kaanum yaavum neeyaaga-2

காணும் யாவும் நீயாக..!

அத்தியாயம் 2

 

விஷ்வா காலையில் மெதுவாக தான் கண் விழித்தான்.அவன் எழுந்து வருவதற்குள் ராதிகா சமையலை முடித்து,அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க,பிளாஸ்க்கில் இருந்த டீயை ஊற்றி குடித்துவிட்டு,வெளியே வந்தான்.

ராதிகாவிற்கு கேட்கும் படி,”மெதுவா வீட்டை சுற்றி,நடந்துட்டு வரேன்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

வீட்டை சுற்றி பத்து முறை நடந்து வந்தாலே ஒரு மணி நேரம் கடந்துவிடும் என்று கணக்கு போட்டுவிட்டு,மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

சரவணன் மிகவும் கலைநயத்தோடு வீட்டைக் கட்டியிருந்தார்.வீட்டை சுற்றி அழகான செடிகள் வளர்த்து,அதை நல்லமுறையில் பாதுகாக்கவும் ஆட்களை நியமித்திருந்தார்.

செடிகளுக்கு ஒருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்க,அவருடன் சிறிது நேரம் நின்று பேசிவிட்டு நடந்தான். 

விஷ்வா மூன்றாவது சுற்று நடந்து வரும் போது,அவனை எதிர்கொண்டார் சரவணன்.

ஹாய் விஷ்வாதானாக வந்து அறிமுகமாகிக்கொள்ளவும்,

ஹாய் சார்என்றான்.

நம்ம காலேஜ்ல ஜாயின் பண்ண போறதா,மீனாக்ஷியும்,ராதிகாவும் பேசிட்டு இருந்தாங்க..எப்போ ஜாயின் பண்ண போறீங்க?”விசாரிக்கவும்,

உங்ககிட்ட இவ்வளவு சீக்கிரம், அண்ணி டிஸ்கஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கல சார்.வீட்டுல கேட்டுட்டு, உடனே ஜாயின் பண்றேன்என்றான்.

நீங்க ரீப்ளேஸ் பண்ண போறவங்களோட வொர்க் எப்படின்னு,நாளைக்குள்ள உங்களுக்கு ரிப்போர்ட் வந்துடும் விஷ்வா. நீங்க ஜாயின் பண்ண போறிங்கன்னு,டிபார்மென்ட்ல இன்பார்ம் பண்ணிடறேன்எனவும்,

சரிங்க சார்என்றவன்,மீண்டும் நடப்பதற்கு செல்ல முயல,

வீட்டுக்குள்ள வாங்க..காபி சாப்பிடலாம்என்று வேறு அழைக்க,பெரிய மனிதரின் அழைப்பை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

அவரோடு வீட்டிற்குள் செல்ல,மீனாக்ஷியும் எதிர்கொண்டவர்,”வா விஷ்வாஎன்று ஆர்வமாகவே வரவேற்றார்.

இவர்களின் ஆர்வம் விஷ்வாவிற்கு கூச்சத்தை தர,அமைதியாக அவர்கள் கொடுத்த காபியை பருகினான்.

அப்புறம் அடுத்து என்ன பிளான்..மேரேஜ் எப்போ?”என்றெல்லாம் மீனாக்ஷி விசாரிக்க,

இந்த கேள்விகளையெல்லாம் எதிர்பார்க்காதவன்,தன்னை சமாளித்துக் கொண்டு,”மேரேஜ்-க்கு பிளான் பண்ணும் போது தான் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு.அதனால கொஞ்ச நாள் போகட்டும்னு,அம்மா சொல்லியிருக்காங்க..”எனவும்,

அம்மா செல்லமோஎன்றவர்,

உங்களுக்கு பிடிச்சா...உடம்பு சரியான பின்னாடியும்,இங்கேயே வேலை பார்க்கலாம்என்றார்.

அதற்கு பதில் சொல்லாது பொதுவாக சிரித்து வைத்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,அறையிலிருந்து வெளியே வந்தாள் நந்தினி..

போயிட்டு வரேன்மாஎன்று கிளம்பியவள்,

ஹாலில் ஒருவன் அமர்ந்திருப்பதை பார்த்து,”ஹாய்என்றவள்,

இன்னைக்கு வர லேட்டாகும்மா..தலைவர் படத்துக்கு,பிரண்ட்ஸ் டிக்கெட் புக் பண்ணிட்டாங்க...நீங்க டிரைவரை தியேட்டருக்கு அனுப்பி வைச்சிடுங்கஎன்று தகவல் தெரிவித்துவிட்டு,கிளம்பிவிட்டாள்.

மகள் செல்லவும்,சரவணன் மனைவியை முறைத்தார்.

எங்க போறான்னு,நமக்கு இன்பார்ம் பண்ணிட்டு போகும் போது,நாம போகக் கூடாதுன்னு சொல்லக் கூடாதுங்க..அவளோட பிரண்ட்ஸ் எல்லாரையும் நமக்கு தெரியும்.அதோட டிரைவரை படம் முடியறதுக்கு முன்னாடியே அனுப்பி வைக்கப் போறோம்..நந்தினிய நாம நல்ல முறையில தான் வளர்த்திருக்கோம்.பயப்படறதை விட்டுட்டு,வேலையை கவனிங்கஎன்று லேசாக அதட்டவும்,சரவணன் விஷ்வாவிடம் முறையிட்டார்.

இந்தக் காலத்து பிள்ளைங்க எப்படின்னு..யாராலையும் சொல்ல முடியாது விஷ்வா.அளவுக்கு அதிகமா கொடுக்கற சுதந்திரமும்,பிள்ளைங்கள கெடுத்துடும்னு சொன்னா,புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா..

நந்தினியும்..என்கிட்ட படத்துக்கு போறேன்னு சொன்னா,நான் வேண்டாம்னு சொல்லிடுவேன்னு,என் முகத்தை கூட பார்க்காம,அம்மாகிட்டவே பேசிட்டு போயிட்டா..!எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலஎனவும்,

உங்க பொண்ணு,உங்ககிட்ட வெளிப்படையா இருக்கும் போது பயப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க சார்.காலேஜ் முடியற வரைக்கும் தான்,இப்படி பிரண்ட்ஸ் கூட வெளில போக முடியும்.வேலைன்னு போயிட்டா,இதுக்கெல்லாம் நேரமே இருக்காது.

அதுலயும் கல்யாணம் முடிஞ்சுட்டா சொல்லவே வேண்டாம்.அதனால கொஞ்ச நாளைக்கு,அவங்க விருப்பத்துக்கு விடுங்க.நீங்களும் அவங்க சேப்டியை கண்கானிச்சுட்டே இருங்க..போதும்என்றான்.

அடுத்து பிஹச்டி பண்றதா சொல்லிட்டு இருக்கா..எனக்கு மேரேஜ் பண்ணி கொடுத்துடலாம்னு தோணுது.மீனாக்ஷி வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா..நந்தினிகிட்ட கேட்டா,ரெண்டு பேரும் சேர்ந்து,என்ன முடிவெடுத்தாலும் சரின்னு பேச்சை முடிச்சு வைச்சுடறா..!”என்றார் பெருமையாய்..!

அமைதியாய் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டான்.இவர்கள் குடும்ப விஷயத்தை எதற்காக தன்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று அவனுக்கு,லேசாக சங்கடமாக இருந்தது.

அதை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருக்க,”நீங்க என்ன நினைக்கிறீங்க..படிக்க வைக்கலாம்னு சொல்றிங்களா..இல்ல மேரேஜ் பண்ணிடலாம்னு சொல்றிங்களா?”என்று வேறு கேட்டு வைக்க,

இதுல முடிவெடுக்க வேண்டியது,உங்க பொண்ணு மட்டும் தான் சார்.ஓரளவுக்கு மெச்சூர்டா தான் தெரியறாங்க.மாஸ்டர்ஸ் முடிக்கவும்,நீங்களே நேரடியா கேட்டுடுங்கஎன்றான்.

அதுவும் சரிதான்..ஆனால் எனக்கென்னவோ காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு தோணுது.ஒரே பொண்ணு..நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா,எங்களுக்கு நிம்மதியா போயிடும்.எங்க கம்பெனிய பார்த்துக்கற மாப்பிள்ளையா பார்க்கணும்

நல்ல மாப்பிள்ளையா பாருங்க சார்..தப்பில்ல..ஆனால் உங்களோட எல்லா ப்ராபர்டிசையும்,உங்க பொண்ணு மட்டும்,நிர்வாகம் பண்ற மாதிரி பார்த்துக்கோங்க.

இந்த ஜென்ரேஷன் பொண்ணுங்களால,எல்லாமே செய்ய முடியும்...ஒரு ஆணோட முதுகுக்கு பின்னால,உங்க பொண்ணோட திறமையை ஒளிச்சு வைக்காதீங்க...கணவனும் மனைவியும் சமமா,ஒரே நேர்கொட்டுல இருக்கணும்.அந்த வாழ்க்கை தான் ஜெயிக்கும்..”என்று நிறுத்திவிட்டு அவர்களின் முகத்தை ஆழ்ந்து பார்க்க,

நீ சொல்றதும் சரி தான்-பாசரவணன் ஒத்துக்கொள்ளவும் தான் விஷ்வாவிற்கு மூச்சே வந்தது.

தான் ஏதோ அதிகப்படியாய் பேசிவிட்டோமோ என்று சங்கடப்பட்டவன்,ஆபிஸ்க்கு,அண்ணா கிளம்பற டைம் ஆச்சு..என்று எழுந்துகொள்ள,இருவரும் சிரித்த முகத்தோடு தலையாட்டினர்.

விஷ்வா சென்றதும்,ரொம்ப நல்ல பையன் போல தெரியுதுங்கஎன்று மீனாக்ஷி  பொதுவாய் சொல்ல,

எனக்கும் அப்படி தான் தெரியுது..எனக்கு தெரிஞ்சு,பிரதாப் பேமிலியும் நல்ல டைப்..நீ என்ன சொல்ற?

பிரதாப்பை ரெண்டு மாசமா தான் தெரியும்.இந்த பையனை ரெண்டு நாளா தான் தெரியும்.அதுக்குள்ள நீங்க கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்டிங்க...!

உங்களை என்ன செய்யறதுன்னே தெரியலங்க..!வீட்டுக்கு யாராவது வயசுப் பையன் வந்தாலே,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டா என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சிடறீங்க..கொஞ்ச நாள் போகட்டும்னா விட மாட்டேங்கறீங்க..லேசாக  கோபப்பட்டவர்,

முதல்ல நந்தினியோட படிப்பு முடியட்டும்..இந்த பையனுக்கும் உடம்பு சரியாகணும்..அப்புறம் கல்யாணம் பேச்சு ஆரம்பிச்சாலும்,பாடி செக்அப் பண்ணிட்டு தான்,கல்யாணத்துக்கே சம்மதிக்கணும்என்றார்.

ஆக்சிடென்ட் ஆனதுனால சொல்றேன்னு புரியுது.ஆனா இதெயெல்லாம் செய்ய சொன்னா,சம்மதிப்பாங்களா?

நம்ம பொண்ணோட வாழ்க்கைங்க..எல்லாத்தையும் பார்த்து விசாரிச்சு தான் செய்யணும்..இதுல நான் உறுதியா இருக்கேன்..என்றவர்,

முதல்ல நந்தினிக்கு காலேஜ் முடியட்டும்.அப்புறம் முடிவெடுத்துக்கலாம்.இப்போ நீங்க ஆபிஸ் கிளம்புங்கஎன்று அலுவலகத்திற்கு கிளப்பிவிட்டார்.

வீட்டிற்கு விஷ்வா வந்ததும்,இவ்வளவு நேரம் வாகிங் போனா,உடம்பு சோர்ந்து போயிடும் விஷ்வா..ஒரே நாள்ல இவ்வளவு நேரம் நடக்கக் கூடாதுராதிகா கவலைப்படவும்,

முழுசா வீட்டை சுற்றி,ரெண்டு ரவுன்ட் கூட போகல ராதிகா..உங்க சரவணன் சார்கிட்ட சிக்கிக்கிட்டேன்..நாளைக்கே காலேஜ்ல ஜாயின் பண்ண சம்மதமே வாங்கிட்டார்.

என்னால மறுக்கவும் முடியல..இப்போ நான் இருக்க நிலமையில பைக் ஓட்டவும் முடியாது..என்ன செய்யறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்எனவும்,அருகே ஷூ லேஸ் கட்டிக்கொண்டிருந்த பிரதாப்,

காலைல உன்னை நான் டிராப் பண்ணிடறேன்.ஈவினிங் ராதிகா பிக்அப் பண்ணிக்குவா..ஒரே ரூட் தான்.யாருக்கும் எந்த பிரச்சனையும் வராதுஎன்றவன்,ராதிகாவிடம் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

என்னோட எல்லா பிரச்சனைகளுக்கும்,நீங்க ரெண்டு பேரும் தீர்வு வைச்சிருக்கீங்க..எனக்கு நீங்க தான் அம்மா,அப்பா போல தோணுதுவேண்டுமென்றே ஐஸ் வைக்க,

அப்படியே ஐஸ் மழைல நனைஞ்சது போல இருக்கு விஷ்வா...இதை உங்கம்மா கேட்டா,அவ்வளவு தான்.என்னோட நினைப்பையை மறைக்கடிச்சுட்டான்னு சண்டைக்கு வந்துடுவாங்க.அவங்ககிட்ட இப்படியெல்லாம் சொல்லி வைக்காதப்பாஎன்றவளும்,

நானும் கிளம்பறேன் விஷ்வா..என்னோட பிரண்ட் நம்பர் கொடுக்கறேன்..ஒரு பதினொரு மணிக்கு மேல காண்டக்ட் பண்ணிக்கோ..!

மீனாக்ஷி அம்மாவும் பேசறேன்னு சொல்லிருக்காங்க..கொஞ்ச நாளைக்கு மட்டும்,இந்த ஹெல்ப்பை பண்ணிடு விஷ்வா..அதுவும் ..ஸ்டுடென்ட்ஸ்-க்காக தான் கேட்கறோம்..செமெஸ்டர் வர்றதுனால தான்,நல்ல லெக்சரர் வேணும்னு உன்னை போக சொல்றேன்எனவும்,

நான் போறதா முடிவெடுத்துட்டேன் ராதிகா..இனி நீ என்னை சமாதானம் செய்யணும்னு,எந்த அவசியமும் இல்ல..நீ என்னை பற்றி யோசிக்கிறத விட்டுட்டு,ஆபிஸ்-க்கு நிம்மதியா கிளம்பி போஎன்று வழியனுப்பி வைத்தான்.

நாளை புது மாணவர்களை சந்திக்கப் போகிறோம் என்பதே,விஷ்வாவிற்கு பெரிய சந்தோஷத்தையும்,உற்சாகத்தையும் கொடுக்க,இணையத்திலிருந்து பாடம் சம்பந்தப்பட்ட தகவல்களை திரட்ட ஆரம்பித்தான்.

விஷ்வாவிற்கு நேரம் போனதே தெரியவில்லை..!!

மதிய உணவு நேரம் கடந்த பின்னர்,ராதிகா போன் செய்தாள்.

அப்போது தான் அவள் பேராசிரியருக்கு போன் செய்ய சொன்னது ஞாபகம் வர,ராதிகாவின் அழைப்பை ஏற்றவன்,”இன்னும் அவங்களுக்கு போன் பண்ணல ராதிகா..இப்போ பேசிடறேன்..”எனவும்,

நீயொரு ஞாபகமறதிக்காரன்னு,எனக்கு நல்லாவே தெரியும்.அதான் நானே கூப்பிட்டேன்..அவங்களுக்கு போன் பண்றதுக்கு முன்னாடி,சாப்பிடு விஷ்வா..டேபிள்ல எல்லாம் ரெடியா எடுத்து வைச்சிருக்கேன்..அவங்களுக்கு பேசிட்டு,அப்படியே அத்தைக்கும் போன் பண்ணி பேசிடு.அப்போ தான் அவங்களுக்கு நிம்மதியா இருக்கும்என்றாள்.

சரி ராதிகா.மறக்காம நீ சொன்ன மூணு வேளையையும் செஞ்சுடறேன்.நீ சாப்பிட்டியா?”

அதெல்லாம் ஆச்சு..நீ முதல்ல போய் சாப்பிட்டு,போன் பண்ணு.நான் வீட்டுக்கு வந்து பேசறேன்என்று போனை வைத்தவுடன்,மதிய உணவை முடித்துக் கொண்டவன்,அந்த பேராசிரியருக்கு போன் செய்து,அவனுக்கு வேண்டிய தகவல்களை கேட்டுக் கொண்டான்.

இறுதியில் அவர் நன்றி கூறிவிட்டு போனை வைக்கவும்,ஒருவருக்கு உதவுகிறோம் என்ற மன திருப்தியில்,தானும் போனை வைத்தவன் அம்மாவிற்கு அழைத்தான்.

இரண்டு ரிங்கிலையே எடுத்தவர்,”சாப்பிட்டியா ராஜா?”கேட்கவும்,

சாப்பிட்டு மாத்திரையும் போட்டாச்சும்மா..இன்னும் அரைமணி நேரத்துல நல்லா தூங்கிடுவேன்.அதுக்கு முன்னாடி,உங்ககிட்ட பேசிடலாம்னு போன் பண்ணேன்.இங்க பக்கத்துல ஒரு காலேஜ்ல ரெண்டு மாசத்துக்கு மட்டும் வேலைக்கு போகப் போறேன்..பிடிச்சிருந்தா இங்கேயே நிரந்தரமா இருக்க சொல்லிட்டாங்க..எனக்கும் பிடிச்சுப் போச்சுன்னா,நீங்களும் இங்கேயே என் கூடவே தங்கிடனும்..ஓகே வாஎனவும் சந்தோஷப்பட்டார்.

எனக்கு எப்படி என்னோட சந்தோஷத்தை வெளிப்படுத்துறதுன்னே தெரியல ராஜா..என்னோட ரெண்டு பசங்களும் பக்கத்துல இருந்தா,எங்களுக்கு அதைவிட வேறென்ன வேணும்..சொந்த ஊர் ஆசையெல்லாம் விட்டுப் போச்சு...நீயும் அங்கேயே நிரந்தரமா இருந்துடு ராஜாமகிழ்ச்சியாய் பேசிக்கொண்டே போகவும்,விஷ்வாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும்,ஏதோ உறுத்தலாய் இருந்தது..

அப்படியெல்லாம் சொந்த ஊரை விட்டு வருபவர் இல்லை..சொந்தபந்தங்களை விட்டு,எப்படி தனியாக இருப்பது என்று நீண்ட பிரசங்கமே செய்வார்..!!

எப்படி இந்த திடீர் மனமாற்றம் என்று புரியாவிட்டாலும்,அண்ணனுடனும் தங்குவதற்கு ஆசைப்படுகிறார் என்று மனதை சமாதானம் செய்துவிட்டு சிறிது நேரம் அம்மாவிடம் பேசியவன்,

அப்பாவையும் கேட்டதா சொல்லுங்க.அவரோட விருப்பத்தையும் கேட்டுடுங்கம்மாஎன்றவன் போனை வைத்துவிட்டு,குறிப்புகளை எடுக்க,லேப்டாப்பை எடுக்கவும்,அவனின் கண்களில் நித்திரா தேவி குடிகொள்ள,முகத்தை அலம்பிவிட்டு வருவோம் என்று வாஷ்ரூம் சென்றான்.

சிறிது நேரம் கழித்து,தூக்கத்தை விரட்டிவிட்டு அவன் வரும் போது,லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்து போயிருக்க..கரண்ட்டும் அதே நேரத்தில் போயிருக்க..”இதுக்கு முகத்தை கழுவாமலையே இருந்திருக்கலாம்என்று நொந்துகொண்டு மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

அவன் தூங்கிவிட்டதை உணர்த்தும் விதமாய்,விஷ்வாவின் சுவாசம் சீராகவும்...லேப்டாப்பின் திரை மீண்டும் உயிர்பெற்றது..!!மின்விசிறியும் சுழல ஆரம்பித்தது...!!

No comments:

Post a Comment