KAANUM YAAVUM NEEYAAGA-8

 

அத்தியாயம் 8

விக்னேஷ் தன்னுடைய அன்றாட வேலைகளை பார்ப்பதற்காக,ஷங்கரை எழுப்ப,அவனோ இரவு தூங்கததால் எழுந்துகொள்ள மறுத்து,தூங்கிக் கொண்டிருந்தான்.

விக்னேஷிற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவேயில்லை.

மிகவும் சிரமப்பட்டு,பாத்ரூம் சென்று வந்தவன்,டேபிளில் கிளாசில் இருந்த நீரை எடுத்து,அப்படியே தம்பியின் முகத்தின் மேல் ஊற்ற,அலறியடித்துக்கொண்டு எழுந்தான்.

ஐயோ பேய்கத்திக்கொண்டே எழுந்தவன்,எதிரில் அண்ணன் நிற்கவும்,முகத்தில் வழிந்த நீரை துடைத்துவிட்டு,

நீதான் தண்ணியை ஊத்தினியா..நான் கூட பேய்னு நினைச்சுட்டேன்’”என்று நிம்மதியானான்.

உன்னை எதுக்காக நான் கூப்பிட்டேன்..நீ என்ன செய்துட்டு இருக்க?”கோபத்தில் கத்தவும்,

நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு தெரியும்லண்ணா..அதான் இப்போ தூங்கிட்டேன்..இதுக்கு போய் இவ்வளவு கோபப்படுவியா..?”சாதுவாக தான் கேட்டான்..!

ஷங்கரால் அண்ணனிடம் எப்போதும் கோபப்பட்டு பேச முடியாது.இதுவரை அவனுக்கு ஏற்றாற்போல்,வளைந்து கொடுத்தே பழகிவிட்டான்.

பொறுமையாக,”சாரிண்ணா..இனி இப்படி நடந்துக்காம பார்த்துக்கறேன்என்றவன்,சிறிது நேரத்தில் தயாராகி,வெளியே சென்று பிளாஸ்க்கில் காபி வாங்கிக்கொண்டு வந்தான்.

அண்ணனுக்கு ஒரு கப்பில்,காபியை ஊற்றிக் கொடுத்தவன்,தானும் எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

விக்னேஷ் அமைதியாக,காபியை பருகிக் கொண்டிருக்க,”வீட்டு வேலைக்கு ஆளை வைச்சுக்கலாமே-ண்ணா..உனக்கு முடியாத நேரம்,உதவிக்கும் வருவாங்கஎன்றான்.

தம்பியின் பேச்சால்,கொஞ்சம் சாந்தமாகியிருந்தவன்,அவனின் கேள்விக்கும் பொறுமையாகவே பதில் கூறினான்.

நான் எப்போ வருவேன்,போவேன்னு தெரியாதுடா.. வீட்டுல அங்கங்க பணத்தை வேற போட்டு வைச்சிருப்பேன்.வேலைக்காரவங்கள நம்பி வெளிலையும் போக முடியாதுடா.இது சரிப்பட்டு வராது

உடம்பு சரியாகற வரைக்குமாவது,ஒரு ஆளை கூட வைச்சுக்கோண்ணா..நைட் நேரத்துல,திடீர்னு உனக்கு உதவி தேவைப்பட்டா,என்ன செய்ய முடியும்.நான் உன் மேல இருக்க அக்கறையில தான்,பேசறேன்

அவ்வளவு அக்கறை இருக்கவன்,கூடவே இருக்கணும்.விட்டுட்டு போகணும்னு நினைக்கக் கூடாது

நான் என்ன,வேணும்னேவா இருக்க மாட்டேன்னு சொல்றேன்.அம்மா,அப்பாவையும் யோசிக்கணும்ல-ண்ணா..நேத்து கூட அம்மாவுக்கு உடம்பு முடியல.என்கிட்ட சொல்லாம,அப்பா,அம்மா தனியா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திருக்காங்க..அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சுபேசிக்கொண்டே செல்லவும்,

போதும்டா..போதும்..உன்னோட செண்டிமெண்ட் படத்தை நிறுத்து.ஊருக்கு போகணும்னா போயிக்க.நான் தடுக்க போறதில்ல..இப்போ நான் பிரஷ் பண்ணணும்.எனக்கு ஹெல்ப் பண்ணுஎனவும்,

இவனை திருத்த முடியாதுசலித்துக்கொண்டவன்,அண்ணனுக்கு பல் துலக்க உதவியவன்,ஒன்பது மணிக்கு உணவு ஹோட்டலிலிருந்து வந்துவிடவும்,தட்டில் போட்டுக்கொண்டு வந்து ஊட்டியும் விட்டான்.

பாசக்கார பைய..’கேலியாய் விக்னேஷ் மனதில் நினைத்துக் கொண்டவன்,

உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா,அப்பவும் என்மேல இதே பாசத்தோட இருப்பியா ஷங்கர்சந்தேகமாக கேட்க,

கல்யாணம் ஆனா,நீ எனக்கு அண்ணன் இல்லைன்னு ஆகிடுமா..நீ என்னோட ரத்த சொந்தம்..சின்ன வயசுலயிருந்தே,என்னோட பர்ஸ்ட் பிரண்ட் நீ தான்-ண்ணா.உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்எனவும் தான் திருப்தியானான்.

இருந்த போதிலும்,தம்பிக்கு திருமண ஆசை வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில், தம்பியின் விருப்பத்தை அறிந்துகொள்வதற்காக,”எப்போ கல்யாணம் செய்துக்க போறகேட்கவும்,

உனக்கு பிறகு செய்துக்கலாம்னு பார்த்தேன்.ஆனா நீ எதுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கற.. நீன்னா மூணு நேரமும்,சாப்பாடை ஹோட்டல்ல வாங்கிக்கற.உனக்கு வருமானம் இருக்கு..என்னால அப்படி ஹோட்டல்லையே சாப்பிட முடியுமா..?

அம்மாவாலும் எனக்கு வேலை செய்ய முடியல.அவங்களுக்கு அப்புறம்,நான் எப்படி சமாளிக்க முடியும்.அதனால கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..”என்று ஏதோ வேண்டா வெறுப்பாக, திருமணம் செய்துகொள்ளப் போவது போல,வேண்டுமென்றே கூறவும் தான்,விக்னேஷ் சமாதானம் ஆனான்.

நீ சம்பளமில்லாத,வரதட்சணையோட வர்ற வேலைக்காரி தேடற..இது எனக்கு பிடிச்சிருக்குஎன்றவன்,

நானே உனக்கு பொண்ணு பார்த்து,எல்லா செலவையும் பண்ணி,கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.ஆனா எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்எனவும்,யோசனையாய் இப்போது என்ன வில்லங்கமாக கூறப் போகிறானோ என்று பதில் பேசாமல்,அண்ணனையே பார்க்க..

என்னடா பதிலை காணோம்மீண்டும் கேட்கவும்,

நீயே சொல்வேன்னு பார்த்தேன்னா.என்ன உதவி வேணும்பயத்துடனே கேட்க..

என் குழந்தையை வளர்க்கணும்என்று அணுகுண்டையே தூக்கி வீசினான்.

உனக்கு எப்போண்ணா கல்யாணம் ஆச்சு..எப்போ குழந்தை பிறந்துச்சு..அண்ணி இருக்காங்களா?”சந்தோஷம் கலந்த ஆர்வத்தோடு விசாரிக்க..

அண்ணியா..போடா இவனே...! செயற்கை முறையில வாடகைத்தாய் மூலமா,ஒரு ஆண் வாரிசை பெத்துக்கலாம்னு இருக்கேன்.நீ தான் அவனை வளர்க்கணும்.

என்னால கூட இருந்து வளர்க்க முடியாது.இந்த உதவியை மட்டும் பண்ணு..பையனோட செலவுக்கு நானே பணம் அனுப்பிடறேன்.அப்பாவோட சொத்துல மொத்த பங்கையும் உனக்கே கொடுத்துடறேன்என்று ஆசை காட்ட,

நீ எதுவும் கொடுக்கணும்னு அவசியம் இல்லண்ணா.உன்னோட குழந்தைன்னா,அது என்னோட குழந்தையும் தான்.இப்போ இந்த மாதிரி குழந்தை பெத்துக்கணும்னு என்ன அவசியம்..?

கொஞ்ச நாள் போகட்டும்..கல்யாணம் பண்ணி,உனக்கு ஒரு வாரிசை பெத்துக்க..அப்பவும் உன்னோட எண்ணத்துல மாற்றம் இல்லைன்னா, நீ சொன்னபடி செய்யலாம்..உன்னோட குழந்தையை வளர்க்கறது என்னோட பொறுப்புஎனவும் தம்பியை அணைத்துக்கொண்டான்.

***

ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த அண்ணனிடம் வந்த விஷ்வா,என் பிரண்ட் ஷங்கர் வீட்டை,நேத்து போய் பார்த்தேன் பிரதாப்.எல்லா வசதிகளோட,வீடு பார்க்கறதுக்கே அருமையா இருந்துச்சு..நீயும் ராதிகாவும்,ஒருதடவை பார்த்துட்டீங்கன்னா,நல்லா நாள் பார்த்து போயிடலாம்..உங்க ரெண்டு பேருக்கும் ஆபிஸ் பக்கமா போயிடும்எனவும் பிரதாப் யோசித்தான்.

இது ஆடி மாசம் விஷ்வா.வீடு மாத்தக் கூடாதுன்னு அம்மா சொல்வாங்க.ஆடி முடியவும்,அவங்க வீட்டுக்கு மாறிக்கலாம்எனவும்,ராதிகாவை பார்த்தான்.

அவளும் காலண்டரை மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு,ஆடி பிறந்து,ரெண்டு நாள் தான் ஆகியிருக்கு விஷ்வா...இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்குஎன்றவள்,

நல்லா படிச்ச நாமளும்,,எதுக்குங்க பஞ்சாங்கத்தை பார்த்துட்டு இருக்கணும்..என்று பேச வரும் போதே,தடை போட்ட பிரதாப்,

எனக்கு சாஸ்த்திர சம்பிரதாயங்கள் மேல,ரொம்ப நம்பிக்கை இருக்குன்னு,உனக்கு நல்லாவே தெரியும் ராதிகா..எவ்வளவு படிச்சாலும்,இந்த நம்பிக்கைகள் மாறாதுஉறுதியாக பேசவும்,ராதிகா..ஒன்றும் பேச முடியாது அமைதியாக,விஷ்வா..வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

சிறிது நேரத்திற்கு பின்,நான் மட்டும் கொஞ்ச நாளைக்கு ஹோட்டல்ல தங்கிக்கறேன்எனவும்,

அது சரிப்பட்டு வராது விஷ்வா..உன்னை என்கூட இருக்கதுக்கு தான்,கூட்டிட்டு வந்திருக்கேன்.உன்னை தனியா விட முடியாதுபிடிவாதமாக இருக்கவும்,

உனக்கு என்னோட பிரச்சனையோட தீவிரம் புரிய மாட்டேங்குதுண்ணா...இந்த சாரோட பொண்ணு,என்னவெல்லாம் பண்றா தெரியுமா..காலேஜ்ல எல்லாம் எங்களுக்குள்ள ஏதோ இருக்கதா, காசிப் பரவிக்கிடக்கு..என்னால முடியலண்ணா..தலையில் கைவைத்தபடி அமர,

அந்த பொண்ணே பயப்படாம,நீ வேணும்னு எல்லாம் செய்யுது..நீ ஏன்டா பயந்து சாகற..?நீ வேண்டாம்னு,வெறுக்கற அளவுக்கு,அந்த பொண்ணுகிட்ட,என்ன குறை இருக்கு சொல்லு..”என்று கேட்கவும்,

ராதிகா,”நீங்க ஏன்,திடீர்னு இப்படி பேசறீங்க..”எரிச்சல்பட..

“நம்ம விஷயத்தையே எடுத்துக்க ராதிகா..யார் முதல்ல லவ் சொன்னது? நீ தானே...அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?ஒரு பொண்ணு,தானா வந்து,என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றான்னும் போது,ஏதோ சாதிச்சிட்ட மாதிரி சந்தோஷமா இருந்துச்சு..நான் ரெண்டு நாள் தூங்கவே இல்ல..

“ஆனா இவன்..என்கூட பிறந்துட்டு,இப்படி லூசு மாதிரி இருக்கான்..ஒரு பொண்ணு லவ் சொன்னா...பெருமைப்பட வேண்டாம்”என்றெல்லாம் பேச..

‘லூசா நீ’என்பது போல விஷ்வா பார்த்தான்.

ராதிகாவும்,”எனக்கு நீங்க லவ் பண்றிங்கன்னு தெரியும்.ப்ரொபோஸ் செய்யறதுக்கு,ரொம்ப தயங்கினிங்க.அதான் நான் சொன்னேன்.ஆனா நந்தினி அப்படியில்லையே..விஷ்வாவுக்கு பிடிக்கலைன்னும் தெரிஞ்சும்,இப்படி பண்றாளே..?”எனவும்,

“ஒரே நேரத்துல,ரெண்டு பேருக்கும் லவ் வரணும்னு  அவசியமில்லையே ராதிகா.நம்ம விஷயத்துல,நான் தானே பர்ஸ்ட் லவ் பண்ணேன்..நீ போற இடத்துல எல்லாம்,விடாம வந்து துரத்தி,டார்ச்சர் பண்ணேன்..அப்புறம் தானே,உனக்கும் லவ் வந்துச்சு..!

“அதே மாதிரி தானே,நந்தினியும் அப்ரோச் பண்றா..இதுல எனக்கு எதுவும் தப்பு இருக்க மாதிரி தெரியல.ஊருக்குள்ள இவன விட பெஸ்ட்டா,ஆளா இல்ல...அப்படியிருக்கும் போது,பிடிச்சிருக்குன்னா,பேசிப்பழகி பார்க்க வேண்டியது தானே..ரொம்ப சீன் போடறான்”என்று தம்பியை திட்டவும்,

“எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா,அது தப்பாடா..எனக்கு விருப்பமில்லாத போது,நான் எப்படி ஏத்துக்கறது..?நான் பிடிக்கலைன்னு சொல்லும் போதே,இப்படி டாமினேட் பண்ணிட்டு இருக்கா..பிடிச்சிருக்குன்னு சொன்னா,காலம் முழுக்க,அடிமையா தான் வாழணும்..என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாதுப்பா..

“எனக்கு கல்யாணம்னு நடந்தா,அது அம்மா,அப்பா பார்த்து நடத்தி வைச்சதா தான் இருக்கும்.லவ் மேரேஜ் எல்லாம்,எனக்கு செட் ஆகாது..இனி நீ இப்படி பேசாத பிரதாப்.உன்மேலையே எனக்கு கோபம் கோபமா வருது?”என்று எரிச்சல்படவும்,

“நல்லது சொன்னா கேட்க மாட்டேங்கற..இனி உன்னோட தலையெழுத்து,எப்படியோ அப்படியே நடக்கட்டும்..ஆனா நாங்க இருக்க இடத்துல தான் நீயும் இருக்கணும்..இதுல எந்த மாற்றமும் இல்ல”என்று உறுதியாக சொல்லிவிடவும்,விஷ்வாவும் அமைதியாகிவிட்டான்.

அவன் மனதில் மீண்டும் ஏதோ தவறு செய்வது போல இருக்க,அமான ஆறுதலுக்காக அம்மாவிற்கு போன் செய்தான்.

“எப்படியிருக்க ராஜா”கவலையோடு கேட்கவும்,

“நான் நல்லாயிருக்கேன்மா..அப்பா எப்படி இருக்கார்..நீ எப்படி இருக்க?”அதே கவலையோடு விஷ்வாவும் கேட்க..

“நீ இல்லாம,நாங்க எப்படி சந்தோஷமா இருப்போம் விஷ்வா...உன்னை அங்க விட்டுட்டு,என்னால நிம்மதியாவே இருக்க முடியல..உன்னை எப்போ பார்ப்போம்னு இருக்கு ராஜா”கவலைப்பட்டவரிடம்,

“இந்த வாரம் லீவுக்கு,ஊருக்கு வந்து உங்களை பார்த்துட்டு வரட்டுமா-ம்மா..எனக்கும் உங்க ஞாபகமாவே இருக்கு”எனவும்,

பதறிய ராணி,”அதெல்லாம் வேண்டாம்-ப்பா..இந்த நேரத்துல,தனியா இவ்வளவு நேரம் பயணம் செய்யக் கூடாது.எனக்கு நீ எங்க இருந்தாலும்,நல்லா இருக்கணும்..அவ்வளவு தான்..அண்ணன் உன்னை நல்லா பார்த்துக்கறான் தானே..”என்று கேட்கவும்,

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லம்மா..எனக்கு தான் உங்களை பார்க்கணும் போல இருக்கு.என்ன செய்யலாம்”அவரிடமே கேட்க..

“நாங்க,அங்க வர பார்க்கறோம் விஷ்வா”என்று கூறவும்,

“அப்போ இன்னைக்கு நைட்டே,ட்ரைன் டிக்கெட் புக் பண்ணிடவா-ம்மா”ஆர்வமாக கேட்க,

“இங்க கொஞ்ச வேலைகள் எல்லாம் இருக்குப்பா..முடிச்சிட்டு சொல்றேன்.அப்போ நீ டிக்கெட் போடு”எனவும் ஏமாற்றமாய்,எதுவும் பேசாது அமைதியாக இருக்க,

“என்னடா ராஜா,அமைதியா இருக்க..?”கவலை அதிகமாகி கேட்கவும்,

“ப்ச்..ஒண்ணுமில்லம்மா”என்றவன்,

நினைவு வந்தவனாய்,”என்னோட பைக் எங்கம்மா..”விசாரித்தான்.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,அவசரத்தில்,”அந்த பைக் ராசியில்லன்னு சொன்னாங்கப்பா..அதான் வித்துட்டோம்”என்றார்.

“என்னை கேட்காம ஏன் வித்திங்கம்மா..அது என்னோட பேவரட் பைக் தெரியுமா?”என்று கத்தவும்,

“எனக்கு தெரியாதா ராஜா..!இந்த வண்டி வந்த நேரம் தான்,இப்படி ஆகிடுச்சுன்னு சொல்லும் போது,எப்படி வீட்டுலையே வைச்சிருக்கது..? உனக்கு உடம்பு சரியானவுடனே,புதுசா அதே மாதிரி பைக் எடுத்துக்கலாம் ராஜா..கோபப்படாத..”என்று சமாதானம் செய்யவும்,விஷ்வாவும் அம்மாவை எதுவும் திட்ட முடியாமல்,சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தவன்,அண்ணனிடம் நேராக வந்தான்.

“என் பைக் வித்தது,உனக்கு தெரியுமா?”எனவும்,

‘இது எப்போ நடந்துச்சு’என்று யோசிக்கும் நேரம்,கணவனுக்கு உதவிக்கு வந்தாள் ராதிகா.

மாமியாருடன் நடந்த் உரையாடலை,அவள் கேட்டுக்கொண்டு தானே இருந்தாள்.

அதனால்,”தெரியும் விஷ்வா..ராசியில்லன்னு விற்க போறதா சொன்னாங்க..அதனால நாங்க எதுவும் மறுத்துப் பேசலை”என்றவள்,கணவனிடம் கண் காட்டினாள்.

அவனும்,”ஆமாம் விஷ்வா”என்றான்.

“அந்த பைக் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..ப்ச்..இத்தனை நாள் அந்த பைக் கூட..ஞாபகம் வராத அளவுக்கு இருந்திருக்கேன்.இந்த ஞாபக மறதி,எப்போ தான் போகுமோ..இன்னும் எத்தனை விஷயங்கள் மறந்திருக்கேனோ..தெரியல..முதல்ல டாக்டர்கிட்ட போய்,எனக்கு எப்போ ஞாபக மறதி போகும்னு கேட்கணும்”எனவும்,

“அதுவே சரியாகிடும்னு,உன் முன்னாடி தானே டாக்டர் சொன்னார்.மறுபடியும் கேட்டா,அவர் ட்ரீட்மென்ட் மேல சந்தேகபடறேன்னு நினைச்சுக்குவார் விஷ்வா...இந்த பைக் தவிர,வேற எதையும் நாங்க மறைக்கல..நீயும் மறக்கல..”சமாதானம் செய்ய முயற்சி செய்தும்,இந்த முறை விஷ்வாவிடம் பலனில்லை.

“எனக்கு என்னவோ,நிறைய விஷயங்கள் மறந்து போன மாதிரி இருக்கு.அதுலயும் ஆக்சிடென்ட் ஆன,ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் தான்,ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..ஒருவேளை நான் வாழ்ந்த சூழ்நிலைக்கு திரும்பவும் போனா..பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுமா”என்றெல்லாம் கேட்க..

“உன்னோட அந்த மூணு மாசத்துல,நீ பெருசா என்ன பண்ணியிருப்ப விஷ்வா..எப்பவும் போல வேலைக்கு போயிருப்ப..வீட்டுக்கு வந்து கிளாஸ்-க்கு தேவையான நோட்ஸ் எடுத்துட்டு தூங்கியிருப்ப..வேற ஒண்ணும் பெருசா நடந்துடல..இதெல்லாம் ஞாபகம் வந்து,நீ என்ன பண்ண போற...விட்டு தள்ளு..”என்றவன்,

“சாப்பாடு எடுத்து வை ராதிகா”என்று பேச்சை மாற்றியவன்,

“வாடா..சாப்பிடலாம்”என்று அழைத்து சென்றான்.

சாப்பிடும் வேளையில்,அண்ணனுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாலும்,பைக்கின் ஞாபகம் மட்டும் அவனை விட்டு அகலவில்லை.

முகம் வாடிப்போய் அமர்ந்திருந்தவனிடம்,”நாளைக்கே புது பைக் வாங்கிடலாம் விஷ்வா..ஷோரூம் போகலாம்”எனவும்,

“வேண்டாம் பிரதாப்..கால் முழுசா சரியானதும் வாங்கிக்கலாம்”என்றவன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்ள..

கதவை தட்டிய பிரதாப்..”ஆதவ் தூங்க வருவான்டா..கதவை திற”எனவும்,

“எனக்கு தனியா தூங்கணும் போல இருக்குண்ணா..இன்னைக்கு வேண்டாம்னு சொல்லிடு”என்று கதவை திறக்க மறுக்க..

“அப்போ கதவை திறந்தாவது வைடா”என்று அதட்டவும்,

“நீ எதுவும் பேசாம,போ பிரதாப்”எனவும் பிரதாப்பிற்கு கோபம் வந்துவிட்டது.

“உன் மேல இருக்க அக்கறையில தான்,கதவை திறக்க சொல்றேன் விஷ்வா..என் பேச்சை கேட்க மாட்டேன்னா..இனி நான் எப்பவும்,உன்கூட பேசவே மாட்டேன்”என்று உறுதியாக கூறிய பின்னரும்,விஷ்வா கதவை திறக்காமல் இருக்க..கோபத்தின் உச்சியில் பிரதாப் கதவை,தன் வலு கொண்ட மட்டும் உதைத்தான்..

ராதிகா கதவு உடைந்து போய்விடுமோ என்ற பயத்தில்,”என்ன பண்ணிட்டு இருக்கீங்க”என்று அதட்ட..கதவை திறந்த விஷ்வா..

“மனசு ரொம்ப வலிக்குது பிரதாப்..நீ உன் பங்குக்கு,என் வேதனையை கூட்டாதே..ப்ளீஸ்”என்றவன் கதவை திறந்து வைத்துவிட்டே படுத்துக்கொள்ள..

“தனியா விட்டுடுவோம் பிரதாப்”என்ற ராதிகா..கணவனை அழைத்து சென்றாள்.

“இன்னைக்கு ஏன் திடீர்னு இப்படி நடந்துக்கறான்..?இன்னும் எவ்வளவு நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்..?எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு ராதிகா”என்றவன்

“ஹால்ல நான் படுத்துக்கறேன்”என்றான்.

“நானும் கீழ விரிச்சு படுத்துக்கறேன்.எனக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் அக்கறை இருக்கு”

“எங்க குடும்பத்துல வாழ வந்துட்டு,உனக்கு தான் ரொம்ப கஷ்டம்..”

“உங்களுக்காக நான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக்குவேன்..”என்று சிரித்தவள்,

“நாளைக்கு பைக் வாங்கிடலாம்.விஷ்வாவே முயற்சி பண்ணி ஓட்டட்டும்..அப்படியே பழைய பைக்கை மறந்துடுவான்”என்றாள்.

“இதேயே தான் நானும் நினைச்சேன்..ஆனா பைக் விஷயம் இல்ல..!நந்தினிய லவ் பண்ணிட்டா..ஈசியா அவனோட கடந்த காலத்துல இருந்து,மீண்டு வந்துடுவான்னு நினைச்சேன்..நீயும் அவனுக்கு புரிய வை”எனவும்,

“பைக் உயிரில்லாத பொருள் பிரதாப்.நந்தினி...எல்லா உணர்வும் உள்ள ஒரு பொண்ணு...அவளுக்கு உண்மை தெரிஞ்சா...? எல்லாரும் சேர்ந்து,ஏமாத்திட்டதா நினைக்க மாட்டாளா...? சுயநலமா யோசிக்கக் கூடாதுங்க...”என்றவள்,

கணவனை அர்த்தமாய் பார்த்தவள்,”ஆம்பளைங்க மனசு கல் தான் இல்லையா பிரதாப்..ஈசியா மனசு மாறிடறீங்க....?”என்றவள்,ஹாலில் போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டாள்.

இதற்கு பதில் கூறினால்,அது தனக்கே எதிராக வந்து முடியும் என்பதால்,அமைதியாக ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக்கொண்டான்.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த விஷ்வா, ஒரு மணியளவில் எழுந்துகொண்டவன்,ஹாலில் அண்ணன்,அண்ணி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கியவன்..மெதுவாய் கதவை திறந்துகொண்டு  வெளியே சென்றான்.

வெளியே அமர்வதற்காக போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்தவன்,எதையும் யோசிக்காது அமைதியாக அமர்ந்திருக்க...குளிர்ந்த தென்றல் காற்று முகத்தில் மோதவும்,மதி மயங்கிப் போய் அமர்ந்திருந்தான்.

சில நொடிகள் என்ன நடந்ததென்றே தெரியாத அளவுக்கு,இனம் புரியாத நிம்மதியில் அமர்ந்திருந்தவனின்,போன் அடிக்க..இரவு நேர அமைதியில்,அந்த சத்தம்,பதட்டத்தை கொடுக்க,அவசரமாக எடுத்தவன் யாரென்று பார்த்தான்..நந்தினி என்றிருந்தது.

இந்த நேரத்தில் என்னவென்று போன் எடுத்தவன்,”வீட்டுல யாருக்கும் முடியலையா?”பதட்டத்தோடு தான் கேட்டான்.

“எங்களுக்கு ஒண்ணும் இல்ல விஷ்வா...உங்க வீட்டுக்கு வெளில உட்கார்ந்திருக்கது நீங்களா..?”கேட்கவும்,

“ஆமாம்..நான் தான் உட்கார்ந்திருக்கேன்..நீ இன்னும் தூங்கலையா..?”ஆச்சர்யமாக கேட்க..

“தூங்கிட்டு தான் இருந்தேன் விஷ்வா..ஏதோவொரு உள்ளுணர்வில எழுந்து,ஜன்னல் பக்கம் வந்து பார்த்தேன்..நீங்க இருக்கீங்க..ஆர் யூ ஓகே..?”அக்கறையாக கேட்க..

“தூக்கம் வரல..அதான் வந்தேன்...இப்போ போயிடுவேன்..பாய்”என்று போனை வைத்தவன்,உடனடியாக உள்ளே செல்ல..ஒருநொடி,நந்தினி இருக்கும் அறைப்பக்கம் திரும்பி பார்த்தான்.

அவள் பார்ப்பது நன்றாக தெரிந்தது..

“உள்ள போ”என்று கையசைத்துவிட்டு,வீட்டிற்குள் சென்றவன்,இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணனையும்,அண்ணியையும் பார்த்துவிட்டு,”எனக்கு நல்ல காவல்..”நக்கலாய் சிரித்துக்கொண்டு படுக்கையில் விழுந்தான்.

மனம் அமைதிப்பட்டிருந்தாலும்..’என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாளோ..? என்னோட கவலையெல்லாம் புரிஞ்சுக்க முடியுதுன்னா..உண்மையான காதல் தானோ..’என்றெல்லாம் யோசித்தான்..

நந்தினியின் மேலிருந்த பிடித்தமின்மை..கோபம் எல்லாம் கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்ததை,அந்த கணம் விஷ்வாவும் உணர்ந்தான்.

No comments:

Post a Comment