kaanum yaavum neeyaaga-3

 

அத்தியாயம் 3

காலைவேளையில் விஷ்வா புத்துணர்ச்சியுடன் கிளம்பி தயாராக இருக்க..அவனை சந்தோஷத்துடன் பார்த்த பிரதாப்,”இதே மாதிரி எப்பவும் ப்ரிஸ்-க்கா இருக்கணும் விஷ்வா..வா போகலாம்என்று தன்னுடனே அழைத்து சென்றான்.

கல்லூரியின் அருகே பைக்கை நிறுத்தியவன்,”நேரா போய்,இடது பக்கம் திரும்பினா..மெயின் ப்ளாக் வந்துடும்.பிரின்சிபல் ரூம்ல போய் இன்பார்ம் பண்ணா போதும்.அங்க இருக்க பிஏ உன்னை டிபார்ட்மென்ட்-க்கு கூட்டிட்டு போயிடுவாங்க..ஆல் தி பெஸ்ட்என்று வாழ்த்து தெரிவித்துவிட்டு கிளம்பவும்,புது இடம் என்பதால்,லேசாக எழுந்த தயக்கத்துடனையே,செக்யூரிட்டியிடம் தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றான்.

அங்கே சரவணுக்கு தெரிந்தவர் என்பதால்,நேரடியாகவே டிப்பார்ட்மெண்ட் ஹெட்-க்கு அறிமுகப்படுத்தி வைக்க,அங்கிருந்த பேராசிரியர்களிடம் உடனே அறிமுகமாகிவிட்டான்.

அங்கே வேலை செய்யும் சங்கருடன்..விஷ்வாவிற்கு நட்பு ஏற்பட்டு விட,அவனே விஷ்வாவிற்கு தேவையான தகவலை கொடுத்தான்.

லஞ்ச் முடிஞ்ச பர்ஸ்ட் ஹார் தான்,நீங்க போற மாதிரி இருக்கும் விஷ்வாஎனவும்,விஷ்வா யோசித்தான்.

இன்னைக்கு மட்டும்,வேற ஏதாவது பீரியட் மாத்தி கொடுக்க முடியுமா சங்கர்..பசங்க லஞ்ச் முடிச்சிட்டு தூக்கத்துல தான்,நம்ம பேச்சையே கேட்பாங்க..முதல் நாளே இப்படின்னா..சரியா வராதுஎனவும்,

என்னோட பீரியட் நீங்க எடுத்துக்கோங்க விஷ்வா..நான் பேசிக்கறேன்..அடுத்த கிளாஸ் உங்களுக்கு தான்..”என்றான்.

தேங்க்ஸ் சங்கர்..முதல் நாளே கிளாஸ் எடுக்க வேண்டாம்னு பார்க்கறேன்..ஷாந்தி மேடம் எந்த அளவுக்கு சப்ஜெக்ட் கவர் பண்ணி இருக்காங்க..ஸ்டூடெண்ட்ஸ் எப்படி எக்ஸாம்-க்கு ரெடியாகியிருக்காங்கன்னு பேசி தெரிஞ்சுக்க போறேன்

இந்த கிளாஸ்ல இருக்க பசங்க சரியான கேடிங்க..!நாம ஜாலியா பேசினா,ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவாங்க..ஸோ பார்த்துக்கோங்க

நான் ஜாலியா கிளாஸ் நடத்துவேன்னு சொல்லவே இல்லையே ஷங்கர்..எனக்கு அப்படி கிளாஸ் எடுக்க வரவே வராது..எனக்கு பர்ஸ்ட் பென்ச்ல இருக்க ஆளும்,லாஸ்ட் பென்ச்ல இருக்க ஆளும்,பாடத்தை ஒரே மாதிரி கவனிக்கணும்..அந்த அளவுக்கு எல்லாரையும் கண்கானிச்சுட்டே இருப்பேன்..யாரும் என்கிட்ட விளையாட்டு காட்ட முடியாது..”

ம்ம்..நீங்க எப்படின்னு கிளாஸ்ல நாங்க வைச்சிருக்க,ஸ்பை ஸ்டூடெண்ட்ஸ் வைச்சு தெரிஞ்சுக்கறோம்..இப்போ டைம் ஆச்சு.ஆல் தி பெஸ்ட்கை கொடுக்கவும்,சிரித்தபடி கைகொடுத்தவன்,வகுப்பிற்குள் நுழைந்தான்.     

மாணவர்களுக்கு அறிமுக வகுப்பை முடித்த விஷ்வா,அவர்களின் மனநிலையை ஓரளவு புரிந்துகொண்டான்.புதிய பேராசிரியரை ஏற்பதற்கு நாளாகும் என்பது புரிய..முடிந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இயல்பாக இருக்க முயற்சி செய்தவன்,முதல் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு டிபார்ட்மென்ட்டிற்கு வந்தான்.

அவனை ஆர்வமாக எதிர்கொண்ட ஷங்கர்,”எப்படி கிளாஸ் போச்சுவிசாரிக்கவும்,

பிக்அப் ஆக கொஞ்ச நாள் ஆகும்னு நினைக்கிறேன் ஷங்கர்.ஆரம்பத்திலையே வாட்டி எடுத்தா,தாங்க மாட்டாங்கன்னு தோணுது..மேடமும் ஓரளவுக்கு எல்லாம் கவர் பண்ணிட்டு தான் போயிருக்காங்க..இனி அடுத்ததெல்லாம் போகப் போக தான் தெரியும்எனவும்,

உங்களுக்கும் இவங்களை பழகிடும் விஷ்வா..பெரிய அளவுக்கு கவலைப்பட தேவையில்ல..உங்க கடமையை நீங்க சரியா செய்யுங்க..மத்தபடி பாஸ் ஆகறதும்,அரியர் வைக்கிறதும் அவங்க தலையெழுத்து தான்என்றான்.

ரொம்ப வெறுத்துப் போய் பேசறீங்களே ஷங்கர்? எனக்கு லேசா பயம் வருது

நான் உங்களை பயமுறுத்தறதுக்காக பேசலை விஷ்வா..என்ன தான் நாம அவங்க போக்கில போய் கிளாஸ் எடுத்தாலும்,அவங்களுக்கு சரியா புரிய வைச்சாலும்,எக்ஸாம் சரியா  எழுத வேண்டியது அவங்க தான்..

அதை எப்பவும் சரியா பண்ணவே மாட்டாங்க..நான் இதுவரைக்கும் பார்த்த பேட்ச்லையே,ரொம்ப மோசமான பேட்ச்னா.அது இவங்க தான்..!படுத்தி எடுத்து வைச்சிடறானுங்க..!நீங்க ரொம்ப கவனமா இருங்க...உங்க பேர் கெட்டுடக் கூடாது

நான் இன்னும் ரெண்டு மாசம் தான் இருப்பேன் ஷங்கர்..நீங்க சொன்ன மாதிரி,என்னோட கடமையை இந்த ரெண்டு மாசத்துல சரியா செய்வேன்..மத்ததெல்லாம் நாம யோசிக்கவே தேவையில்லைஎன்றவன்..பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து,அவனுக்கென ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் நுழைந்தான்.

லேசாக தலைவலிக்கும் போலிருந்தது..கையில் மாத்திரை இருந்தாலும் போடக் கூடாதென்று உறுதியாக இருந்தான்.தலைவலி தாங்க முடியாத பட்சத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று கண்மூடி அமர்ந்திருக்க...

ஹாய் சார்என்ற சத்தம் கேட்டு கண் விழித்தான்.

எதிரே நந்தினி அமர்ந்திருந்தாள்.

ஹாய்பதிலுக்கு கூறிவிட்டு,கேள்வியாய் பார்க்க..

பைனல் இயர் ப்ராஜக்ட் பண்ணணும்..ஹெல்ப் பண்ணுவீங்களா சார்?”எதிர்பார்ப்புடன் கேட்கவும்,

காலேஜ் டேக் பார்த்தா..வேற காலேஜ்ல தான் படிக்கிறிங்கன்னு தெரியுது..அங்க இருக்க ஸ்டாப் கிட்டவே கேட்கலாமே..ஏன் இங்க வந்து கேட்கறீங்க..அதுலயும் என்கிட்ட..?”முடிக்காமல் நிறுத்தி பார்க்கவும்,

 எங்க புரொபசர்,நானே எல்லாத்தையும் பண்ணிடுவேன்னு ரொம்ப பெருமையா எல்லார்கிட்டவும் சொல்லிட்டார்..இங்க இருக்கவங்ககிட்ட கேட்டா...சரவணன் சார் பொண்ணு என்கிட்ட ஹெல்ப் கேட்டு பண்ணான்னு எல்லார்கிட்டவும் சொல்லிடுவாங்க..நீங்க இங்க புதுசு வேற..அதோட நீங்க யார்கிட்டவும் ஷேர் பண்ணமாட்டீங்கன்னு,எனக்கு ஒரு நம்பிக்கைஎன்றாள்.

விஷ்வாவிற்கு அவள் பேச்சில் நம்பிக்கையில்லை..!!

என்னால முடிஞ்சா செய்யறேன்..”என்றவன்..

என்ன மாதிரியான ப்ரொஜெக்ட்கேட்கவும்,தயாராகவே வந்திருந்தவள்,ப்ராஜக்ட் பைலை மொத்தமாக தூக்கிக் கொடுத்தாள்.

ப்ராஜெக்ட்டின் இறுதியில் தான் திணறிக் கொண்டிருக்கிறாள் என்று,மேலோட்டமாக பார்த்தபோதே அவனுக்கு தெரிந்துவிட்டது..

வீக்என்ட் வீட்டுக்கு வாங்க..பார்க்கலாம்எனவும்,

பிரைடே ப்ரொஜக்ட் ரிவியூ இருக்கு சார்..முழுசா முடிக்கலைன்னாலும்,முடிக்க போறேன்னு காட்டணும்..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்..

நீங்க ரொம்ப நல்லவர்னு அப்பா மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்..நேத்து நைட் முழுக்க உங்களைப் பற்றி தான் பேசிக்கிட்டு இருந்தாங்க..அந்த நம்பிக்கையில தான் இந்த ஹெல்ப் கேட்கிறேன்...ப்ளீஸ் சார்..எப்படியாவது கைட் பண்ணுங்க..”என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள்.

ஈவினிங் வீட்டுல பார்க்கலாம்..”என்றவுடன் நந்தினியின் முகம் பளிச்சென்றானது.

தேங்க்ஸ் சார்என்றவள் சந்தோஷமாக விடைபெற்று செல்ல...உடனே ஷங்கர் நுழைந்தான்.

நீ,சரவணன் சார்-க்கு ரிலேட்டிவ்னு இங்க எல்லாரும் பேசினப்போ நம்பலை விஷ்வா..இப்போ சாரோட பொண்ணே வந்து பேசிட்டு போறாங்கன்னா...நம்பாம இருக்க முடியலை..இதுவரைக்கும் இவ்வளவு நேரம் காலேஜ்-குள்ள சார் பொண்ணு இருந்ததேயில்ல..அநாவசியமா யாரோடையும் பேசவே மாட்டாங்க..நீ கிரேட்பாஎனவும்,விஷ்வாவிற்கு, ‘இதென்னடா புதுக்கதைஎன்றிருந்தது. 

அவனால் எதற்கும் மறுத்தும் பேச முடியவில்லை..ஆமாம் என்றும் ஆதரிக்க முடியாமல் மௌனமாகவே அமர்ந்திருக்க..”சார்-க்கு இன்னும் ரெண்டு காலேஜ் இருக்கு விஷ்வா..அந்த காலேஜ்ல, இங்க கொடுக்கறதை விட,நல்ல சேலரி கொடுப்பாங்க..அங்க வேலை செய்யறதே தனி கெத்து தான் தெரியுமா..

 

சான்ஸ் கிடைச்சா,உள்ள போயிடலாம்னு இருக்கேன்..உன்னால முடிஞ்சா ரெகமென்ட் பண்ணுப்பாஎனவும்..இதற்கு மேல் மெளனமாக இருப்பது தவறாக முடிந்துவிடும் என்பதால்..மௌனத்தை கலைத்தான்.

நீ நினைக்கிற அளவுக்கு க்ளோஸ் இல்ல ஷங்கர்.. இந்த பொண்ணையே நான் காலைல தான் பார்த்தேன்..சாரோட பொண்ணுன்னு,கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசிட்டு இருந்தேன்..அவ்வளவு தான்..

நானே என்னோட அண்ணி கேட்டுக்கிட்டதுனால தான் வந்திருக்கேன்..ரெண்டு மாசம் முடிச்சிட்டு,சொந்த ஊர்ல போய் செட்டில் ஆகிடுவேன்..இங்க எனக்கு செட் ஆகும்னே தோணலை..இதுல நீ வேற என்னை பெரிய ஆள் போல நினைச்சு பேசிட்டு இருக்கப்பா...”எனவும் ஷங்கருக்கு லேசான ஏமாற்றம் தான்..!

நானும் எப்படியாவது அந்த காலேஜ்ல வேலைக்கு சேர்ந்துடனும்னு எவ்வளவோ ட்ரை பண்றேன்..முடியலை விஷ்வா..ஒரு வேகன்ட் கூட இருக்க மாட்டேங்குது..அப்படி இருந்தாலாவது,நானே பெஸ்ட்டா பர்ஃபார்ம் பண்ணி,உள்ள போயிடுவேன்என்றெல்லாம் சோக கீதம் வாசிக்க,

வேற காலேஜ்ல முயற்சி பண்ணலாமே சங்கர்என்றான்.

இங்க கிடைக்கற சேலரி,மரியாதை..வேற இடத்தில கிடைக்குமான்னு தெரியல விஷ்வா..எனக்கு இந்த சம்பளமே ஓகே தான்..ஆனாலும் ஆசை யாரை விட்டது..?எனக்குன்னு அந்த காலேஜ்ல ஒரு வேகன்ட் இருக்கணும்னு விதி இருந்தா..கண்டிப்பா கிடைக்கும்மனதை சமாதானம் செய்துகொண்டு பேசவும்,விஷ்வாவிற்கு சிரிப்பாக இருந்தது.

சிரிப்பை அடக்கியவன்,”உனக்கு நிச்சயம் அந்த வேலை கிடைக்கும் சங்கர்.முயற்சி பண்ணிட்டே இரு..”என்று ஆறுதலாய் பேசவும்,சங்கரும் கொஞ்சம் திருப்தியானான்.இருவருக்குமான நட்புறவு கொஞ்சம் மேம்பட்டிருந்தது.

அன்றைய தினம் விஷ்வாவிற்கு,உடன் பணிபுரியும் பேராசியர்களுடன் அறிமுகமாக பேசுவதிலையே போய்விட்டது.

கல்லூரி முடியவும்,ராதிகாவிற்கு போன் செய்ய..”நான் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன் விஷ்வா..நீ அங்க இருந்து கிளம்பி,மெதுவா நடந்து மெயின் ரோட்டுக்கு வந்துடறியா..இந்த நேரம் காலேஜ் ஏரியால வந்தா..ரொம்ப ட்ராபிக்கா இருக்கும்..வீட்டுக்கு போக ரொம்ப லேட் ஆகிடும்எனவும்,விஷ்வாவிற்கு அதுவே சரியென்றுபட்டது..

காலேஜ் இருக்கும் ஏரியாவுக்குள் வருவதும் சிரமம்..வெளியே போவது இன்னமும் சிரமம்..காலையில் கூட இவ்வளவு ட்ராபிக் இல்லை..மனதில் குறித்துக்கொண்டவன்,பதினைந்து நிமிட நடைபயணத்தில் ராதிகா குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டான்.

சரியாக அதே நேரத்தில்,ராதிகாவும் வந்துவிட..”தேங்க்ஸ் ராதிகாஎன்றவன்,அவளோடு ஸ்கூட்டியில் ஏறிக்கொண்டான்.

இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு..?”ஆர்வமாக ராதிகாவும் விசாரிக்கவும்,

ஒரே நாள்ல நிறைய பேரோட அறிமுகம் கிடைச்சுது ராதிகா..எல்லாரும் சரவணன் சாரோட ரெகமண்டேஷன்னு கொஞ்சம் ஆர்வமாவும்,பொறாமையாவும்,மரியாதை கொடுத்தும் பழகின மாதிரி தோணுச்சு..இன்னைக்கு பொழுது மனுஷங்களோட மனசை எடை போடறதிலையே போயிடுச்சுஎன்றான்.

நீ உன்னோட மனசில என்ன இருக்குன்னு,காட்டியிருக்க மாட்ட தானே?”கேட்கவும்,பதிலில்லாமல் போக,

மனசுக்குள்ளயே சிரிச்சுக்கறேன்னு,என்னால நல்லா உணர முடியுது விஷ்வா.அந்த சிரிப்பை கொஞ்ச முகத்துல காட்டினா தான் என்ன..?”ஆதங்கப்படவும்,

நான் ஒண்ணும் உணர்ச்சியே இல்லாத ஜடம் இல்லையே ராதிகா..எனக்கு சத்தமா சிரிக்க வராது..இது என்னோட இயல்பு..இதை என்னால மாத்தவே முடியல..!

மத்தபடி நான் எல்லார்கிட்டவும்,நல்லா தானே பழகறேன்..உன்கிட்டவும்ட நல்லா தானே பேசறேன்..நீ அப்பப்போ டவுட்டா கேட்கும் போது,எனக்கும் சந்தேகமாவே இருக்கு..உன்கிட்ட நான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றேன்னு நீ நினைக்கிறியா..ஸ்பீக் அவுட் ராதிகா..?”எனவும் ராதிகா கொஞ்சம் பயந்து போனாள்.

விஷ்வா அதிகம் யோசித்து பேசுவது,அவனுக்கு நல்லதில்லையே..!

அப்படியெல்லாம் இல்ல விஷ்வா..நீ வீட்டு ஆளுங்ககிட்ட ரொம்ப நெருக்கமாவே இருக்க..!பிரண்ட்ஸ்-கிட்டவும் அப்படி தான்..வெளியாளுங்ககிட்ட நீ அளவா பழகறதில தப்பேயில்ல..

நீ கொஞ்சம் சத்தமா சிரிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு..அதான்..வேறொண்ணுமில்ல..நீ நான் இப்படி கேட்டேன்னு வொரி பண்ணிக்க தேவையில்ல..!”எனவும்..விஷ்வாவும் சமாதானம் ஆனான்..

வெளியே பார்க்க ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போல தெரிந்தாலும்..விஷ்வாவிற்கு இரக்க குணம் அதிகம்..!!

இன்னைக்கு நான் ட்ரீட் வைக்கலாம்னு இருக்கேன்..நீ என்ன நினைக்கிற?”

நீ எதை செய்யறதா இருந்தாலும்,உன்னோட அண்ணன்கிட்ட கேட்டுட்டு செய் விஷ்வா.நாம ஹோட்டல்ல சாப்பிட்டாலும்..அவனுக்கு வீட்டுல செய்யற மாதிரி,ஏதாவது பண்ணிடுவான்..ஏன் இப்படி பண்றன்னு கேட்டா...என்னோட சமையல் மாதிரி வராதுன்னு,ஏதாவது ஐஸ் வைப்பான்..எனக்கு கடுப்பா இருக்கும்..நீ அவனை கேட்டே முடிவு பண்ணு

கேட்டுடுவோம்என்றவன் பிரதாப்பிற்கு போன் செய்யவும்,உடனே எடுத்தவன்,

எதுவும் பிரச்சனையில்லையே விஷ்வா..தலைவலி அதிகமா இருக்கா?”பதட்டத்தோடு கேட்கவும்,

டேய் அண்ணா..என்னை பேஷன்ட்டா  உணர வைக்க,நீ ஒருத்தனே போதும்..நான் போன் பண்ணதுக்கான காரணம் வேற..!இன்னைக்கு ஒரு நாள் உன்னோட வைஃப் சமையல்ல இருந்து விடுபடலாம்னு நினைச்சேன்..ட்ரீட் வைக்கப் போறேன்..உனக்கு ஓகே தானேஎனவும்,

எனக்கு ராதிகா கையால சாப்பிட்டா தான் திருப்தியா இருக்கும்டா..நாம இன்னொரு நாள் பிளான் பண்ணுவோமா..?”எனவும் கேட்டுக்கொண்டே இருந்த ராதிகா கடுப்பானாள்.

விஷ்வா..இன்னைக்கு நான் சமைக்கவே போறதில்ல..அவன்கிட்ட சொல்லிடுஎன்று சத்தமாக பேசியது பிரதாப்பிற்கும் கேட்க..

புரிந்துகொண்டவன்,எனக்கும் ட்ரீட் ஓகே..ஆனா ஹோட்டல்ல வேண்டாம்..ஆர்டர் பண்ணி வீட்டுலையே சாப்பிடலாம்..எனக்கு கடைசியா..கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டா தான் திருப்தியா இருக்கும்.எப்படியும் வீட்டுல கொஞ்சம் பழைய சாதம் இருக்கும்..நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்எனவும்,

அப்படியே செய்யலாம்என்று போனை வைத்தான்.

எனக்கு கடுப்பா வருது விஷ்வா..ஒரு நேரம் எனக்கு உடம்பு சரியில்லைன்னா கூட,வெளில சாப்பிட மாட்டேங்கறாங்க.நான் முடியாதுன்னு சொல்லிட்டா,உடனே உங்கம்மாவ கேட்டு சமைக்க ஆரம்பிச்சிடறாங்க.இந்த விஷயத்துல நீ எவ்வளவோ பரவாயில்லப்பா...”

அவனுக்கு எப்பவுமே வீட்டு சாப்பாடு ரொம்ப பிடிக்கும்..ஹோட்டல்ல விரும்ப மாட்டான்..நானும் அப்படி தான்..இன்னைக்கு ஏனோ மனசு வித்தியாசமா தோணுது..”எனவும்,

என்னைக்காவது ஒரு நாள் இப்படி சாப்பிட்டா தப்பில்ல..”என்றவளும்,வீட்டிற்கு வந்தவுடன் டீயை போட்டுக் கொடுத்துவிட்டு,ரிலாக்சாக அமர்ந்தாள்.

அவள் அப்படி ஆசுவாசமாக அமர்ந்திருந்த விதமே, விஷ்வாவிற்கு ஒரு திருப்தியைக் கொடுத்தது.அவன் அம்மாவை அமர வைத்து,சமைத்து கொடுத்ததெல்லாம் ஞாபகம் வர,அம்மாவிற்கு போன் செய்யலாம் என்று போனை எடுக்கவும்,அவன் மனதை படித்தாற்போல..”உன்னோட அம்மாவுக்கு இப்போ பேசப் போறியா விஷ்வா..?”எனவும்,

ஆமாம்என்றான்.

தயவு செஞ்சு ட்ரீட் கொடுக்கறேன்னு சொல்லிடாத..இனி தான் சமைக்கணும்னு முடிச்சிடு.உண்மையை சொல்லிட்டேன்னா,ஒரு வாரத்துக்கு..தினமும் போன் பண்ணி..ஹோட்டல்ல சாப்பாடான்னு கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்க..உன் கால்ல வேணா விழறேன்என்று கிட்டத்தட்ட அழுதுவிடுவது போல பேசவும்..

நான் போன் பண்ணலஎன்று அமைதியாகிவிட்டான்.

உன்னோட இந்த உதவிய என் வாழ்நாள்ல மறக்க மாட்டேன்உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போல நடித்தவள்,

எங்க வீட்டுல கூட யாருக்கும்,நான் இவ்வளவு பயந்தது கிடையாது விஷ்வாஎன்று அம்மாவைப் பற்றி குறை சொல்லும் போது,விஷ்வாவிற்கும் சங்கடமாகத்தான் இருந்தது.

அவனால் அம்மா,அண்ணி இருவரையும் தவறாக நினைக்க முடியாது.இருவரும் நல்லவர்களே..!

அமைதியாக அமர்ந்திருந்தவன்,அண்ணன் வரவும் அவர்களுக்கு தேவையான உணவை கேட்டுவிட்டு ஆர்டர் செய்தான்.

சிறிது நேரத்தில் உணவு வந்துவிட...ராதிகாவோடு விஷ்வாவும் எடுத்து வைக்க...விஷ்வா அவனுக்கு ஆர்டர் செய்திருந்த சிக்கன் வெரைட்டிகளை பார்க்கவும் திக்கென்று இருந்தது.

அதை வெளிப்படுத்தாமல் டேபிளில் எடுத்து வைக்க..அங்கே அமர்ந்திருந்த பிரதாப்..”உனக்கு தான் சிக்கனே பிடிக்காதேடா..அதுலயும் இவ்வளவு ஆயில் ஆயிட்டம்ஸ்,எப்படி வாங்கின..மாத்தி கொடுத்துட்டாங்களா?”கேட்கவும்,

முன்னாடி மட்டன் தான் விரும்பி சாப்பிடுவேன்..இப்போவெல்லாம் மட்டனை விட சிக்கன் தான் ரொம்ப பிடிக்குது பிரதாப்..”என்று அதை எடுத்து ஆசையாக சாப்பிடவும்,ராதிகா பிரதாப்பின் காதில் விஷயத்தை பகிர்ந்துகொள்ள..பிரதாப்பும் அமைதியானான்.

விஷ்வா சாப்பிடும் விதம்,ராதிகாவிற்கு வேறு யாரையோ ஞாபகப்படுத்த...இந்த விஷயத்தை மாமியாரிடம் பகிர்ந்துகொள்ளலாமா என்று கூட யோசித்தாள்.

அவளுடன் யோசனையை தடுத்த விஷ்வா..”சரவணன் சார் பொண்ணு காலேஜ்-க்கு வந்திருந்தாங்க ராதிகாஎனவும்,

அவங்க காலேஜ்..ஏதாவது வேலையிருந்திருக்கும்.. ‘என்று எதார்த்தமாக நினைத்துக்கொண்டு,”வெளியாளுங்க யார்கிட்டவும்,நந்தினி ஈகோவ விட்டு பழக மாட்டான்னு மேம் சொல்லுவாங்க..ரொம்ப ஸ்டேடஸ் பார்க்கற ஆள்னு கேள்விப்பட்டேன்...உன்கிட்ட பேசினாளா..?”ஆர்வமாக கேட்கவும்,விஷ்வாவால் நந்தினியின் குணத்தை பற்றி ராதிகா சொன்னதை ஏற்க முடியவில்லை..

அமைதியாக சாப்பிடவும்,”என்ன பதிலைக் காணோம்பிரதாப் ராதிகாவிற்காக கேட்க..

எனக்கென்னவோ..அந்தப் பொண்ணுக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குதுன்னு தோணுச்சுஅவர்களை பார்க்காமல் கூறவும்,ராதிகா மேலும் அதிர்ச்சியானாள்.

நீ எப்படி,இப்படித்தான் இருக்கும்னு சொல்ற?”

அவங்களுக்கு முடியப் போற ப்ராஜெக்ட்-க்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தாங்க..அவங்களே முயற்சி செஞ்சா முடிச்சிடலாம்.காலேஜ்ல அவ்வளவு பேர் இருக்கும் போது,இன்னைக்கு தான் ஜாயின் பண்ண என்கிட்ட எதுக்கு வந்து கேட்கணும்..பேசும் போது கண்ல பயங்கர ஆர்வம்..அந்த ஹேப்பினஸ் என்னால பீல் பண்ண முடிஞ்சுது..இன்னைக்கு தான் என்னை பார்த்திருக்காங்க..எப்படின்னு தெரியலஎன்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போக..

பிரதாப் ராதிகாவை பார்த்துவிட்டு,”அப்படியெல்லாம் இருக்காது விஷ்வாஎன்றான்.

அப்படியிருந்தாலும்,இல்லைன்னாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்ல பிரதாப்..இன்னைக்கு அவங்க காலேஜ்-க்கு வந்ததை,என்கிட்டே ஹெல்ப் கேட்டதை,உன்கிட்ட நான் ஷேர் பண்ணலைன்னு,நீ நினைக்கக் கூடாது.அதான் சொன்னேன்..”என்றவன்,மிகுதியிருந்த உணவை ஆர்வமாக சாப்பிட..

உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கா விஷ்வா..”ராதிகா திருப்பி கேட்கவும்,

இந்த மாதிரி எத்தனை பொண்ணுங்களை பார்த்திருப்பேன் ராதிகா..என்னை இதுவெல்லாம் பாதிக்காதுஎன்றான்.

இதே முடிவோட கடைசி வரைக்கும் இருக்கணும் விஷ்வா..நாம அவங்க வீட்டுல தான் இருக்கோம்.அவங்ககிட்ட தான் வேலை செய்யறோம்.பார்த்து நடந்துக்கராதிகா அட்வைஸ் செய்யவும்,

நான் ஒண்ணும் டீன் ஏஜ் பையன் இல்ல ராதிகா..நான் இங்க இருக்க போறதே கொஞ்ச நாள் தான்...அதுக்கப்புறம் அந்த பொண்ணை நான் பார்க்கவே போறதில்ல..அதனால பயப்பட வேண்டாம்எனவும்,சற்று நிம்மதியானாள்.

ஆனால் அதே நேரம்,விஷ்வாவின் போனிற்குஹாய்என்று மெசேஜ் வர..விஷ்வா யாரோ என்று கண்டுகொள்ளவில்லை.

சில நொடிகளிலையே..’I am Nandhini’என்று வர..அதை ராதிகாவும் பார்த்துவிட..போனை எடுத்து பிரதாப்பிற்கும் காட்டினாள்.

பிரதாப்,ராதிகா அளவிற்கு பயப்படவில்லை.

ப்ராஜெக்ட்-க்கு ஹெல்ப் வேணும்னு கேட்டதா சொன்ன தானே..அதுக்காக கூப்பிடுவாங்களா இருக்கும்.நாம அவாய்ட் பண்ண முடியாது.நீ உன்னால முடிஞ்ச ஹெல்ப்பை பண்ணு விஷ்வாஎன்றவன்,கிட்சனிற்குள் கை கழுவ செல்ல..பின்னேயே ராதிகா சென்றவள்,

இது ஏதோ பிரச்சனையில முடியும்னு தோணுதுஎன்றாள்.

விஷ்வாவுக்கும் பிடிச்சிருந்தா,நல்லது தானே.அவனுக்கும் கல்யாணம் பண்ணணும்..அந்த பொண்ணு நந்தினியா இருந்தா,விஷ்வாவுக்கு தான் நல்லது.அப்படி எதுவும் நடக்கலைன்னாலும்,ஒகே தான்.ப்ராஜெக்ட் ஹெல்ப் பண்ண,நல்ல பேராவது கிடைக்கும்

விஸ்வாவுக்கு ஒரு நல்லது நடந்தா,எனக்கும் சந்தோஷம் தான்.ஆனா எதையும் அவசரப்பட்டு முடிவு பண்ண வேண்டாம்..”என்றவள் ஹாலிற்கு வர..

நந்தினி போன் பண்ணாங்கன்னா,நான் தூங்கிட்டேன்னு சொல்லு..”என்றவன் போனை ஹாலிலையே வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட..உடனடியாக நந்தினியும் போன் அடித்துவிட்டாள்.

ராதிகா போனை எடுக்கவும்,நந்தினிக்கு ஏமாற்றமாய் போய்விட்டது.

தான் போன் செய்த காரணத்தை வேண்டா வெறுப்பாக கூறினாள்.

விஷ்வா தூங்க போயிட்டான் நந்தினி.பிராஜெக்ட் ஹெல்ப் கேட்டேன்னு சொல்லிடறேன்.நாளைக்கு காலைல வீட்டுக்கே கூட வர சொல்றேன்எனவும்,

இல்ல..வேண்டாம்..நான் உங்க வீட்டுக்கு வரேன்.அதான் மரியாதையா இருக்கும்என்று ராதிகா பேசும் முன்னே வைத்துவிட்டாள்.

பிரதாப் என்னவென்று கேட்கவும்,’உங்க தம்பி வாய்விட்டு சிரிக்கறதுக்கு முன்னாடியே,எவ்வளவு பொண்ணுங்க ப்ரபோஸ் பண்றாங்க..நல்லா சிரிச்சு பேசி..கடலை போட்டா...இன்னும் எத்தனை பொண்ணுங்க க்யூல நிற்பாங்களோ..?”அங்கலாய்க்கவும்,

நந்தினி என்ன கேட்டாங்க..?”என்று விஷயத்திற்கு வரவும்,

நாளைக்கு வீட்டுக்கு வர்றாளாம்..இது எங்க போய் முடியப் போகுதுன்னு எனக்கு தெரியல..!!”எனவும்,

விதியோட வழியில பயணிப்போம்..விஷ்வாவுக்கு என்ன விதிச்சிருக்கோ அது தான் நடக்கும்.நீ கவலைப்படாம போய் படுஎன்றவன்,டிரைவரின் மகன் ஆதவனை  அழைப்பதற்கு சென்றான்.

ஆதவனோடு வீட்டிற்குள் நுழையும் சமயம் எதார்த்தமாய்,சரவணனின் வீட்டை திரும்பி பார்க்க...நந்தினி அங்கே நின்றுகொண்டு..தங்களது வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது.

ஒருவேளை பாட்டுக்கேட்டுக் கொண்டு கூட,ஜன்னல் பக்கம் அமர்ந்திருக்கலாம் என்று மனதை சமாதானம் செய்துகொண்டு,தூங்க சென்றான் பிரதாப்.

 

No comments:

Post a Comment