காணும் யாவும் நீயாக-13

 

அத்தியாயம் 13

 

பிரதாப்பும்,விஷ்வாவும் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டதை,கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த மீனாக்ஷி,வீட்டில் வேலைகளை முடித்த பின்னர்,ராதிகாவிற்கு போன் செய்தார்.

 

கண்மூடி படுத்திருந்தவள்,போன் சத்தம் கேட்டு எழுந்து,போனை எடுத்தாள்.

 

மீனாக்ஷி மேடம்என்று பெயர் வரவும்,

 

சுறுசுறுப்பானவள்சொல்லுங்க மேடம்என்றாள்.

 

"தனியாவே ஏன் இருக்க ராதிகா..இங்க வந்து,கொஞ்ச நேரம் எங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணலாமே"என்று கேட்கவும்,

 

இதோ வர்றேன்மாஎன்று உடனே சம்மதித்துவிட்டாள்,

 

எப்போதும் வர தயங்குபவள்,இன்று உடனே வருகிறேன் என்று வீட்டிற்கு வர சம்மதிக்கவும்,மீனாட்சிக்கே ஆச்சர்யமாகிவிட்டது.

 

வீட்டிற்கு வந்த ராதிகாவை,புன்னகையோடு அவர் வரவேற்கவும்"நானே வரலாம்னு யோசிச்சுட்டு தான் இருந்தேன்.நீங்களாவே கூப்பிட்டிங்க"என்றபடி வீட்டிற்குள் வந்தாள்..

 

நந்தினியும் வீட்டில் இருந்தவள்"இப்போ உடம்புக்கு எப்படி இருக்குஎன்று விசாரித்தாள்.

 

"இப்போ பரவாயில்ல நந்தினிஎன்றவள்,

 

உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்எனவும்,நந்தினி ஆச்சரியமாக ராதிகாவை பார்த்தாள்.

 

ராதிகா எப்போதும் தானாக முன்வந்து,நந்தினியிடம் பேசியது கிடையாது..முடிந்த அளவுக்கு ஒதுங்கிப் போகவே முயற்சி செய்வாள்.

 

 இன்று என்னவாகிவிட்டது..?என்று மனதில் நினைத்தவள்,

 அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,வாங்க பேசலாம்என்று விருந்தினர் அறைக்கு அழைத்து செல்ல,

 

நீங்களும் வாங்க மேடம்என்று மீனாட்சியையும் ராதிகா அழைத்தாள்.

 

அவரும் அறைக்குள் வரவும்,நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

 

"உனக்கு விஷ்வா செட் ஆக மாட்டான் நந்தினி.அவன் பின்னாடி நீ போறது வேஸ்ட்எனவும்,

 

இதை நீங்க ஏற்கனவே சொல்லி இருக்கீங்கஎன்றாள் பட்டென்று..!

 

ஏற்கனவே நான் மறைமுகமா,உனக்கு சொல்லி இருக்கேன் தான்..நீ புரிஞ்சுக்கல..இப்போ எதையும் மறைக்காமல்,நேரடியா உன்கிட்ட சொல்ல வந்திருக்கேன்..எனக்கு உன்னோட வாழ்க்கையும் ரொம்ப முக்கியம்என்று கூறவும் நந்தினிக்கு குழப்பமாகி விட்டது.

 

 மீனாக்ஷியும் குழம்பியவர்,எதையும் தெளிவா சொல்லுமாஎனவும்,

 

"நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்மா..ஆனா நீங்க எதையும் விஷ்வாகிட்டவோ,இல்ல..பிரதாப்கிட்டவோ கேட்கக் கூடாது.. இதுக்கு உங்களுக்கு சம்மதமாஎன்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு பிரதாப்பிடம்,எப்படியும் விசாரிப்பார்கள் என்று தெரியும்..

 

 ஆனாலும் வேண்டுமென்றே வாக்குறுதியாக கேட்க..மீனாட்சிக்கும் எவிஷயம் எதுவோ இருக்கிறது என்று தோன்றியதால்எதுவும் கேட்க மாட்டேன் ராதிகா..நீ நம்பி சொல்லலாம்என்று வாக்களித்தார்.

 

"விஷ்வாவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுஎனவும்,

 

ராதிகாவின் பேச்சை நம்பாமல்,சிரித்த நந்தினிஎன்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு,விஷ்வா புது காரணம் சொல்லி அனுப்பியிருக்கார்.. அப்படித்தானேஎனவும்,

 

நான் இங்க வந்ததே விஷ்வாவிற்கு தெரியாது நந்தினி.இங்க பேசிட்டு தான் வீட்ல அவன்கிட்ட போய் பேசணும்"என்றவள்,

 

உனக்கு நம்பிக்கை இல்லைன்னா..இதுதான் எங்க சொந்த ஊரோட அட்ரஸ்..நீ ஊருக்குப் போய் யார் கிட்ட வேணா விசாரிச்சு பார்என்றவள், கையோடு தன் செல்லில் இருந்த விஷ்வாவின் திருமண புகைப்படத்தையும் காண்பித்தாள்.

 

 நந்தினியால் இந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை.

 

 மீனாட்சிக்கும் அதே நிலைமைதான்.

 

உடனே சுதாரித்து விட்டவர்,”நந்தினி விஷ்வாவை காதலிக்கிறதா... சொல்லும்போதே,இந்த விஷயத்தை நீ எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே ராதிகா..இவ்வளவு நாள் ஏன் சொல்லாம மறைச்ச..?என்று கோபமாக கேட்கவும்,

 

எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தேன் மேடம்.ஆனா இந்த விஷயத்தை மறைக்க,மறைக்க,பிரச்சனை பெருசாகும்னு தோணுச்சு மேடம்.அதான் மனசு கேட்காம,இப்போ சொல்றேன்..என்றவள்,

 

இன்னொரு விஷயம்..விஷ்வாவோட வைஃப்..இப்போ உயிரோட இல்லஎன்றும் கூற,நந்தினி அழுதே விட்டாள்.

 

அவளால் பேசக்கூட முடியவில்லை..

 

வந்த வேலை முடிந்ததென்று ராதிகா கிளம்பவும்,தன்னை சமாளித்துக் கொண்ட நந்தினி,”ஒரு நிமிஷம் ராதிகா..இவ்வளவு நாள் இல்லாம..திடீர்னு என் மேல உங்களுக்கு எப்படி அக்கறை வந்துச்சு...? விஷ்வாவும்..என்னை அவாய்ட் பண்றதுக்கு,இது தான் காரணம்னு,என்கிட்டே நேரடியா சொல்லியிருக்கலாமே.. ஏன் எதையும் சொல்லாம மறைச்சார்..?கோபத்தோடு கேட்க...

 

ஏன்னா விஷ்வாவுக்கு நடந்த ஆக்சிடென்ட்ல,அவன் தன்னோட கல்யாண வாழ்க்கையையே மறந்துட்டான்..அவன் வைஃப் நினைவுகள் சுத்தமா அவனுக்கு இல்ல..இப்போ அவ ஞாபகம் இல்லாம இருக்கலாம்.ஆனா  கொஞ்ச காலம் கழிச்சு,கட்டாயம் எல்லாம் ஞாபகம் வரும்னு டாக்டர் சொல்லியிருக்கார்..எல்லாம் ஞாபகம் வந்துட்டா,அவன் மனைவியை,ரொம்ப மிஸ் பண்ணுவான்..

 

வேற யாரையும் மனசால கூட,அவனால நினைச்சுப் பார்க்க முடியாது..அந்த அளவுக்கு  ரொம்ப அதிகமா,ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க..என்றவள் நந்தினியை இன்னும் காயப்படுத்தும் விதமாய் பேசினாள்.

 

இப்போ எல்லாம் தெரிஞ்சும்,விஷ்வாவை மறக்க முடியாம,கல்யாணம் பண்ண நினைச்சா..நீ எப்பவும் அவனுக்கு இரண்டாவதா தான்  இருக்கணும்..அவனோட மனைவியோட இடத்தை உன்னால ரிப்லேஸ் செய்யவே முடியாது..நான் சொல்றதை சொல்லிட்டேன்..இனி உன் விருப்பம்என்றவள், கிளம்பிவிட..

 

நந்தினியும் ராதிகா கூறியதை ஏற்க முடியாமல்,அலைபேசியில் ராதிகா அனுப்பிய,விஷ்வாவின் திருமண போட்டோவையே விடாமல் பார்த்துக்கொண்டிருக்க..மீனாக்ஷி உடனடியாக தன் கணவருக்கு போன் அடித்தார்.

 

அலுவலக நேரத்தில் மனைவி போன் செய்தால்,எதுவும் முக்கியமான விஷயமாய் இருக்கும் என்பதால் அவசரமாய் போன் எடுத்தவர்,”எதுவும் முக்கியமான விஷயமாஎன்று விசாரித்தார்.

 

உங்க கூட பிரதாப் இருக்காறாங்க..?”என்று விசாரிக்கவும்,

 

பக்கத்துல தான் இருக்கான்..என்ன விஷயம்என்று கேட்கவும்,

 

அவர் தம்பிக்கு கல்யாணமான விஷயத்தை,ஏன் மறைச்சார்னு கேளுங்கஎனவும்,

 

சரவணன் புரியாமல்,”என்னம்மா சொல்ற..எனக்கு எதுவுமே புரியலஎன்று தான் கேட்டது சரிதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டார்.

 

விஷ்வாக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்-ங்க.அவன் மனைவி இறந்துட்டதா ராதிகா சொல்றா..நீங்க பிரதாப்கிட்ட விசாரிச்சுட்டு,அந்த விஷயம் உண்மைதானான்னு எனக்கு கன்பார்ம் பண்ணுங்க..அது உண்மைன்னா.. யோசிக்காம பிரதாப்பை கூட்டிட்டு வீட்டுக்கு வந்துடுங்கஎன்று கட்டளையிடும் குரலில் கூறவும்,சரவணனால் மறுக்க முடியவில்லை.

 

தனக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்து இருந்த பிரதாப்பை பார்த்தவர்,”உன் தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சா பிரதாப்என்று விசாரிக்கவும்,

 

அதிர்ந்த பிரதாப்,பொய் கூற மனமில்லாமல்,”கல்யாணம் ஆகிடுச்சு சார்.. உங்களுக்கு எப்படி தெரியும்என்று கேட்கவுமே..

 

தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சரவணன்,”என் கூட வீட்டுக்கு வாஎன்றவர்,

 

உன் தம்பியையும் வீட்டுக்கு வர சொல்லுஎன்று கூறவும் பிரதாப் தயங்கினான்.

 

சரவணன் கேள்வியாக பார்க்கவும்,”விஷ்வாக்கு பழைய ஞாபகங்கள் வர கூடாதுன்னு,டாக்டர் சொல்லியிருக்காங்க சார்..உங்களுக்கு என்ன சந்தேகமோ,என்கிட்டவே கேளுங்க..அதுக்கு நானே பதில் சொல்றேன்எனவும்,

 

சரவணன் ஒரு நொடி கண்மூடி திறந்தவர்,”இதுல உன் தம்பியோட வாழ்க்கையும்,என் மகளோட வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு பிரதாப்.. இனியும் விஷ்வா பின்னாடி,என் பொண்ணு சுத்துறதுல எனக்கு விருப்பமில்ல..நீ விஷ்வாவுக்கு போன் பண்ணுஎனவும், பிரதாப்பால் மறுக்க முடியவில்லை.

 

தம்பியின் நிலையை நினைத்தால்,அவனுக்கு பாவமாக இருந்தது.. விஷ்வாவிற்கு திருமணமான விஷயத்தை,இவர்களிடம் யார் கூறியது என்று கேள்வி எழுந்தாலும்,அதை எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் அமைதியாக சரவணனுடன் பயணித்தான்.

 

விஷ்வாவிற்கு பிரதாப் போன் செய்யாமல்,நேரத்தைக் கடத்திக்கொண்டே இருக்கவும்,சரவணனே விஷ்வாவிற்கு நேரடியாக போன் செய்தவர்,”வீட்டுக்கு வந்துட்டு போப்பா.. கொஞ்சம் அர்ஜென்ட்என்றவர் உடனே போனையும் வைத்துவிட,

 

 விஷ்வாவும்,நந்தினி விஷயமாகத்தான் இருக்கும்என்று எண்ணியவன் வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு கிளம்பி வந்தான்.

 

கார் சத்தம் கேட்கவுமே,ராதிகாவிற்கு போன் செய்த மீனாட்சி,நீயும் வீட்டுக்கு வாம்மாஎன்று அழைக்கவும்,உடனடியாக அவளும் வீட்டிற்கு வந்து விட்டாள்.

 

அடுத்த சில நிமிடங்களில் விஷ்வாவும் வந்துவிட வீட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பதை பார்த்தவன்,வேலைக்காரர்களின் சத்தமும் இல்லாது போக,விஷயம் கொஞ்சம் சீரியஸானது என்பதை உணர்ந்தவன்,தன் அண்ணனிடம்,”என்ன விஷயம் பிரதாப்என்று கேட்டான்.

 

பிரதாப் தன் மனைவியை முறைக்க,அவளோ தன் போனில் இருந்த புகைப்படத்தை விஷ்வாவிடம் காட்டினாள்.

 

அதில் தான் வேறொரு பெண்ணோடு..திருமண கோலத்தில் இருப்பதை பார்த்த விஷ்வா,”யார் பார்த்த வேலை இது..?”கோபமாக கேட்க,

 

 இது போட்டோஷாப் இல்ல விஷ்வா..உனக்கு உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சு..இந்த உண்மையை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்..எனவும்,

 

 நீ சொல்றதை என்னால நம்பவே முடியல ராதிகா..எதுவும் பிரான்க் பண்றியா...? ராதிகாவை விசாரிக்க,

 

 மீனாக்ஷி,உனக்கு உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு,ராதிகா ஆதாரத்தோட சொல்றாப்பாஎன்றவர்,

 

ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்திருந்த மகளிடம்,”இந்த விஷயம் உண்மை தான்னு,இவங்க எல்லாரும் ஒத்துகிட்டாங்க.இனிமேலாவது நீ எல்லாத்தையும் மறந்துட்டு,நாங்க சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கஎனவும்,

 

சரவணன் மனைவியிடம்,”நீ கொஞ்சம் பேசாம இரு மீனாக்ஷிஎன்றார்.

 

பிரதாப்பை பார்த்தவர்,”உன்னை என் மகன் மாதிரி நினைச்சு தான், என் வீட்டுக்குள்ள,ஒருத்தனா நுழையற அளவுக்கு உரிமையை கொடுத்தேன் பிரதாப்.எனக்கு நீ கொஞ்சமாவது உண்மையா இருந்திருக்க வேண்டாமா..?

 

நந்தினி விஷ்வா மேல ஆர்வம் காட்டின போதெல்லாம்,உன்னோட மனசுக்கு நீ பண்றது தப்புன்னு தோணலையா..என் பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்டு இருக்குன்னு தெரிஞ்சும்,நீ அமைதியா இருந்திருக்கேன்னா என்ன அர்த்தம்..?

 

என்னால உன்னோட மனைவியையும்,உன்னோட தம்பியையும் எதுவும் கேட்க முடியாது பிரதாப்.ஏன்னா நான் உன்னை வச்சு தான்,உன் தம்பியை எடை போட்டேன்.உன்னோட தம்பியை,என் வீட்டுக்குள்ள தைரியமா விட்டேன்.என் மகளோடையும் பழக அனுமதிச்சேன்..

 

இந்த அளவுக்கு உன் மேல நம்பிக்கை வைச்ச காரணத்துக்காகவாவது, என்கிட்ட நீ விஷயத்தை சொல்லி இருக்கலாமே பிரதாப்என்று கோபத்தோடு கேட்கவும்,பிரதாப் எதுவும் சொல்ல முடியாது அமைதி காத்தான்.

 

உன் தம்பி தான்,உனக்கு பெருசா தெரிஞ்சு இருக்கான் இல்லையா பிரதாப்.. அப்போ உன்மேல நான் வச்ச நம்பிக்கைக்கு என்ன அர்த்தம்..?இப்போ இவ்வளவு தூரம் எல்லாம் நடந்ததுக்கு முழு காரணமும் நீதான் பிரதாப்..நீயே நாங்க என்ன செய்யலாம்னு சொல்லுஎன்று கேட்கவும் விஷ்வா எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலைமையில்,அவர்கள் பேசுவதை மனதில் தோன்றிய வலியோடு,கூர்மையாக கவனித்தான்..

 

புகைப்படத்தில் கட்டிய பெண்ணின் உருவம் அவனைப் பேச விடாமல் செய்து கொண்டிருக்க,நந்தினியும் கண்ணெடுக்காமல் விஷ்வாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அதையும் பிரதாப்பிடம் சுட்டிக்காட்டிய சரவணன்,”பதில் சொல்லுப்பாஎன்று திரும்ப கேட்கவும்,

 

நான் வேலையை விட்டுடறேன் சார்.இனி எங்களோட தொந்தரவு உங்களுக்கு இருக்காது.எங்க ஊருக்கே போயிடறேன்எனவும், விஷ்வா சட்டென்று நந்தினியை திரும்பிப்பார்த்தான்.

 

அந்த பார்வைக்காகவே காத்திருந்தவள் போல,விஷ்வாவின் அருகே வந்த நந்தினி,”இந்த பொண்ணோட நினைவுகள்,இப்போ உங்களுக்கு இல்லை தான விஷ்வாஎன்று கலங்கிய குரலில் கேட்க,இல்லை என்ற பதிலை அவனால் கூற முடியவில்லை.

 

ஆம்என்ற பதில் எத்தகைய எதிர்வினையை கொடுக்குமென்று விஷ்வாவிற்கு தெரியும்.

 

எதுவும் பேசும் நிலையிலும் இல்லாததால்,”இனி எதுவுமே சரிவராது நந்தினி.நீங்க உங்க அப்பா அம்மா பேச்சை கேளுங்க.அது தான் எல்லாருக்கும் நல்லதுஎன்றவன் அங்கே நிற்க பிடிக்காமல் கிளம்பவும்..

 

அவனைத் தடுத்த சரவணன்,” நீங்க என் பொண்ணை பார்க்கிறது,இதுவே கடைசியா இருக்கணும் விஷ்வாஎன்று எச்சரிக்கும் குரலில் கூறவும்,

 

திரும்பியவன் போனை ஒரு முறை பார்த்துவிட்டு,”இவதான் என் மனைவின்னா..இப்போ இவ எங்க இருக்கான்னு தேட போறேன் சார் என்று மறைமுகமாக அவருக்கு பதில் கொடுத்துவிட்டு நகரவும்,

 

 அந்த பொண்ணு இறந்திட்டாதா சொன்னாங்கஎன்று நந்தினி பேச்சில் குறுக்கிட்டாள்.

 

இந்த விஷயம் விஷ்வாவை அதிகமாகவே பாதிக்க,மூளை நரம்புகள் அவனை ஏதோ செய்யவும்,தன் அண்ணனிடம்என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா பிரதாப்..”என்று உள்ளே சென்ற குரலில் கேட்கவும் பயந்துபோன பிரதாப்,தன் தம்பியின் தோளைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றான்.

 

ராதிகாவும் அவர்களுடனேயே வரவும்,படுக்கை அறைக்குள் நுழைந்த ராதிகாவை தடுத்த பிரதாப்,”நீ வெளியே இருஎன்று எச்சரிக்கும் குரலில் கூறியவன்,

 

 விஷ்வா தன் திருமணத்தைப் பற்றி கேட்க முயலவும்,”எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இருக்கு விஷ்வா..அதுக்கு முன்னாடி நீ கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுஎன்று அவன் எப்போதும் தலைவலிக்கு எடுக்கும் மாத்திரையை,வலுக்கட்டாயமாக அவனுக்கு கொடுத்தான்

 

விஷ்வா மாத்திரையை விழுங்கி விட்டு,படுக்கையில் சாயவும்,வெளியே வந்த பிரதாப்,ராதிகாவின் கன்னத்தில் அவள் எதிர்பாராத சமயத்தில், ஓங்கி ஒரு அறை விட்டான்.

 

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ந்து போய்,கணவனை பார்க்கவும்,விஷ்வாவிற்கு மட்டும் எதுவும் ஆச்சு..உன்னை தொலைச்சு கட்டிடுவேன்என்று எச்சரித்துவிட்டு ஹாலில் சென்று அமர்ந்தான்.

 

என்னோட விசு,என்னை தவிர..வேற ஒரு பெண்ணை  பார்த்தாலே எனக்கு பிடிக்காது மாமா...அப்படியிருக்கும் போது..நீங்க கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்களே..இது தப்பில்லையா மாமா.."என்று ராதிகா வேறு குரலில் பேசவுமே,பிரதாப்பிற்கு புரிந்து போயிற்று..

 

எதையும் காட்டிக்கொள்ளாத பாவனையில்,மிமிக்ரி பண்ணது போதும் ராதிகா..என்றவன் கண் மூடி அமர….

 

விஷ்வா உயிரோட இருந்தா...எப்படியும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்க தானே மாமா..அப்போ விஷ்வா உயிரோட இருக்க கூடாது தானே..என்னோடவே விஷ்வா வந்துடட்டும் மாமாஎன்று பேசிக்கொண்டே செல்ல….

 

போதும்..நிறுத்து மதுஎன்று ஆத்திரத்தில் கத்திவிட

 

எப்பவுமே நீங்க நல்ல நடிகன் மாமாஎன்று சத்தமாக சிரிக்க ஆரம்பித்தவள்….

 

இப்போ நான் வந்த வேலை முடிஞ்சுடுச்சு மாமா...நான் போறேன்...ஆனா விசுவை என்னோட  கூட்டிட்டு போக சீக்கிரமா வருவேன்எச்சரித்துவிட்டு ராதிகாவின் உடலை விட்டு வெளியேற..அவள் கூறிய விஷயத்தால்..பிரதாப்பின் உடல் முழுவதும் பயத்தால் வியர்க்க...கீழே விழுந்து கிடந்த மனைவியை பார்த்தபடி,உறைந்த நிலையில் அமர்ந்திருந்தான் பிரதாப்.

No comments:

Post a Comment