Ullam unnile moozhguthe-Final ud

 Hi friends,final ud potta achu


https://drive.google.com/file/d/1_Knllh7hHA5MA_f6aiTm6pfUDEYBDu2d/view?usp=sharing

ULLAM UNNILE MOOZHGUDHE-33

 

அத்தியாயம் 33

அதிகாலையில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு,வீட்டுக் கதவை திறந்த மஞ்சுளா,அங்கே நின்றிருந்த மகன்,மருமகளை கண்டு ஆச்சர்யப்பட்டு தான் போனார்.

வீட்டுக்கு வறீங்கன்னு,ஒரு போன் கூட பண்ணி சொல்லலசந்தோஷத்துடன் குறைபட்டுக் கொண்டவர்,

உள்ள வாங்கஎன்று அழைத்து சென்றார்.

பால் காய்ச்சி தரேன்.குடிச்சிட்டு போய் தூங்குங்க.ஒரு பத்து மணிய போல எழுப்பிவிடறேன்எனவும்,

சரிம்மாஎன்றவன் பாலை அருந்திவிட்டு, தனது அறைக்குள் செல்லப் போக,காவ்யா மஞ்சுளாவின் பின்னே சென்றாள்.

அவளை தடுத்தவன்,”நைட் ட்ராவல் பண்ணியிருக்கோம்.கொஞ்ச நேரம் தூங்கி பிரெஷ் ஆகிட்டு,அப்புறம் உன் அத்தையோட பின்னாடியே சுத்துஎனவும்,

மஞ்சுளாவும்,”நீ போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா காவ்யா.அப்புறம் பேசுவோம்என்றார்.

மாமாவை பார்க்கணும் அத்தைஎனவும்,

அவர் இப்போவெல்லாம் லேட்டா தான் எழுந்திருக்கிறாரு..நீ இப்போ எப்படி கூப்பிட்டாலும்,முழிக்க மாட்டார்.நீ போஎன்று அழுத்தமாக சொல்லவும்,அவளால் அத்தையை மறுத்து பேச முடியாமல்,சக்தியை பார்த்தாள்.

அவன் சாதாரணமாக பார்ப்பதும் கூட,காவ்யாவின் கண்ணிற்கு, வெற்றிக்களிப்புடன் பார்ப்பது போல தோன்றவே,அவனை பார்க்க பிடிக்காமல் அறைக்குள் சென்று,கீழே போர்வையை விரித்து படுக்க போனாள்.

சக்தியும் கீழேயே படுக்க வர,”நீங்க பெட்ல படுங்க மாமா.நம்ம வீட்டுக்கு ஆளுங்க வந்து போயிட்டே இருப்பாங்க.கதவு திறந்தே இருக்கட்டும்னு தான்,கீழ படுத்திருக்கேன்எனவும்,

நீ சொல்றது கரெக்ட் தான்..ஆனால் இந்த ஸ்டேட்மெண்ட் நைட்-க்கு ஒத்து வராது.நான் கேட்கவும் மாட்டேன்..ஏன்னா..என்னால உன்னை விட்டு இருக்க முடியாது பொண்டாட்டிஎன்று மனைவியின் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,கட்டிலில் படுத்துக்கொள்ளவும்,காவ்யாவும் உடல் அசதியில் கண் மூடினாள்.

அந்தப் பக்கம் வந்த மஞ்சுளா,கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பிள்ளைகளை பார்த்துவிட்டு,கதவை நன்றாக அடைத்துவிட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த தனசேகரன்,”மருமக வந்துடுச்சாஆசையாக கேட்டார்.

மகனும் வந்திருக்கான்

அவன்கிட்ட ரிஷப்ஷன்-க்கு,இன்விடேஷன் அடிப்போமா..இல்ல சொந்தக்கரவங்களுக்கு,சும்மா போன் பண்ணி மட்டும் சொல்லலாமான்னு கேளு

அதை நீங்களே கேட்டுக்கோங்க.இதுநாள் வரைக்கும் எலியும்,பூனையுமா இருந்தது போதும்.இனியும் உங்க ரெண்டு பேருக்கு நடுவில,மீடியேட்டர் வேலை என்னால பார்க்க முடியாது

நீ பார்க்கலைன்னா என்ன..?என் மருமகள விட்டு கேட்டுட்டு போறேன்

சக்தி முன்னாடியெல்லாம்,ஏன் உங்ககிட்ட கோபப்பட்டுட்டு இருந்தான்னு யோசிச்சிங்களா?நீங்க காவ்யா என்ன தப்பு பண்ணாலும்,அவளுக்கே சப்போர்ட் பண்ணுவீங்க!

அதனால தான் அவன் கோபப்பட்டு இருந்தான்.இப்போ தான் காவ்யா அவனுக்கு போண்டாட்டியாகிட்டால்ல..!இனி நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணா,சந்தோஷம் தான் படுவான்.

இனியாவது அப்பாவும்,மகனும்..சந்தோஷமா பேசி சிரிச்சுட்டு இருங்கப்பா..!நீங்க ரெண்டு பேரும்,இப்படி இருக்கதை பார்த்து,எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமாஎன்று என்றுமில்லாமல் இன்று உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட..

எனக்கு மட்டும்,அவன்கூட பிரண்ட் மாதிரி பழகணும்னு ஆசையில்லையா மஞ்சு.!.சின்ன வயசுல காவ்யாவுக்காக,சக்தியை கொஞ்சம் அதட்டுவேன் தான்..!!

அது அவனை இவ்வளவு பாதிக்கும்னு நான் யோசிக்கவே இல்ல..!காவ்யா ஏங்கி போயிடுவான்னு,யோசிச்ச நான்,சக்தி ஏங்கி தவிப்பான்னு யோசிக்காம போயிட்டேன்..!

சக்தி முகத்தை சுழிச்சு,என்னை ஒரு மாதிரி பார்க்கும் போதெல்லாம்,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் மஞ்சு.உன்கிட்டவும் சொல்லியிருக்கேன்.எல்லாம் தெரிஞ்சும்,என்னால அவனோட சரியா இருக்க முடியல..!

அவனும் நாம எடுத்து சொல்றத புரிஞ்சுக்கிட்டு,காவ்யாவையும் இந்த வீட்டு பொண்ணா பார்த்திருந்தா,நான் எதுக்கு அவனை திட்ட போறேன்.ஏதோ அந்த பொண்ணை,எதிரி மாதிரி பார்ப்பான்.சில நேரம் அவன் கண்ல வர்ற அந்த வெறுப்பை பார்த்தே,இன்னும் அதிகமா.. காவ்யாவை கவனிக்க ஆரம்பிச்சேன்என்று மகனை குட்டி வில்லன் போல் தனசேகரன் பேச,

இப்போ தான் ரெண்டு பேரும் ராசியாகிட்டாங்களே-ங்க.இனி நீங்க அவனோட சகஜமா இருங்க.அவ்வளவு தான் சொல்வேன்எனவும்,ஏதோ பேச வந்தவரை தடுத்த மஞ்சுளா,

என் முடிவு இது தான்.நீங்க அவன்கிட்ட இப்படி தான் நடக்கணும்.தேவையில்லாம அவன் மேல குறை இருக்குன்னு,நிரூபிக்க நினைக்காதீங்க.அவன் நம்ம மகன்..”என்றவர்,அவர் கையில பையை எடுத்துக் கொடுத்து,

கறி வாங்கிட்டு வாங்க.சீக்கிரமா போனா தான்,நல்லதா போடுவான்என்று விரட்டவும்,ஒன்றும் சொல்ல இயலாதவராய் கறிக்கடைக்கு சென்றார் தனசேகரன்.  

அவர் வீட்டுக்கு திரும்பி வரும் போது,காவ்யா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கவும்,”இதையெல்லாம் நீ ஏன்மா செய்யற..!அத்தை பார்த்துக்குவா..விடுஎனவும்,

இவர்கள் பேச்சில் இடையிட்ட சக்தி,”ஏன் அம்மா மட்டும் தான்,எப்பவும் வேலை செய்யணுமோ..!உங்க மருமக வேலை செஞ்சா,குறைஞ்சு போயிடுவாளா..?”என்றவன்,

இன்னைக்கு நீ தான் சமைக்கிற காவ்யா..! அம்மா இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்என்றான்.

மஞ்சுளா கணவனையும்,மகனையும் முறைத்தவர்,”ரெண்டு பேரும் சண்டையை ஆரம்பிச்சிட்டிங்களா? இப்போ உங்களால,எனக்கும் காவ்யாவுக்கும்,மாமியார் மருமக சண்டை வரப் போகுது...!

நாங்க ஆளுக்கொரு வேலையை பார்த்து,சமையலை முடிச்சுக்கறோம்..அப்பாவும்,மகனும் அவங்கவங்க வேலைகளை பார்க்க போங்க..!ஹால்ல இருக்கவே கூடாது.கிளம்புங்கஎன்று அதட்டல் போடவும்,இருவருமே அடங்கி தான் போனார்கள். 

அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட மஞ்சுளா,”என்னவோ உன்கிட்ட மாற்றம் தெரியுது காவ்யா..!ஏன் டல்லா இருக்க?”சரியாக கவனித்து கேட்கவும்,

நைட் ட்ராவல் பண்ணதுனால அப்படி இருக்கு-த்தை.வேற ஒண்ணுமில்லைஎனவும்,

வேற எதுவும் இல்லைன்னா,ரொம்ப சந்தோஷம் தான்.எதையும் மனசிலையே போட்டு,குழப்பிக்கக் கூடாது.யார்கிட்டவாவது மனம்விட்டு பேசி,தெளிவாகிக்கணும்என்றவர்,

யமுனாவும் சிவாவும் வர்றேன்னு சொல்லியிருக்காங்க..!அவங்களுக்கும் சேர்ந்தே லஞ்ச் ரெடி பண்ணணும்..சீக்கிரம் வேலையை பார்ப்போம் வா..அப்போதான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்என்றவர்,

டீயை போட்டு அவள் கையில் கொடுத்து,”சக்திக்கும்,மாமாவுக்கும் கொடுத்துட்டு சீக்கிரம் வா.அவங்களோட பேச்சுக் கொடுக்காத! அப்புறம் உனக்கு தான் ரிஸ்க்என்று மகனையும்,கணவரையும் பற்றி அறிந்தவராய்,எடுத்து சொல்லவும்,காவ்யாவுக்கும் இது தெரியுமென்பதால்,முதலில் தனசேகரனுக்கு கொடுத்து,இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு,கணவனின் அறைக்கு வந்தாள்.

அவளுக்கு நன்கு தெரியும்..சக்தி அவ்வளவு சீக்கிரம் தன்னை வெளியே போகவிட மாட்டான் என்று..!அதனாலையே மாமனுக்கு கொடுத்துவிட்டு,அவனிடம் டீ கப்பை நீட்டவும்,”உட்கார்என்றான்.

வேலையிருக்கு

அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி,எல்லா வேலையும் நானே செய்யணும்னு சொன்னிங்க..! இப்போ இப்படி பேசறிங்கபுரிந்தும் புரியாதவள் போல் கேட்க,

அப்போ அப்பாவை வம்புக்கு இழுக்கறதுக்காக,அப்படி பேசினேன்..!இப்போ நான் உன்னை இங்க இருக்க சொல்றதுக்கு காரணம் இருக்கு.இந்த இன்விடேஷன் பார்..நல்லாயிருக்கா..?”என்று ரிஷப்ஷனுக்கான அழைப்பிதழை காட்டவும்,

நல்லாயிருக்கு மாமாஎன்று மட்டும் சொல்லிவிட்டு,வெளியே வந்துவிட்டாள்.சக்தியும் தடுக்கவில்லை..

மின்னஞ்சலில்,வாட்ஸ்அப்பில் நெருங்கியவர்களுக்கு இன்விடேஷனை அனுப்பும் பணியில் ஈடுபட்டவன்,சொந்தக்காரர்களுக்கு மட்டும் போன் செய்து தகவலை தெரிவித்துவிட்டு,யாரையும் நேரில் அழைக்க முடியாததிற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டான்.

காவ்யா எதையோ யோசித்துக்கொண்டு வருவதை பார்த்த மஞ்சளா,என்ன ஆச்சுஎன்று கேட்கவும்,

நேத்து தான் ரிஷப்ஷன் வைக்கலாம்னு முடிவு பண்ணோம்.உங்க பிள்ளை நாளன்னைக்கு ரிஷப்ஷன்னு சொல்லிட்டு இருக்காங்க..!அதுக்குள்ள எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட முடியுமாத்தைஎனவும்,

அது அவன்பாடு..!நீ ஏன் கவலைப்படற..என்றவர் மருமகள் இன்னும் யோசிப்பதை உணர்ந்து,செய்ய முடியும்னு நினைச்சதுனால தானே,ரெண்டு நாள்ல ஏற்பாடு பண்ணியிருக்கான்..எல்லாத்துக்கும் இங்க ஆள் இருக்கு.போன் செஞ்சா,எல்லா வேலையும் அவங்களே பார்த்துப்பாங்க.

நீ பார்லர் போய்,உன்னை அழகுபடுத்திக்கற வேலையை மட்டும் பார்..!உன்னோட சேலை டிசைன் கூட வந்துடுச்சு..என்று வாட்சப்பில் எடுத்து காமிக்க,

என் கூட தான இருந்தீங்கத்தை..எப்போ இதெல்லாம் பார்த்தீங்க..!ஆச்சயமாய் கேட்கவும்,

சக்தி நம்பர் கொடுத்தான்.அவங்க தான் எனக்கு டிசைன் அனுப்பி வைச்சாங்க.சக்திக்கு இந்த சேரி ரொம்ப பிடிச்சு போச்சு...என்றவர்,

சக்தி உன்கூட இவ்வளவு இணக்கமா போவான்னு,நான் எதிர்பார்க்கவேயில்ல..!இன்னைக்கு காலையில இருந்தே நான் கவனிச்சிட்டே இருந்தேன் காவ்யா..!

அவன் பேசினா,அது உன்னைப் பற்றியதா தான் இருக்கு.ஏதாவது வேலை செஞ்சுட்டு இருந்தாலும்,அந்த வேலையும் உனக்கானதா தான் இருக்கு..!என்பிள்ளையோட இந்த மாற்றம் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்குன்னு உனக்கு தெரியாது..!

இப்போ போல எப்பவும் நீங்க ரெண்டு பேரும்,இதே சந்தோஷத்தோட இருக்கணும்.எனக்கு வாழ்க்கையில வேற எதுவுமே தேவையில்லஎன்று லேசாக துளிர்த்த கண்ணீரை சுண்டிவிட்டவர்,

உன்னோட அப்பா இருந்திருந்தா,ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார் காவ்யா..!இப்பவும் மேல இருந்து,உன்னை பார்த்து ஆசிர்வதிச்சுட்டு தான் இருப்பார்..”என்றார்.

காவ்யாவால் எப்படி அவரின் பேச்சை மறுத்து பேச முடியும்.சக்தியின் அன்பை,தனக்கான சிறப்பு கவனிப்பை முழுதாக உள்வாங்கியிருக்கிறாள் அல்லவா! அவனை குறைசொல்ல அவள் நா எழவில்லை..!மனமும் அதற்கு சம்மதிக்கவில்லை..!!

இருவரும் சேர்ந்து வேலையை முடிக்கும் சமயம்,சரியாக யமுனாவும்,சிவாவும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

யமுனா,வீட்டு வேலைகளை முடித்துவிட்டதை கவனித்தவர்,”நான் வந்ததுக்கப்புறம் செய்யலாம்னு சொன்னேனே-க்கா..!”என்று குறைபட்டுக்கொண்டவர்,தானே சென்று அனைவருக்கும் குடிக்க,ஜூஸ் போட்டுக்கொண்டு வந்தார்.

 

பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த சக்தியும்,”சித்திஎன்று வேகமாக ஓடி வந்து அவரின் அருகே அமர்ந்து கொண்டவன்,

அக்கா வீட்டுக்கு மட்டும் அடிக்கடி வந்து போற!சென்னைக்கு கூப்பிட்டா வர மாட்டேங்கற!!”என்று செல்லமாக கோபித்துக்கொள்ளவும்,

நாங்க மட்டும் எப்படி தனியா வர்றது சக்தி?உன்னோட தம்பி தங்கச்சியையும் பார்க்கணுமே..!அவங்களுக்கும் கிளாஸ் இருக்கே..!வர முடியாத சூழ்நிலை.கோவிச்சுக்காதப்பாஎன்று மகனை சமாதானம் செய்தார்.

சிவாவையும் சக்தி நலம் விசாரிக்க,காவ்யா வெறும் சிரிப்புடன்,அமர்ந்துகொண்டாள்.அவர்களது பேச்சில் அவ்வளவாக கலந்துகொள்ளவில்லை.அவள் முன்னேயும் அப்படித்தான் இருந்தாள்.அப்போது சக்திக்கு அவள் பேசுவது பிடிக்காது.

ஆனால் இப்போது அப்படியில்லையே..!அவளின் மாற்றம் சக்திக்கு மட்டும் புரிய..சித்தியிடம்,”உங்க மருமகளுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்கஎன்று மறைமுகமாக காவ்யாவிடம் வம்பு வளர்ப்பதற்கு ஆயத்தமானான்.

அது புரியாத யமுனாவோ,”என் மருமகளுக்கு நான் என்னவென்னவோ வாங்கிட்டு வருவேன்.அதெல்லாம் உனக்கெதுக்குஎன்றவர்,

நீ இங்கேயே செட்டில் ஆகப் போறியாமே..!மாமா சொன்னார்..எப்போ வரப்போற?”எனவும்,

இப்போதைக்கு இல்ல சித்தி..!வயசு இருக்கும் போது தான் பணம் சம்பாதிக்க முடியும்.இங்க இருந்தா,அது முடியாது.கொஞ்சம் எனக்கும் வயசாகட்டும்.அப்போ இங்கேயே செட்டில் ஆகிக்கறேன்எனவும்,

சிவா,”வயசானதுக்கு அப்புறம் இங்க வந்து என்ன செய்ய போற சக்தி!செட்டில் ஆனதுக்கப்புறம் தான் கிராமத்து சைட் வரணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.

உங்க மாதிரி யங்ஸ்டர்ஸ் எல்லாம் ஏன் இப்படி யோசிக்கிறிங்கன்னு புரியவேயில்ல.இங்கேயும் மாற்றம் வரணும்.இங்க இருக்கவங்களும் முன்னேறணும்.அதுக்கு ஏதாவது ஸ்டேப் எடுக்கலாமே..!

 

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா..நீ சம்பாதிச்சு தான் மூணு வேலையும் சாப்பிடணும்னு இல்ல..!உனக்கான வசதி வாய்ப்புக்கு எல்லா ரிசோர்ஸும் இருக்கு.அப்போ இந்த சமூகத்து மேலையும்,நீ கொஞ்சம் அக்கறை காட்டலாமே..!

நீ எவ்வளவு சம்பாதிச்சாலும்,உன்னால மூணு வேலை தான் சாப்பிட முடியும் சக்தி..!அதுக்கு மேல நீ எவ்வளவு முயற்சி செஞ்சாலும் முடியாது..!பணம் தான் வாழ்க்கைல குறிக்கோள்-ன்ற எண்ணத்தை விட்டு வெளில வாஎனவும் சக்தியால் எதுவும் பேச இயலவில்லை.

அங்கே ஓர் அமைதி நிலவ,யமுனா தான் வேறேதோ பேசி சூழ்நிலையை கலகலப்பாக்கினார்.அவரது பேச்சில் சக்தி கலந்து கொண்டாலும்,மனம் மட்டும் சித்தப்பா பேசியதிலையே நின்றது.அவர் பேசியதில் உள்ள நியாயத்தையும் மனதினுள் அலசி ஆராய ஆரம்பித்தான்.