என்னவோ மயக்கம்-12

 12

எப்போதும் சத்தமாகவே இருக்கும் அந்த வீட்டில் இப்போது இருப்பவர்கள் வெங்கடாசலத்தின் மகள் பாரதி,மருமகன் சுந்தரேசன்,அவர்களது ஒரே புதல்வி மிருதுளா தான்.

அருண் பகல் பொழுதில் வேலை வேலை என்று ஓடுபவன் ஓய்வு நேரத்தில் இந்த வீட்டில் இருந்தாலும்,கட்டாயம் இரவு தூக்கத்திற்கு,அந்த மாளிகையின் அருகில் இருக்கும் சிறிய ஓட்டு வீடான அவனது தந்தைக்கு சொந்தமான அந்த வீட்டிற்கு ஓடி விடுவான்.வெங்கடாசலத்திற்கு இதில் வருத்தம் தான்.

எப்படியெல்லாமோ அதை வார்த்தையில் வெளிப்படுத்திய போதும் கூட அவன் இளகவேயில்லை.ஒன்றைப் பற்றி முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து மாறலாம் என்று நினைக்க கூட மாட்டான் என்று தெளிவாகவே புரிந்து வைத்திருந்தார்..தன்னுடைய குணத்தை அப்படியே பிரதிபலித்து பிறந்திருந்ததினால்,இதை பிறரிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார்.

வெங்கி தனது  அத்தனை சொத்துக்களுக்கும் வாரிசுகளாக அருணையும்,மிருதுளாவையும் நியமித்தவர் தன் பொறுப்பில் ஒரே ஒரு காட்டன் மில்லை வைத்துக்கொண்டார்.அதை தன் பொறுப்பில் கொடுக்க சொல்லி அருண் கேட்க,அப்போதிலிருந்து தாத்தனுக்கும் பேரனுக்கும் ஒரே சண்டை.

இதோ இப்போது கூட இருவரும் ஹாலில் எதிரெதிரே தான் அமர்ந்திருக்கிறார்கள்.ஒரு வார்த்தை..ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லையே..அவ்வளவு அழுத்தம் இருவரும்!(கேடி பாய்ஸ்)

இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த மிருதுளா,”தாத்தா..மாமா ஆசைப்படறாங்க தானே.கொடுத்துடுங்க தாத்தா.வீணா எதுக்கு இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க”-கொஞ்சம் சத்தமாய் குரலை உயர்த்தி மாமனுக்கு பரிந்து பேச,

அதுக்கே பயந்து(?) போனவராய்,”நீ சொன்னா செஞ்சிடலாம் மிது கண்ணு”என உடனே சரண்டராகிவிட்டார்..சம்மதித்தும்விட்டார்.

பொல்லாத மனுஷன்! -எப்படியெல்லாமோ தாத்தனை திட்ட வேண்டுமென்று வெறியே வந்தது அருணிற்கு..!கிட்டத்தட்ட ஒரு மாசமாய் கேட்டு கேட்டு நொந்து போயிருக்க,பேத்தியின் ஒரே பேச்சில் சம்மதித்துவிட்டதில் இவனுக்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது.

அதைக் காட்டாமல் மேகசீன் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டான்.

மிருதுளாவிற்கு இது தான் நடக்குமென்று தெரியும்.இதனாலையே இவ்வளவு நாள் தலையிடாமல் இருந்தாள்..இப்போது தலையிட்ட குத்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களுக்கு அருண் பேச மாட்டான் என்பதில் சலிப்பு ஏற்பட வெங்கியை முறைத்தாள்.

இதையெல்லாம் கவனித்தவாறே,டைனிங் டேபிளில் அமர்ந்து,பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்த சுந்தர்,”ஏன்டி பாரதி,என் மாமன் ஏன் எப்போ பார்த்தாலும்,என் மருமகனுக்கு எதிராவே இருக்கார்..உன் பொண்ணு சொன்னா மட்டும் உடனே சரின்னு தலையாட்டிடறார்? பாவம் என் மருமவபுள்ள,மொகமே தொங்கி போச்சு”-எப்போதும் போல் மனைவியிடம் மாமனைப்பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“இதை அவர்கிட்ட போய் கேட்க வேண்டியது தானே! அவர் முன்னாடி அப்படியே ரொம்ப நல்லவர் மாதிரி பம்மறது! என்கிட்டே வந்து வீரத்தை காட்டறது”என்று நொடிக்க,அதையெல்லாம் கண்டுகொள்ளாதவராய் தட்டில் இன்னும் கொஞ்சம் பிரியாணியை எடுத்து கொட்டி,சப்புகொட்டி தின்று,தான் ஒரு சாப்பாட்டு ராமன் என்பதை காட்டிக்கொண்டார்..வஞ்சம் இல்லாத மனுஷனும் கூட!!

இவர்களின் அக்கப்போர் தாங்காத பாரதி ஆங்கில நியூஸ் சேனல் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

கலிபோர்னியாவில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்..சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன ஒரு ஹாலிவுட் படம் நிறைய அவார்டை தட்டி சென்றது.

அதில் சிறந்து துணை நடிகைக்காக விருதை,”பிரத்யுக்ஷா மைக்கேல்”அவர்களுக்கு வழங்கப்படுகிறது-என்று ஆங்கிலத்தில் தொகுப்பாளர் அறிவித்துக்கொண்டிருக்க,இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதையும் சொல்ல,அங்கிருந்த ஐவருமே ஒரு சேர இப்போது டிவியை பார்க்க...எல்லாருக்குமே அதிர்ச்சி தான்..

முதலில் தெளிந்த மிருதுளா,”மாமா..இவங்க..”என்ற போதே,

“எதுவும் பேச வேண்டாமே!”என்பது போல தன் இடது கையை அவள் பக்கம் காட்ட,வருத்தத்துடன் அமர்ந்துவிட்டாள்.எப்போதும் நடப்பது தானே!!  

வெங்கி பெருமூச்சுவிட்டு,”எவ்வளவு தான் வாழ்க்கையில பணம்,புகழ் வந்தாலும்,பட்ட கறையை துடைச்சு எறிஞ்சுட முடியாது.பலருக்கு இது தெரியறதில்ல,சிலருக்கு அது புரியறதில்ல”-அருணை பார்த்துக்கொண்டே சொன்னவர்,

“பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி கொடு பேரா,கையெழுத்து போட்டுடறேன்..கொஞ்சம் பணம் என் அக்கவுன்ட்-க்கு மாத்திடு..இருந்த எல்லாத்தையும் உனக்கே கொடுத்திட்டனே..அதான் கேட்கறேன்”-வேண்டுமென்றே அருணை வெறுப்பெற்றிவிட்டு,அவனது பதிலை எதிர்பாராமல் எழுந்து சென்றுவிட,தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்..

மிருதுளா தான் அவன் தோள் தொட்டு சமாதானப்படுத்தினாள்.

“விடு மாமா,தாத்தாவுக்கு வயசாகிடுச்சு இல்ல.அதான் இப்படி பேசறார்..நம்ம பேருக்கு கம்பெனி ரன் பண்ற பவர் தான் கொடுத்திருக்கார்.மத்தபடி எல்லாம் இவர் வச்சுது தானே சட்டம்! அதனால ரொம்ப ஓவரா சீன் போடாம,சாப்பிட வா”கைபிடித்து இழுத்தாள்.

மறுக்க முடியாமல் பின்னே சென்றவனுக்கு,எப்படித்தான் முகம் கடுக்க பேசினாலும்,தான் வருத்தமடைந்தால் அது பொறுக்காது உடனே தன்னை சமாதானப்படுத்த முயலும் மிருதுளாவின் மேலும்,அவளது பெற்றோரின்  மேலும் அன்பும்,கோபமும் ஒரே நேரத்தில் எழுந்தது என்பது தான் விசித்திரமானது!! 

“என் பொண்ணை நீ ஏன் இப்படி ட்ரீட் பண்ற”என்று ஒருமுறை கூட மிருதுளாவின் பெற்றோர் கேட்டதேயில்லை.

என்னவோ திட்டுவது இவன் உரிமை,அமைதியாய் வசவுகளை பெற்றுக்கொள்வது தன் பெண்ணின் கடமை என்பது போலவே தான் அவர்கள் நடந்துகொண்டார்கள்..

மருமகனுக்கு உணவை பரிமாறிய மகளை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை.அருணும் தன் பங்கிற்கு மிருதுளாவிற்கு உணவை எடுத்து வைக்க,உணவை முடித்ததும்,கருமமே கண்ணாய் இருவருமே அந்த இடத்தை சுத்தம் செய்து,பாத்திரங்களை எடுத்து வைக்கும் வரையிலும் வேலைக்காரர்கள் அப்பக்கம் வரவேயில்லை.

அருண் தன் வீட்டிற்கு செல்வதற்கு கிளம்பும் சமயம்,“மாமா,நாளைக்கு பலராமன் கடை திறப்பு விழா.நாம ரெண்டு பேருமே வரணும்னு ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணி கேட்டார்.நானும் வரேன்னு சொல்லிட்டேன்.உனக்கு வேற எதுவும் ப்ரோக்ராம் இருக்கா?”என கேட்க,

“ப்ரோக்ராம் எதுவும் இல்லை மிரு.நானும் வரேன்.ஆனால் ரொம்ப நேரம் இருக்க முடியாது.சந்தோஷ்-கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நீயும் என் கூடவே வந்துடு.மில் பக்கம் போயாகனும்.ரொம்ப நஷ்டத்தில ஓடிட்டு இருக்கு.இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்..”என்றவன்,

“ரொம்ப டயர்டா இருக்கு.நான் கிளம்பறேன்”என்றான்.

“எதுவும் பிரச்சனையா மாமா”

தன் முகத்தை பார்த்தே விஷயத்தை தெரிந்துகொள்ளும் மிருதுளாவிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லாமல்,”ப்ரத்யாவை யோகா கிளாஸ்ல பார்த்தேன்”என்றான்..

“ஓ!!.....பேசலையா ரெண்டு பேரும்?”தயக்கத்துடனையே கேட்க,

“இல்ல...அவளை பார்த்ததுமே,என்னை விட அவ டென்ஷன் ஆகிட்டா,அதான் அங்க இருக்கவே மனசில்ல,பிளைட் பிடிச்சு உடனே இங்க வந்துட்டேன்”என்றான் கவலையாய்!!

அவனது கவலையை போக்கியே ஆக வேண்டுமென்று மிருதுளாவிற்கு தோன்றியது..

அதனாலையே அருணின் நண்பன் சந்தோஷை பற்றி பேச்சை எடுத்தாள்.

“சந்தோஷ் வீட்டுல ரொம்ப பிரச்சனை பண்றாங்க போல மாமா”என்றதும் ஒன்றும் சொல்லாமல் மென்னகை புரிந்தான்.

சந்தோஷ்-அருண் இருவரின் குடும்பமுமே தொழிலில் போட்டியாளர்கள் என்பதால்,போன தலைமுறை ஆட்கள் எல்லோருமே எதிரிகளாகத்தான் சுற்றினார்கள்..அடிக்கடி சண்டை வரும்..கேஸ் நடக்கும்,வேண்டுமென்ற இருதரப்புமே வழக்கை பல வருஷம் வாய்தா கொடுத்தே இழுத்தடிப்பார்கள். இரு குடும்பத்தார்கள் இடையில் அவ்வளவு வன்மம்!

ஆனால் அருணும் சந்தோஷும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படித்ததினால் நட்பாகிவிட்டனர்.இப்போதும் பரம்பரை தொழிலில் போட்டியாளர்கள் தான்.

ஆனால் நண்பர்கள் ஒன்றாய் இணைந்து நடத்தும் பிசினஸ் கன்சல்டிங் கம்பெனியில் இருவருக்கும் சண்டை என்பது வந்தது கிடையாது..இருவரும் தனியாய் தொழில் தொடங்கப்போகிறோம் என்ற போது இரு குடும்பத்திலும் பயங்கற எதிரிப்பு!எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.இவர்களால் லாபம் அடைந்தவர்கள் பலர்!!!

பிசினெஸ் கன்சல்டிங் என்றால்,ஒரே வேலையோடு இவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை.தங்கள் வாடிக்கையாளர்கள் தொழில் தொடங்குவதற்கு பணமுதலிடு செய்ய பேங்கில் லோன் வாங்கி கொடுப்பதில் இருந்து,எங்கு எப்போது தொடங்க வேண்டும்,யாரிடம் பொருட்கள் வாங்க வேண்டும்..எங்கே சந்தைப்படுத்த வேண்டும் என்று ஆதி முதல் அந்தம் வரை முடிவு செய்வது இவர்களின் கம்பெனியின் பொறுப்பு!!

முதல் ஐந்து வருடத்திற்கு அனைத்துமே இவர்களின் கண்காணிப்பில் தான் இருக்கும்.தொழிலில் வருகின்ற லாபத்தில் 25சதவீதம் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்..கொடுக்கலைன்னா இவங்களே எடுத்துக்குவாங்க.கறார் பாய்ஸ்!!

இந்த தொழில் செய்ய தான் உதவுவோம் என்று எந்த பாலிசியும் இவர்கள் வைத்துக்கொள்வதில்லை.நியாயமான தொழிலுக்கு,கொஞ்சம் முதலீடோடு ஆர்வத்தோடும் வந்தால் அனைத்தையும் பக்காவாக செட் பண்ணி கொடுப்பார்கள் என்பதால் இதுவரை எவருமே நஷ்டப்பட்டது கிடையாது...

பிரத்யா சென்ற யோகா வகுப்பை நடத்துபவரும் அருணின் கிளையன்ட் தான்.அதனாலையே அவனும் வந்திருந்தான்.அங்கு எதிர்பாராமல் ப்ரத்யாவை பார்த்ததிலிருந்து அருணின் மனம் மகிழ்ச்சி,துக்கம்,பிரிவு கொடுத்த ஏக்கம் என்ற கலவையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது.

உறவென்று சொல்ல ஓராயிரம் பேர் இருந்தாலும்,ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்றியமையாத துணை என்றால் வாழ்க்கை துணை மட்டுமே!! அவர்களிடம் கிடைக்கும் நிம்மதி,சந்தோஷம் வேறு எவரிடமுமே நிரந்தரமாய் கிடைக்காது..அற்ப சுகங்கள் எல்லாமே கானல் நீர் தான்.

அருணிற்கும் இப்போது ஓர் துணை தேவைப்பட்டது...அதே நேரத்தில் இன்னமும் தன்னையே பார்த்துக்கொண்டு வாயிலிலையே நிற்கும் மிருதுளாவால் அவனது மனம் சமன்படவேயில்லை..தனக்காய் இத்தனை வருடமாய் காத்திருக்கும் அவள் மேல் பரிதாபம்,கோபம் ஏற்பட்டதே தவிர காதல் உணர்வு வரவேயில்லை..

விடுவிடுவென்று தன் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்தவனுக்கு தாத்தாவின் மேல் செமையாக கோபம் வந்தது.அவரால் தான்,அவரால் தான் எல்லாமே சிக்கலாகிப்போனது..எல்லாமே..எல்லாமே சில நாட்களில் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தாலும்,முடிவென்று வரும் போது மிருதுளாவின் மனம் என்ன பாடுபடும்-இந்த நினைப்பும் அவனது வேதனையை அதிகப்படுத்த கண்களை மூடிக்கொண்டான்.

இப்போது இன்னும் ஓர் கவலை சேர்ந்துகொண்டது தான் மிச்சம்..பிரத்யுக்ஷாவும் கண்ணுக்குள் வந்து,’நானும் இருக்கிறேன்’என்று சொல்லிவிட்டு போனாள்...

இந்த பெண்கள் ஏன் இப்படி பிரச்சனையின் பிறப்படமாக இருக்கிறார்கள்?-அருணிற்கு மட்டுமல்ல,எனக்கும் இதே கேள்வி தான்! பதில் தான் தெரியவில்லை.




No comments:

Post a Comment