள்ளும் மருந்தின் வீரியம்,அவன் கண்களை திறக்க விடவில்லை..சிறிது நேரத்திற்கு பின் ஆழ்ந்து தூங்கிப் போனவனின் தலையை,யாரோ வருடுவது போலிருந்தது.

அண்ணனாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்..!!  

No comments:

Post a Comment