kaanum yaavum neeyaaga-12

 

 அத்தியாயம் 12

 

ராதிகாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் இருந்தாலும்,அவள் எப்போதும் சோர்வாகவே இருக்க..விஷ்வாவே வீட்டு வேலைகளை எல்லாம் கவனித்துக் கொண்டான்.

 

பிரதாப்பும் அலுவலகம் செல்ல,தயாரான உடையில் வெளியே வரவும், ராதிகா கணவனை பாவமாக பார்த்தாள்.

 

அவளின் முக பாவனை தெரிந்தும்,பிரதாப் அவளிடம் எதுவும் பேசவில்லை.

 

ராதிகா,பிரதாப்பை பார்ப்பதை உணர்ந்த விஷ்வா,"ரெண்டு பேருக்குள்ள என்ன சண்டை"என்று விசாரித்தான்

 

ராதிகா பேசுவதற்கு முன் குறுக்கிட்ட பிரதாப்,"அப்படியெல்லாம் இல்ல விஷ்வா.அவளுக்கு காய்ச்சல்..அதான் அமைதியா இருந்தா.நானும் தொந்தரவு செய்யாமல்,அமைதியா இருக்கேன். அவ்வளவுதான்"என்றவன்,தனக்கு தேவையான உணவுகளை தட்டில் போட்டுக் கொண்டு அமரவும்,விஷ்வா ராதிகாவை பார்த்தான்.

 

அவளோ,"இன்னும் ஒரு ரெண்டு நாள் லீவு போடுங்கன்னு சொன்னேன்.அதுக்கு தான் கோபம் விஷ்வா"என்றாள்.

 

"லீவு போடலாமே பிரதாப்.ராகாவுக்கு முடியலைன்னு தானே கேட்கறா.இந்த நேரத்துல,நீ கூட இருக்கணும் பிரதாப்.லீவ் போடு"எனவும்,

 

"உன்னோட அண்ணிக்கு உடம்பெல்லாம் சரியாகிடுச்சு விஷ்வா.மனசுதான் சரியில்ல"எனவும் புரியாமல் பார்த்தான்.

 

கணவன்-மனைவிக்குள் பிரச்சனை என்று விஷ்வாவிற்கு புரிந்தது.

 

அதற்குள் தான் தலையிடலாமா..வேண்டாமா என்ற யோசனையிலேயே விஷ்வா அமைதியாக இருக்க,ராதிகா மனதில் இருந்ததை வெளிப்படையாக விஷ்வாவிடம் கூறினாள்.

 

"ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு,அம்மா அப்பாவை பார்க்க போகலாம்னு சொன்னேன் விஷ்வா.எனக்கும் அப்பா அம்மாவை பார்க்கணும்னு ஆசை இருக்காதா"என்று கேட்கும்போதே அழுதுவிட்டாள்.

 

விஷ்வாவிற்கும் அப்போதுதான் இந்த விஷயம் தோன்றியது.

 

 "ஏன் முன்ன மாதிரி,நீ உன்னோட அப்பா,அம்மா கூட பேசறது இல்ல ராதிகா?முன்னாடியெல்லாம் தினமும் போன் பண்ணுவியே..!

 

"நான் இங்க வந்த நாளிலிருந்து,நீ அவங்க கூட பேசவே இல்லையே..என்ன விஷயம்..?" என்று விசாரிக்கவும்,பிரதாப் ராதிகாவை முறைத்தான்.

 

ராதிகா என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க,பிரதாப் விஷ்வாவிடம்,"ஆபீஸ் போனதுக்கப்புறம் அவளுக்கு என்ன வேலை..?தினமும் பேசிட்டு தான் இருக்கா"எனவும் விஷ்வாவால் நம்பமுடியவில்லை என்றாலும்,மேற்கொண்டு துருவி துருவி கேள்வி கேட்க,விஷ்வாவிற்கு பிடிக்கவில்லை.

 

"நீ அவங்க வீட்டுக்கு,கூட்டிட்டு போயிட்டு வா பிரதாப்.அப்பதான் ராதிகாவுக்கும், கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" எனவும்,

 

பேச்சை வளர்க்க விரும்பாத பிரதாப்,"கூட்டிட்டு போறேன் விஷ்வா..சார் கிட்ட லீவு கேட்டு பார்க்கறேன்"என்று முடித்துவிட்டான்.

 

பிரதாப் மேற்கொண்டு எதுவும் பேசாமல்,அலுவலகத்திற்கு கிளம்பவும்,விஷ்வாவும் அமைதியாக கிளம்பியவன்,பைக்கை எடுத்துக்கொண்டு காலேஜுக்கு சென்றுவிட்டான்.

 

 பிரதாப் பைக்கை எடுக்கும்போது,அவனிடம் வந்த ராதிகா,"நான் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா..?"என்று கவலையோடு கேட்கவும்,

 

 "எனக்கு புரியாமல் இல்ல ராதிகா.அதுக்கான நேரம் இது இல்லை. அவ்வளவுதான்" என்றவன் பைக்கை எடுத்து கிளம்பும் சமயம்,, பிரதாப்பிற்குள் புகுந்து வெளியே வந்த உருவம்,ராதிகாவின் முன்நின்றது.

 

ஒரு நொடி என்றாலும்,அரண்டு போன ராதிகாவின் நெஞ்சம், பயத்தில் படபடவென்று அடித்துக்கொண்டது.

 

 "நீ பயப்படுற அளவுக்கு,என் நிலைமை இருக்குல்ல ராதா"இன்று பேசிய உருவத்திடம்,எதுவும் பேச விருப்பம் இல்லாது,திரும்பி வீட்டிற்குள் நடந்தாள்.

 

 தன் பின்னே அந்த உருவம் நடந்து வருவது,ராதிகாவிற்கு தெரிந்தது.

 

இறந்த பின்பும்,ஒருவரால் எப்படி பேசமுடிகிறது..நடக்க முடிகிறது என்று மனதில் எழுந்த கேள்விகளுடன்,அப்படியே மடிந்து கீழே அமர்ந்தாள்.

 

"ரொம்ப பயமா இருக்கா ராதா"சற்றே கிண்டலுடன் கேட்கவும்,

 

"நீ என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்ற..உனக்கு நான் எந்த பாவமும் செய்யலையே..! உன்னால இத்தனை நாள்,நான் அனுபவிச்ச கஷ்டம் போதும்.எல்லாத்தையும் மறந்துட்டு,இப்போ தான் இயல்புக்கு திரும்பியிருக்கேன்.தயவுசெஞ்சு என்னை விட்டுடு"என்று ராதிகா கெஞ்சவும்,

 

"உன்னை தொந்தரவு செய்யணும்னு,நான் நினைக்கல ராதிகா.என்னை சிலரால் தான் பார்க்க முடியும்.உணர முடியும்.உன்னால என்னை பார்க்க முடியுது.அதனாலதான் உன்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன்..

 

"ஆனா நீ..உன்னோட நலனை மட்டும் யோசிச்சிட்டு,எனக்கு உதவி செய்ய மாட்டேங்குற..எப்பவுமே நீ சுயநலவாதிதான் ராதா,"எனவும்,

 

"நீ மட்டும் சுயநலவாதி இல்லையா..என்னால மட்டும் தான் உன்னை பார்க்க முடியுதா..?ஏன் விஷ்வாவால பார்க்க முடியலையோ..? அவன்கிட்ட போய் உதவி கேளு"என்று சற்றே குரலை உயர்த்தி கேட்கவும்,அந்த உருவம் அமைதியாக நின்றது.

 

ராதிகா பதிலை எதிர்பார்த்து,அந்த உருவத்தையே பார்த்திருக்க,"என்ன பதிலையே காணோம்.உனக்கும் அவன் நல்லா இருக்கணும்னு ஆசை இருக்கு தானே.அப்போ எல்லா பிரச்சனையும்,அப்படியே விட்டுட்டு கடந்து போயிடு.இதுவரைக்கும் நாங்க அனுபவிச்ச கஷ்டம் போதும்.இனி எந்த பிரச்சனையையும் எங்களால சமாளிக்க முடியாது.நீ போ..போயிடு..ப்ளீஸ்"என்று கெஞ்சினாள்.

 

"அப்படியெல்லாம் போயிட முடிஞ்சா,நான் எதுக்கு இப்படி ஆவியா சுத்திட்டு இருக்கேன் ராதா.என்னோட வலி,வேதனை,அவமானம் இதெல்லாம் யாராலயும் உணர முடியாது ராதா.ஏன்னா நான்தான் செத்துட்டேன்ல

 

"ஏன் ராதா..ஒரு ரெண்டு நாளைக்கு மேல,எனக்காக யாராலையும் அழ முடியலைல்ல ராதா..?

 

"மூணாவது நாள்,ரொம்ப இயல்பா உங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க..அப்போ எல்லார் மேலையும்,நான் காட்டின பாசத்துக்கு,அக்கறைக்கு என்ன மதிப்பு இருக்கு ராதா..?

 

நான் செத்துட்டேன்னு,என்னோட எல்லா நினைவுகளையும் உடனடியா அழிச்சிட்டு,.புதுசா ஒரு உறவுக்கும், தயாராகிட்டிங்களே ராதா..!

 

அப்போ என்னோட சாவுக்கு,ஒரு அர்த்தமே இல்லை அராதா..?

 

ஏன் எனக்கு இப்படி நடந்துச்சுன்னு,எனக்காக போராட யாருமே இல்லையா ராதா..?

 

ஏன் அமைதியாவே இருக்க ராதா...?

 

பதில் சொல்லு ராதா..?”என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு செல்லவும்,ராதாவால் எதற்குமே பதில் சொல்ல முடியாமல் போயிற்று..!

 

உன்கிட்ட பதில் இல்லைன்னு,எனக்கு தெரியும் ராதா..ஆனா என்கிட்ட இதுக்கெல்லாம் பதில் இருக்கு..எனக்கு நடந்த அநியாயத்துக்கு பதிலடி கொடுக்க என்னால முடியும்..

 

 உன்னோட உதவி இல்லாமையும்,என்னால எல்லாமே செய்ய முடியும் ராதா..அதுக்கான வழிகளையும்..அந்த கடவுளே உருவாக்கி கொடுத்துட்டார் ராதா..”எனவும் ராதிகாவுக்கு பயமாகிவிட்டது.

 

நீ என்ன சொல்ல வர...தெளிவா சொல்லு..எனக்கு எதுவும் புரியல..?”என்று கேட்கவும்,

 

எனக்கு பிடிவாதம் ரொம்ப ஜாஸ்தி ராதாஎன்று கூறவும் எதற்காக இப்படி கூறுகிறாள் என்று புரியாமல் பார்க்க ,

 

என்னோட தேவைகளை,இங்க இருக்க ஒரு பொண்ணு மூலமாவே,நான் நிறைவேத்த ஆரம்பிச்சுட்டேன் ராதாஎனவும்,

 

ராதிகா உள்ளே சென்ற குரலில்,”என்ன சொல்ல வர்ற..எதுனாலும் தெளிவா பேசுஎன்று கத்தவும்,

 

 நக்கலாய் சிரித்துக்கொண்டே,”விஷ்வா கூட நெருக்கமா பழக,ஒரு பெண்ணுக்கு ஆசை வந்துருச்சுன்னா,அந்த பொண்ணு உடம்புல நான் ஈசியா போயிட்டு வர முடியும்னு அர்த்தம்எனவும்,

 

நீ யாரை சொல்ற..”பயந்து போய் கேட்டாள்.

 

 என்னைப்போலவே ஒரு பிடிவாதக்காரி ராதா..அவ உடம்புல என்னால ரொம்ப ஈஸியா போய் வரமுடியும்..உனக்கு இன்னுமா புரியலஎன்று கேட்க,

 

 நீ நந்தினியையா சொல்ற..?”அப்படியிருக்க கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டே கேட்டாள்.

 

அவளோ...கருணையில்லாத அகோர சிரிப்புடன்,”ஆமாம்என்றாள்.

 

 அப்போ..அப்போ நந்தினி விஷ்வாவை விரும்பினதுக்கு காரணம் நீயா..அவ உடம்பில நீ,புகுந்து,உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைச்சியா..?”ஆச்சரியம் கலந்த கோபத்துடன் கேட்கவும்,

 

 நான் அப்படி சொல்லலையே ராதா..நந்தினி,விஷ்வா மேல ரொம்ப உரிமை காட்டும்போது,என்னால ரொம்ப ஈசியா அவளை என் கட்டுக்குள்ள கொண்டு வர முடியும்.இன்னும் புரியலையா..?என்று அதே நக்கலுடன் கேட்க,

 

நீ செய்யறது ரொம்ப தப்பு..நந்தினிக்கு விஷ்வா மேல வந்திருக்கது ஈர்ப்பு மட்டும்தான்.விஷ்வா பிடிக்கலைன்னு விலகி தான் போறான்..கொஞ்ச நாள்ல,அவளும் புரிஞ்சுகிட்டு விலகிப் போயிடுவா..நீ  தேவையில்லாம அந்த பொண்ணு வாழ்க்கையில விளையாடாத..எனவும்,

 

அப்போ நான் உன்னோட உடம்புக்குள்ள வரவா ராதா..?”கேட்கவும் ராதிகாவை பதில் சொல்ல முடியவில்லை.

 

எனக்கு எந்த விதத்திலும்,நீ உதவ தயாராவே இல்லை ராதா..!அப்படி இருக்கும்போது,என்னை இதைச் செய்யாதே..அதைச் செய்யாதேன்னு நீ கட்டுப்படுத்தாதே ராதா!” என்று கோபப்படவும்,

 

இப்போ நான் என்ன தான் செய்யணும்னு சொல்ற..”ராதிகா பொறுமை இழந்து கேட்கவும்,

 

நான் பழி வாங்க..நந்தினியை யூஸ் பண்ண மாட்டேன்..என்னோட ஞாபகங்கள்,விஷ்வாவிற்கு கடைசி வரை இருக்கணும்..என்னோட ஆசை..அவ்வளவு தான்.நீயா இதை அவனுக்கு சொல்றியா..?

 

இல்ல நந்தினி மூலமா..அவளோட செயல்கள் மூலமா..என்னோட நினைவுகளை, கொஞ்சம் கொஞ்சமா,அவனுக்கு கொண்டு வரட்டுமா..?” என்று கேட்கவும்,

 

உன்னைப் பற்றி எதுவும் சொல்ல கூடாதுன்னு,நாங்க நினைக்கல.. விஷ்வாவிற்கு பழசெல்லாம் ஞாபகப்படுத்த வேண்டாம்னு டாக்டர் சொன்னாங்க..!

 

அதனாலதான் நாங்க எதையும் அவன்கிட்ட சொல்லல..நாங்க செய்யறது எல்லாமே,அவனோட நல்லதுக்கு தான்..நீ இதை புரிஞ்சுக்காம..இப்படி விதண்டாவாதம் செய்றது நல்லா இல்ல..என்றவள்..

 

ஒரு முடிவுடன்..உன்னால விஷ்வா கூட பேச முடியுது..நேரடியாவே நீ யார்னு அவனுக்கு சொல்லிடு..நந்தினியை இதுல இழுக்க வேண்டாம்...அவ இன்னொரு வீட்டுக்கு வாழப் போற பொண்ணு என்றவுடன் வீடே அதிரும்படி சிரித்தாள்.

 

ராதிகா பயத்துடன் பார்க்கவும்,நீ சொல்றத நான் நான் நம்பிடுவேன்னு நீ நினைக்கிறியா ராதா...உனக்கு நந்தினி,விஷ்வாவை கல்யாணம் செய்யணும்னு ஆசையில்லையா..என்று கேட்க..ராதிகா அமைதிகாத்தாள்.

 

உன்னோட மௌனமே,பதிலை சொல்லிடிச்சே ராதா...நந்தினி விஷ்வாவுக்கு,காதலின்னா,மனைவின்னா...அப்போ நான் யார் ராதா...?

 

நான் யார் ராதா..?

 

நான் யார் தான் ராதா..?”திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்க…..ராதிகாவால் அதற்கு மேல் ,அமைதியாக இருக்க முடியவில்லை..

 

வாய்விட்டு,கதறி அழுக ஆரம்பித்தாள்….

 

எவ்வளவு நாள் கழிச்சு,எனக்காக அழற ராதா...?

 

இனி எனக்காக,நீ தினமும் அழணும் ராதா...!

 

அப்போ தான் எனக்கும் ஆறுதலா இருக்கும்..”என்று கூறியவலும் கதறி அழ..ராதிகாவால் அதற்கு மேல் தங்க முடியவில்லை..

 

மது..”என்று அருகில் வந்து அணைத்துக்கொள்ள முயல….உடலில்லாத அந்த உருவத்தை அவளால் உணரவே முடியவில்லை..

 

உனக்கு ஏன் இந்த நிலைமை வரணும் மது..?”என்று அழுது கொண்டேயிருக்க...இப்போது அந்த உருவத்திற்கு ராதிகாவின் மெல் இரக்கம்(?) வந்திருக்க வேண்டும்..

 

கண்ணை மூடிக்கோ ராதா எனவும் பதில் கேள்வி கேட்காமல்,ராதிகா கண்ணை மூடிக்கொள்ள….

 

ஆழ.மூச்செடுத்து,என்னை முழு மனசோட நினைச்சுக்கோ ராதா..” எனவும்,

 

அவளின் சொல்படி ராதிகாவும் கேட்க...இப்போது அந்த உருவம் ராதிகாவை அணைத்துக்கொள்ள,அந்த ஆழ்ந்த அணைப்பை முழுதாக உணர்ந்த ராதிகா..கண் திறந்து பார்க்க..மெல்ல மெல்ல அவள் உடலில் தன் ஆவியை நுழைத்துக் கொண்டிருந்தாள் மது.

 

சுய உணர்வு இழக்க தொடங்கிய ராதிகா...என்னை ஏமாத்திட்ட மது..” என்று தனக்குள்ளையே பேசிக்கொண்டவளின் மனதில்நந்தினி பற்றி மது கூறிய விஷயங்கள் யாவும்..பொய்யாக இருக்கக்கூடும் என்று அப்போதுதான் தோன்றியது..

 

அவளின் எண்ணத்திற்கு பதில் கொடுக்கும் விதமாய்,சொல்பேச்சு காப்பாத்த..நான் உயிருள்ள மனுஷி இல்ல ராதா..உயிரில்லாத ஆவி...!

 

எனக்கு நல்லது செய்யவே தெரியாது ராதா...!

 

நான் நல்லது செய்யவும் மாட்டேன்..அதுக்கான அவசியமும் எனக்கு  இல்லை...எனக்கு என் விருப்பம் நிறைவேறணும்என்றவள் ஆக்ரோஷமாக,ராதிகாவுக்குள் புகுந்து ஐக்கியமாகி விட்டாள்

 

 

No comments:

Post a Comment