என்னவோ மயக்கம்-11

1௦

பட்..பட்டென்று தட்டப்படும் கதவின் ஓசையும்...அதை தொடர்ந்த

தம் தன நம் தன தம் தனனம் தன தம்தனனம்,என்ற பாடலும்..பிரத்யாவின் உறக்கத்தை கலைத்தது.

வெகு நேரம் பழைய நினைவில் மூழ்கிக்கொண்டிருந்த ப்ரத்யா விடிந்த பின் தான் உறங்கினாள்.

திடீரென்று பாடல் சத்தமாக ஒலிக்க,படுக்கையில் இருந்த தலையணையை எடுத்து,காதில் இறுக வைத்துக்கொண்டு,விட்ட தூக்கத்தை தொடர முயற்சித்தாள் ப்ரத்யா.ஆனால் முயற்சி வீணாய் போனது தான் மிச்சம்.

ஏனோ இன்று அடிக்கடி கனவில்,மிருதுளா அருணை தாங்கிப் பிடிப்பது போல காட்சி திரும்ப திரும்ப கண்ணுக்குள் ஊர்வலம் போக,போதாக்குறைக்கு,இந்தப் பாட்டு வேறு,பின்னணி இசையாக பாடி அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருக்க,ஒருக்கட்டத்தில் முடியாமல் எழுந்து அமர்ந்தேவிட்டாள்.

பாட்டு சத்தம் வரும் திசையை பார்க்க,டிவியை போட்டுவிட்டு அருகில் நின்றிருந்தாள் ஆறு வயது ஸ்ரீஷா.ரவீந்தர்-இந்துவின் செல்ல புதல்வி.

பிரத்யாவின் எரிச்சல் எல்லாம் பறந்து,”என்னடா ஸ்ரீ,அதுக்குள்ள எழுந்தாச்சா”கேட்டபடியே எழுந்துகொள்ள,அவளது இரவு உடையை பார்த்த ஸ்ரீஷா..

“சித்தி,நீ இந்த மாதிரி ட்ரெஸ் போடக் கூடாதுன்னு அத்தை எத்தன வாட்டி சொல்லியிருக்கா..நீ கேட்கவே மாட்டியா”பெரிய பெண்ணாய்,இடுப்பில் கை வைத்து முறைத்து கேட்க,

“அத்தை சொல்லியிருக்கா இல்ல,சொல்லியிருக்காங்க-ன்னு சொல்லணும்.புரியுதா குட்டி”-தன் முடியை வாரிக்கொண்டே கேட்டவள்,அவளை தூக்க வர,

“கை வாஷ் பண்ணாம கிட்ட வராதே சித்தி”என்றபடி பின்னே நகர்ந்துகொண்டே போனது இந்த சின்ன சிட்டு.அவ்வளவு சுத்தம்.

“சரி,சரி,உன் பக்கமே வரலை.நைட் ட்ரெஸ் என் ரூம்ல தானே போடறேன்.அதனால உன் அத்தை திட்ட மாட்டாங்க.வெளில வரும் போது,சித்தி எப்படி வர்றேன் பார்..இப்போ குளிச்சிட்டு வர்றேன்.நீ போய் சாப்பிடு.நேரமாச்சு”

“பரவால்ல,நீயும் வா”தலையணையை மடியில் எடுத்து வைத்து அதன் மேல் பென்சிலால் கிறுக்க ஆரம்பித்துவிடவும்,அப்படியே அள்ளி எடுத்து கொஞ்ச சொன்ன மனதை,அடக்கி குளிக்க சென்றாள்.

இவளும் மதுவும் நேற்று இரவு தான் ரவீந்தரின் வீட்டிற்கு வந்திருந்தனர்..மதுவிற்கு தனியறை கொடுத்துவிட்டார்கள்.ப்ரத்யா மதுவோடு தங்க ஆசைப்பட,அவளது பெரியம்மா கங்கா ஒரே பார்வையில் அடக்கிவிட்டார்.

தனியாய் படுப்பது புதிதில்லை என்றாலும் இரவெல்லாம் சரியாய் உறக்கமேயில்லாமல் கனவுகளோடு போராட வேண்டியிருந்தது.கண்ணை மூடினாலே அருண் தான் வந்து போனான்.

எப்போதையும் விட அலைப்புருதல் அதிகமாய் இருக்க,அதுவேறு பயம் கொடுத்தது.

போன முறை நடந்தது போல,இம்முறையும் எதுவும் நடந்துவிடுமோ என்ற யோசனையிலையே குளித்துவிட்டு,கங்கா பெரியம்மாவிற்கு பிடித்தது போல சந்தன நிறத்தில் சேலை அணிந்து,அதற்கு மேட்சாக காது,கை,கழுத்தில் அணிகலன் அணிந்து படுக்கையறை கதவை திறந்து உள்ளே வர,இன்னமும் அந்த தலையணையில் தான் ஸ்ரீஷா கவனமாய் இருந்தாள்.

“ஸ்ரீ குட்டி,போகலாமா”கேட்டதும்,நிமிர்ந்து பார்த்தவள்,

அழகாய் சிரித்துவிட்டு,”போலாமே”என்றபடி தலையணையை அதனிடத்தில் வைத்துவிட்டு,சித்தியின் கையை பிடித்தபடியே நடக்க,தூக்கிக்கொண்டாள் குட்டி தேவதையை!

உணவருந்தும் மேசையிலிருந்து,இவர்களின் வரவை பார்த்த கங்கா,இந்துவை பார்க்க அவளோ கடிகாரத்தை தான் பார்த்தாள்.

இவர்களை புரியாத புதிராய் பார்த்துக்கொண்டிருந்த மது அப்போது தான் உண்டு முடித்திருந்தாள்.

“9 மணிக்கு மேல சாப்பாடு கிடையாது.எங்க வீட்டு ரூல்ஸ்”என்று கட்டாயப்படுத்தி உண்ண வைத்திருந்தாள் இந்து.

இந்தரும் உண்டு முடித்தவன்,இவர்களுக்காய் காத்திருக்க,அவனுக்கு அடுத்த இருக்கையில் ஸ்ரீஷாவும்,அடுத்து பிரத்யாவும் அமர்ந்துவிட,

“ம்மீ பசிக்குது”தட்டை எடுத்து சப்தம் கொடுத்தும்,இந்து எதையும் எடுத்து வைக்காமல் இருக்க,

“என்ன எங்காவது ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடுங்க.இங்க ஒரே ரூல்ஸா இருக்கு”-அவளது வயதுக்கு மீறிய பேச்சில், சிரிப்பு வந்தாலும்,அதை அடக்கிக்கொண்ட கங்கா,

“லேட்டா வந்தா,அவங்களே ஏதாவது செஞ்சு சாப்பிட்டுக்கணும்.போ! ஏதாவது ஸ்நேக்ஸ் எடுத்து சாப்பிடு”-அநியாயத்திற்கு விரட்டினார்.

“ம்மா.பசிக்குது.ப்ளீஸ்”கண்ணை சுருக்கி பிரத்யாவும் கேட்க,அவளுக்கும் இதே பதில் தான் வந்தது.

இந்து,”நான் தனியா சமைச்சுக் கொடுக்கறேன் வாங்க”என அழைக்க,

“நீ உட்கார் இந்து”அதட்டிய கங்காவை மீறி இந்துவால் செல்ல முடியவில்லை.

பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்தாள்.அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தர் எழுந்தவன்,”வாங்க,கிட்சன்க்கு போகலாம்”என்று சொன்ன உடனையே பிரத்யாவும்,ஸ்ரீஷாவும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஓடினர்.

“அக்கா”-மது இந்துவின் கையை சொரிய,

கங்காவை கண்டுகொள்ளாமல்,”இதுங்க இப்படித்தான் பாசப்பயிரை வளர்க்கும்-ங்க.நீயும் கண்டுக்காதே.ரெஸ்ட் எடுக்கறியா.இல்ல எங்காவது வெளில போகலாமா”கேட்க,

“ப்ரத்யா வரட்டும்-க்கா”முடிவாய் சொல்லிவிட்டு வீட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

திடீரென்று விசில் சத்தமும்,”வாவ்வ்வவ்வ்வ்வ்!”என்ற பேரிரைச்சல் கேட்டு,யாரென்று பார்க்க,மதுவால் கண்ணெடுக்கவே முடியவில்லை.

அவள் பார்வையில் முதலில் விழுந்தது அந்த நெடிய ஆணின் தலை தான்.மொத்த மண்டையும் வழிக்கப்பட்டு,நடுவில் மட்டும் குடுமி வைத்திருந்தான்.சுத்தமாகவே மதுவிற்கு பிடிக்கவில்லை.

காதில் வளையம்,கையில் பெரிய பிரேஸ்லெட் என்று ரொம்பவே வித்தியாசமான சகிக்காத தோற்றம்.அதற்கு மேல் பார்க்க முடியாமல் முகசுழிப்புடன் திரும்பி கொண்டாள்.

அதை கவனிக்காத இந்து,”உஷ்ஷ்ஷ்.மாமா உள்ள தான் இருக்கார் ஜீவா.முதல்ல போய் உருப்படியா ட்ரெஸ் பண்ணிட்டு வா.பிரத்யாவும் வந்திருக்கா..இது அவ பிரண்ட் மது”அறிமுகப்படுத்தி வைக்க,

“நமஸ்தே ஜி!”என்றவன்,அவளுக்கு கை கொடுத்து வாங்கிக்கட்டிக்க மனமில்லாமல் அவசரமாக தனதறைக்கு ஓடினான். எப்போதும் சோம்பேறித்தனமாய் படுக்கையில் விழுபவன்,இன்று உடனடியாய் சென்று,தலையில் மிச்சமிருந்த முடியையும் அவனே மழித்து,அவசரமாய் குளியல் போட்டுவிட்டு,நீட்டாக கீழே வந்தான்.

இந்துவுக்கே ஆச்சர்யம் தான்.அதை விட கங்காவிற்கு!! அவரால் அடக்க முடியாத,அல்லது அடக்க விரும்பாத ஒரு ஆள் என்றால் அது இந்த ஜீவா தான்.இந்துவின் விருப்பத்திற்காக தான் இங்கு இருக்க சம்மதித்தார் என்றாலும்,அவனின் அடாவடி செயல்கள் அவரை கோபப்பட வைக்கும் போது,இந்தரிடம் சொல்லி அடக்கி வைக்க சொல்லிவிடுவார்.நேரடியாய் பேசும் அளவிற்கு அவன் தங்களுக்கு சமதையானவன் இல்லை என்ற எண்ணம் இவருக்கு நிறையவே இருந்தது.

ஜீவா மற்றவர்களின் பார்வையை எல்லாம் புறந்தள்ளிவிட்டு,தன் கையோடு கொண்டுவந்திருந்த பேகிலிருந்து,ப்ரெட் பாக்கெட் எடுத்தவன்,ஜாம் எடுத்து போட்டு,காரியமே கண்ணாய் உண்ண ஆரம்பித்துவிட்டான்.கடைக்கண் மட்டும் மதுவின் மேலிருந்தது!

‘இதென்ன பார்வை’-கடுப்புடன் கிட்சனையே பார்க்க,அங்கிருந்த மூவரும் அவர்களது தட்டில் ப்ரெட் சாண்ட்விச் எடுத்துக்கொண்டு வந்தவர்கள்,அவர்களது இடத்தில் மீண்டும் அமரும் போது தான்,ஜீவாவை பார்த்தனர்.

பிரத்யாவை நிமிர்ந்து பார்த்தவன்,”ஹாய்”என்றதோடு குனிந்துகொண்டான்.பதிலை எதிர்பார்க்கவில்லை.அவளும் சொல்லவில்லை.

அது என்னவோ,இவனை சிறுவயதில் ஒரே ஒருமுறை கங்கா மிரட்டினார்.

“என் பொண்ணை பார்த்த,கண்ணை தோண்டிடுவேன்”கோபமாய் சொன்னது இவனது மனதில் அப்படியே அச்சாரமாய் பதிந்துவிட்டது.அப்போது இந்து மட்டும் ஒருதலைக்காதலில் இந்தர் பின்னே சுற்றிக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொருமுறையும் இந்தர் நிராகரிப்பதை,தம்பியிடம் இந்து சொல்லும் போதெல்லாம்,குறுக்கே நிற்கும் ப்ரத்யாவை மயக்கி,தன் பின்னே சுற்ற வைக்க வேண்டும் என்ற மோசமான எண்ணம் எல்லாம் தோன்றும்.ஆனாலும் அக்கா இந்தரை திருமணம் செய்துகொண்டால்,இவள் தனக்கு தங்கை முறையாக வேண்டும் என்று மனதில் பதித்து வைத்துக்கொண்டு அமைதி காத்தான்.

இவனுக்கு கோபம் நிறையவே வரும்.அதுபோன்ற சமயங்களில் படுவில்லத்தனமாய் யோசிப்பான்.மற்ற நேரங்களில் ஐயா செம சைலன்ட் ரகம்! பெண்களை பார்த்தால் கொஞ்சமென்ன ரொம்பவே ரசிக்கும் ரகம்..கிளுகிளுப்புக்காக சொல்லனும்னா ரொம்ப ஜொள்ளு விடுவான்.

இப்போதும் மதுவை அப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.சம்பந்தப்பட்ட அந்த இருவரை தவிர வேறு யாருமே உணர முடியாத பார்வை!

உண்டு முடித்த கையோடு வெளியே வந்தவன்,செயற்கை நீரூற்று அருகில் வந்தவன்,அதில் கல்லை வீசிக்கொண்டே அமைதியாய் இருக்க,அவன் எதற்காய் காத்திருந்தானோ,அவளே வந்தாள்..

மது..அவனை பார்த்த உடனே கவந்துவிட்டாள் என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனால் அவளிடம் ஏதாவது பேசிவிட வேண்டுமென்று மனம் உந்தியது.எதையாவது உளறிக்கொட்ட வேண்டும் போலிருந்தது..

முடியில்லாத மண்டையை தட்டிக்கொண்டே அவள் அருகில் வந்தவன்,அவள் திகைத்த பார்வையை உணர்ந்து,”எனக்கு ஒரே ஒரு ஆசைங்க.யாராவது ஒரு பொண்ணு,எனக்கு ஐ லவ் யூ சொல்லணும்னு”

“...........”

“ஆனால் அந்த ஆசை நிறைவேறவேயில்லை.நான் தான் நிறைய பேருக்கு சொல்லியிருக்கேன்..இப்போ எனக்கு நீங்க ஒரே ஒரு முறை,என்னை காதலிக்கிறேன்னு சொல்லணும்னு ரொம்ப ஆசையா இருக்குங்க..ஆனால் நான் கொஞ்சம் ஷை டைப்பா..அதான் இதையெல்லாம் மனசு விட்டு சொல்ல முடியலங்க.என் தவிப்பு உங்களுக்கு புரியுதுதான-ங்க”என்று நிஜமாகவே உளறித்தான் கொட்டினான் ஜீவா.

வலுக்கட்டாயமாய் உதட்டை இழுத்து வைத்து,”ஸோ நீங்க ரொம்ப ஸ்மார்ட்-ன்னு நான் இப்போ நினைக்கணுமா,ம்ம்ம்ம்?”-மது கேட்க,

“ஐயோ அப்படியெல்லாம் இல்லீங்க.எனக்கு நிஜமாவே நீங்க அப்படி சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சுங்க.உங்களுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லீங்க.நாளைக்கு பிடிச்ச பின்னாடி சொல்லுங்க,சரியா?”-அவள் கோபப்படுவதை உணராதது மாதிரியே பேசிவிட்டு சொல்ல,மதுவிற்கு எந்த உணர்வுமே தோன்றவில்லை.

அவளுக்கு தோன்றினால் தான் அதிசயம்.

காதல் என்றால் என்ன?

அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷம் தான் என்ன?

திகட்ட திகட்ட காதலித்து திருமணம் செய்துகொண்டாலும்,அதன் பின்னர் திருமண வாழ்க்கை இனித்துவிடுகிறதா?

போராடி போராடி கிடைக்கும் இந்த பொல்லா காதலில் ஏற்படும் வலியும் சுகமும் உணர்த்தும் பாடம் தான் என்ன?

அதைவிட இம்மானுட பிறப்பின் அர்த்தம் தான் என்ன? பிறந்து வளர்ந்து கட்டாயமாய் காதலுக்கு உட்பட்டு பிள்ளைகள் பெற்று..இடையில் பணம் பதவி அந்தஸ்து போன்றவைகளுக்காக போராடி இறுதியில் கிடைப்பது என்னவோ மரணம் தான்.இது தான் வாழ்க்கையில் நிச்சயம்..இதில் இந்த காதலினால் என்ன கிடைத்துவிடப் போகிறது-மதுவிற்கு தோன்றும் ட்ரில்லியன் டாலர் கேள்வி.

யாராவது காதலிக்கிறேன் என்று சொன்னால் உடனே இந்த கேள்விகள் தான் கண் முன்னே வந்து போகும் இவளுக்கு! அவளின் பிறப்பும் வளர்ப்பும்,பட்ட கஷ்டமும்,வாழ்வதற்காய் போராட வேண்டிய சூழ்நிலையும் அவளை சித்தாந்த நிலைக்கே தள்ளியிருந்தது.

ப்ரத்யாவின் காதல் தான் அவளை அதிகமாய் குழப்பும்..

எதுக்காக காதலிச்சு,இப்படி பிரிஞ்சு போய்,ஒருத்தனுக்காக அழுது புரண்டு ஏங்கி காத்துக்கிடக்கா?-அன்புக்காக தானோ?..அது தான் போட்டி போட்டுக்கொண்டு அன்பை காட்ட பெரியம்மாவும்,இந்தரும் இருக்கிறார்களே!! பிறகேன் பாசம் காட்ட ஆளே இல்லாதது போல ஒருவனையே பிடித்து தொங்கிகொண்டிருக்க வேண்டும்?-இப்படியெல்லாம் பல விதமாய் தோழியின் வாழ்க்கை முறையை பற்றி சிந்தித்தாலும் ஒருமுறை கூட கேட்டதில்லை.

எதில் இவளுக்கு குழப்பமோ இல்லையோ,ஒருவரின் தனிப்பட்ட அந்தரக்கத்தில், சில உணர்வுகளில்,உரிமையில்...அடுத்தவர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உள்நுழையக் கூடாதென்பதில் மட்டும் தெளிவாய் இருந்தாள்.(அந்த மட்டும் சிறப்பு!!!!!)

தோழியை பற்றிய நினைப்பிலையே ஜீவாவை மறந்துவிட்டாள்.பிரத்யாவும் வெளியே வர,அவள் கையிலிருந்த ஸ்ரீஷா,”ஆண்ட்டி,என் கூட யோகா க்ளாஸ்க்கு வரீங்களா.சித்தி நீங்க வந்தா தான்,என் கூட வருவேன்னு சொல்லிட்டாங்க”-அழகு தமிழில் நிறுத்தி நிதானமாய் பேசும் அழகில் சொக்கித்தான் போனாள் மது.

“கண்டிப்பா வரேன்டி செல்லம்”கன்னத்தை பிடித்து கொஞ்ச,

“அப்போ உடனே போகலாமா?”ஆர்வத்தை அடக்காமல் கேட்க,சம்மதித்துவிட்ட இருவரும் உடனே புறப்பட்டார்கள்.

ஆறு வயசு பொண்ணுக்கு யோகா அவசியமா?-கேள்வி தோன்றினாலும்,பிரபலமாகி வரும் அந்த யோகா வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று ப்ரத்யா நினைத்தாள்.ஓயாமல் தன்னை தின்னும் காதல் உணர்வை,தியானத்தின் மூலமாய் ஆத்ம உறவாய் மாற்ற எண்ணினாள்.

யோகா வகுப்பிற்கு இவர்கள் செல்லும் முன்,அங்கிருந்த காவலாளி,”குருஜியோட உரை அங்க நடந்துட்டு இருக்கு.போங்கம்மா”என்று சொல்ல மூவரும் அங்கு சென்று,காலியாய் இருந்த கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் வரும் முன்னேயே குருஜியின் உரை தொடங்கி பாதி முடிந்திருந்தது.

கம்பீரமான வசீகரிக்கும்,மனதிற்கு இதமளிக்கும் குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

நீயே உனக்கு என்றும் நிகரானவன்-பழைய படத்தில் இந்த பாடல் வரியை நீங்கள் கேட்டிருக்கலாம்.எத்தனை சத்தியமான வார்த்தை.இந்த உலகத்தில் உங்களின் உருவத்தை ஒத்த எத்தனையோ பேரை அறிவியல் முறையில் உருவாக்கலாம்.ஆனால் எண்ணங்கள் ஒன்று போல் இருக்குமா?

ஒரே ஒருவம் கொண்ட இருவரும் ஒரே நேரத்தில் ஒத்த சிந்தனையுள்ளவராய் இருந்திருக்கிறார்களா?

இல்லை வேறு உருவத்தில் இருப்பவர்கள் தான் ஒத்த சிந்தனையில் இருந்திருக்கிறார்களா?

மிகவும் அரிதாய் எப்போதோ ஒரு நேரத்தில் மட்டும் இந்த ஒத்த சிந்தனை சாத்தியமாகும்.மற்ற நேரங்களில் முடியாது தானே!

அப்படியிருக்கும் போது நீங்களே ஏன் உங்களை இன்னொருவருடன் ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்?

எதை வைத்து உங்களை விட இன்னொருவன் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்று முடிவு செய்கிறீர்கள்..?

வயது,படிப்பு,பணம்,அனுபவம்,திறமை,வீரம்-இவற்றை வைத்து தானா..இவைகள் எப்படி அளவுகோலாயின?-எல்லாம் பித்துப்பிடித்த மனதின் செல்லரிப்புகளின் விளைவு?

அப்படியெனில் நாம் முன்னேறுவதற்கு யாருடன் தான் நம்மை ஒப்பீட்டுக் கொள்வது என்று தோன்றுகிறதல்லவ்வா?

ஒப்பிட்டு கொள்ளவும் ஒருவர் இவ்வுலகத்தில் இருக்கிறார் என்றால்,அது நீங்கள்...நீங்கள் மட்டும் தான்-நீ தான் என்றும் உனக்கு நிகரானவன்,இன்னொருவன் அல்ல..ஏனெனில் நேற்று நீ போட்டி போட்ட ஒருவன் நாளை எப்படி இருப்பான் என்பது யாருக்குமே தெரியாது. உன்னை தவிர மற்ற எல்லாமே மாயை தான்..நீங்கள் தான் நிஜம்.

இதை புரிந்துகொண்டால் ஆசை,காமம்,வன்மம்,பொறாமை எல்லாம் நீர்த்துப் போய் மனதில் அமைதி பிறக்கும்.அன்றைய பொழுதின் ஒவ்வொரு செயலுக்கும் காரணகர்த்தா நாம் தான் என்று விளங்கும்.மனமகிழ்ச்சியும் கிடைக்கும்..

ஆகவே நண்பர்களே..என்று பேசிக்கொண்டிருக்கும் போதே,பிரத்யாவின் கவனம் அவளையும் அறியாமல் மேடைக்கு இடது புறமிருந்த அறைப்பக்கம் செல்ல,கையில் சில காகிதங்களை படித்தபடி வந்தான் அருண்...

திடீரென்று இன்ப படபடப்பு இவளுள்! எல்லாம் சில நொடிகள் தான்.உடனே சுதாரித்துக்கொண்டாள்.

அதற்குள் குருஜிக்கு அடுத்தபடியாக இன்னொரு ஆசாமி பேச வர,அதை காது கொடுத்து கேட்கவேல்லாம் அவளுக்கு பொறுமையே இல்லை.

“போகலாம் மது”

“இருப்பா.நல்லா பேசறாங்க”-ஆசாமியின் பேச்சில் முழுவதுமாய் மூழ்கி போய்விட்டாள் என்பது இதிலிருந்தே தெரிந்திருக்கும் அல்லவா!

பல்லை நறநறவென்று கடித்தவள்,”இப்போ நீ வர போறியா,இல்லையா?”காதில் காத்த,வேறு வழியில்லாமல் புறப்பட,ஸ்ரீஷா குட்டி தூங்கியிருந்தாள்.(ஹி ஹீ..நானும் தான் தூங்கிட்டேன்).


காரை எடுக்க பார்க்கிங் பக்கம் செல்ல,இவர்களை தாண்டி சென்ற காரில் அருண் இருந்தான்.அவனும் பார்த்தான்.இவளும் பார்த்தாள் தான்..

பேச வேண்டுமென்று இருவருமே நினைக்கவில்லை..பார்த்த உடன் ஓடி ஒளிந்துகொள்ள தான் இருவருக்குமே தோன்றியது..

இது என்ன காதலோ!!


No comments:

Post a Comment