காணும் யாவும் நீயாக-9

 

அத்தியாயம் 9

ஞாயிற்றுக்கிழமை எந்த வேலையும் செய்யாமல் ராதிகா ஓய்வாக அமர்ந்திருக்க,அண்ணன் ஏதோ பைலை பார்த்துக் கொண்டிருக்கவும்,”இன்னைக்கும் வேலையோகேட்டபடி சோபாவில் அமர,அவனிடம் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

நேற்று இரவு,தான் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டதால் தான் அமைதியாக இருக்கிறாள் என்று புரியசாரி..ராதிகா..நேத்து பைக் வித்துட்டதா,அம்மா சொல்லவும்,கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.அதான் அப்படியெல்லாம் நடந்துகிட்டேன்..”என்றவன்,

அண்ணனிடம்,”சாரிண்ணாஎன்றான்.

பிரதாப் பேசாமல்,வேலையை பார்த்துக் கொண்டிருக்கவும்,ராதிகாவை கெஞ்சலாக பார்க்க,அதற்கு மேல் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.

இத்தனை வருஷத்துல,இன்னைக்கு தான்,நீ இவனை அண்ணன்னு சொல்ல கேட்டிருக்கேன்என்று ஆச்சர்யப்படவும்,பிரதாப் மனைவியை முறைத்தான்.

உங்கள மாதிரி,என்னால பேசாம இருக்க முடியாதுங்க...சாரிஎன்றவள்,

இன்னைக்கு எல்லாரும் ப்ரீயா தான இருக்கோம்.எங்கேயாவது வெளில போயிட்டு வருவோமா?”விஷ்வாவிடம் கேட்க,

எனக்கு ஓகே.உங்க ஆத்துக்காரருக்கு ஒகேவா?”வம்பிழுப்பதற்காக கேட்க,

என்ன ஆத்துக்காரரே..போலாமாசிரித்துக்கொண்டே கேட்கவும்,

பைக் எடுக்க ஷோரூம் போறோம்.அதான் ப்ளான்.மதியம் ரெண்டு பேரும் ரெடியா இருங்கஎன்றான்.

எனக்கு இப்போ வேண்டாம் பிரதாப்.தேவைப்படும் போது வாங்கிக்குவோம்எனவும்,

இப்போ தேவைப்படறதால தான் வாங்கப் போறோம்.இனி காலேஜ்-க்கு நீயே டிரைவ் பண்ணி போ..பக்கம் தானே..கால் ஒண்ணும் செய்யாதுஎன்றதை ராதிகாவே ஆட்சேபித்தாள்.

ஒரு ஆறு மாசமாவது ஆகட்டும்-ங்க.அப்புறம் காலுக்கு ஏதாவது ஆச்சுன்னா,என்ன செய்யறது..?”

இப்போ உன்னால நடக்க முடியுது தான விஷ்வா? வலியில்லையே..?”

ம்ம்..வலி இல்ல தான்

அப்போ பைக் ஓட்டு..யாரையும் எதிர்பார்த்துட்டு இருக்காதே..இங்க இருந்து காலேஜ் ரெண்டு கிலோ மீட்டர் கூட வராது..அதனால காலுக்கு பெரிய பிரச்சனை வராது.உன்னோட மனசை மட்டும் நீ தைரியமா வைச்சுக்கோ..”என்றவன் மனம் கேட்காமல்,

சின்ன விஷயத்துக்காக,நீ இவ்ளோ வெக்ஸ் ஆகியிருக்க வேண்டாம்.நீ ரொம்ப தைரியமான ஆள்..எதையும் சமாளிப்பேன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்...இனி அப்படி செய்யாத விஷ்வாஎனவும்,

சாரிண்ணா..ரொம்ப வருஷமா,என் கூடவே வைச்சுட்டு இருந்த பைக்.அதை எவ்வளவு பத்திரமா வச்சிருந்தேன்னு உனக்கே தெரியும்.

அப்படியிருக்கும் போது,அதை வித்துட்டேன்னு சொன்னா..அதுவும் என்னை கேட்காம,வித்துட்டேன்னு சொல்லும் போது,கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியல..இனி அப்படி நடந்துக்க மாட்டேன்..”சமாதானம் செய்யவும்,

சரி..விடுடாஎன்று இயல்பானான்.

சார்கிட்ட கொஞ்சம் வேலையிருக்கு.போயிட்டு வரேன்என்று சரவணின் வீட்டிற்கு சென்றான்.

ஹாலில் அமர்ந்திருந்த மீனாட்சியிடம்,”சாரை பார்க்கணும்மா..போன் பண்ணேன்.வர சொன்னார்..”எனவும்,

ம்ம்..சொன்னார்-பா.மேல வேலையா இருக்கார்.ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுவார்.உட்கார்என்றவர்,டீயை வேலைக்காரம்மாவை கொண்டு வந்து கொடுக்க சொன்னார்.

வேண்டாமென்று மறுத்தாலும் விடப்போவதில்லை என்பதால்,வாங்கிப் பருகிக் கொண்டிருக்க..பிரதாப்பின் சத்தம் கேட்கவும்,தனதறையிலிருந்து வெளியே வந்த நந்தினி,அம்மாவை ஒரு தரம் பார்த்துவிட்டு,”உங்க தம்பிக்கு உடம்பு சரியில்லையா?”என்று கேட்டாள்.

மீனாக்ஷி அம்மாவின் முன்னேயே கேட்கவும்,பிரதாப் சங்கடமாய் பார்க்க,அவர் முகத்திலும் ஆச்சர்யம் தோன்றினாலும்,”என்னப்பா..விஷ்வாவுக்கு உடம்பு சரியில்லையா?”என்று திருப்பி கேட்கவும்,

இல்லங்கம்மா..நல்லா தான் இருக்கான்..”என்றான்.

இல்லையே..நேத்து நைட்,ரெண்டு மணி இருக்கும்..உங்க வீட்டுக்கு வெளில கண் மூடி,ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாங்க..பார்க்கவே பாவமா இருந்துச்சு..”எனவும் திடுக்கிட்ட பிரதாப்..

வாய்ப்பே இல்லையே நந்தினி..நானும் ராதிகாவும்,நேத்து ஹால்ல தான் படுத்திருந்தோம்.எங்களை மீறி அவன் எப்படி வெளிய போயிருப்பான்அவசரப்பட்டு வாய்விட்டவன்,மீனாட்சியின் முகம் பார்த்து அமைதியானான்.

ஹால்ல தூங்கினிங்களா?அப்போ அவர் வெளில வந்தது கூட தெரியாத அளவுக்கு தூங்கியிருக்கிங்க..ரொம்ப நல்லா பார்த்துக்கறிங்ககுற்றம் சுமத்துவது போல பேசவும்,மகளை அதட்டினார் மீனாட்சி.

தம்பி மேல அவருக்கு அக்கறை இல்லாத மாதிரி பேசாத நந்தினி..முதல்ல நீ இப்படி பேசறதை நிறுத்து,எனக்கு பிடிக்கவேயில்லை”எனவும்,

“சாரிம்மா..நான் நேரா வீட்டுக்கே போய் கேட்கலாம்னு தான் இருந்தேன்..அது சரியா வராதுன்னு தான்,போகாம அமைதியாவே இருந்தேன்.இப்போ இவர பார்க்கவும்,மனசு கேட்கல”பாவமாய் பேசவும்,

“சரி..நீ போ”என்றார்.

“இன்னும் விஷ்வாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே..போன் பண்ணி கேட்டுடட்டுமா”மனம் கேட்காமல்,அம்மாவிடமே கேட்க..பிரதாப் கோபம்,சிரிப்பு எல்லாம் கலந்த மனநிலையில் இருந்தான்.

மீனாக்ஷி கோபமாக மகனை பார்க்க,பிரதாப் நந்தினியிடம்,”அவன் நல்லா தான் இருக்கான் நந்தினி.நைட் தூக்கம் வரலைன்னு வெளில வந்திருப்பான்..வேறெதுவும் இல்ல...!

“இன்னைக்கு நாங்க மூணு பேரும் வெளில போறோம்..இனியாவது அவன் நல்லா இருக்கான்னு நம்புங்க”எனவும்,நந்தினி வேறெதுவும் பேச முடியாது,அறைக்குள் சென்றுவிட..

“சாரிம்மா”என்று மன்னிப்பு கேட்டான் பிரதாப்.

“சார் வந்துட்டார்னு நினைக்கிறேன் பிரதாப்..அவர்கிட்ட கேட்டுட்டு கூப்பிடறேன்”என்று அலுவலக அறைக்கு சென்றவர்,வெளியில் நடந்தையும் பகிர்ந்துகொள்ள,

“நான் பார்த்துக்கறேன்.நீ அனுப்பு”எனவும்,

“உள்ள போப்பா”என்றார்.

மன்னிப்பு கேட்டதற்கு,மீனாக்ஷி எதுவும் சொல்லாததை வைத்தே,அவர் இந்த விஷயத்தை பேசுவதை விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்டான்.

எப்படியும் சரவணன் சாரிடம்,மீனாக்ஷி கூறியிருப்பார் என்று தெரியும்.

அவர் எதுவும் கேட்பார் என்று நினைக்க,அவரும் எதுவும் கேட்காமல்,அவரின் வேலைகளை மட்டும் கூறிவிட்டு,பைலை பார்த்து அனுப்பிவிட்டார்.

குழம்பியபடியே வீட்டிற்கு வந்தவன்,விஷ்வா புக் படித்துக் கொண்டிருக்கவும்,”நேத்து நைட் நீ வெளில போயிட்டு வந்தியா விஷ்வா”கேட்கவும்,

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,”ஆமா பிரதாப்.தூக்கமே வரல..அதான் நடந்துட்டு வந்தேன்”என்றவன்,மனதிற்குள் இதை நந்தினி தான் கூறியிருக்க வேண்டும் என்று நினைத்தான்.

“அந்த நேரத்துல,நந்தினி போன் பண்ணாங்களா?”கேட்கவும்,

“ஆமாம்”என்றான்.

“ஏன்,என்கிட்ட சொல்லலை?”

“நான் நைட் வெளில போன விஷயத்தை,நீ இப்போ ஞாபகப்படுத்தவும் தான்,எனக்கு நினைவுக்கே வந்துச்சு.இதுல எப்படி,நந்தினி போன் பண்ணதை சொல்ல முடியும்?”திருப்பி கேட்க,

“எங்ககிட்ட எதுவும் மறைக்கிறியா விஷ்வா..?அந்த பொண்ணை பிடிச்சிருந்தா,நேரடியாவே என்கிட்ட சொல்லலாமே?”எனவும்,

“பிடிச்சிருந்தா உன்கிட்ட சொல்லாம,வேற யார்கிட்ட சொல்லப் போறேன்..இப்போ எனக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லாத போது,எப்படி நான் சொல்ல முடியும்..

“நேத்து நைட்,அந்த பொண்ணு போன் பண்ணதை கூட,நான் அப்பவே மறந்துட்டேன்.இப்பவரைக்கும் அந்த பொண்ணு ஞாபகமே சுத்தமா வரல.நீ இப்படி பேசும் போது,கஷ்டமா இருக்கு பிரதாப்”என்றான்.

“நான் ஏன் கேட்கிறேன்னு உனக்கு புரியலடா..அந்த பொண்ணு,உனக்கு உடம்பு சரியில்ல..நான் கவனிக்காம நல்லா தூங்கிட்டேன்னு,என் மேலையே பழி போடறா..! அதுவும் அவங்க அம்மா முன்னாடியே கேட்கறா..!

“எனக்கு கோபத்தை விட,அந்த பொண்ணை நினைச்சு பாவமா தான் இருந்துச்சு..எப்பவும் உன்னைப் பற்றியே யோசிச்சுட்டு இருக்கா..! எனக்கு என்னவோ,உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவான்னு தோணலை”எனவும்,

ராதிகாவும்,”நீ நைட் வெளில போகும் போது,அதே நேரத்துக்கு சரியா நந்தினியும் எப்படி போன் பண்ணா விஷ்வா”ஆச்சர்யமாக கேட்க,

“நானும் அதையே தான் கேட்டேன்..ஏதோ உள்ளுணர்வுன்னு உளறிட்டு இருந்தா...போய் தூங்குன்னு சொல்லிட்டு,வீட்டுக்குள்ள வந்துட்டேன்”என்றான் சாதாரணமாக..!

கணவனை அர்த்தத்துடன் பார்த்தவள்,”இதை இப்படியே விட்டுடுவோம்..நீங்க சொல்ற மாதிரி,அலை போற போக்கில போவோம்..அது தான் புத்திசாலித்தனம்..இப்போ சாப்பிடுங்க..ஷோரூம் போகணும்”என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க,பிரதாப்பும் உணவருந்த அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் மூவரும் பைக் வாங்க கிளம்ப..”கார் புக் பண்ணிக்கலாம்”என்று ராதிகா கூறவும்,

“வேண்டாம்..இன்னைக்கு உன்னோட பைக்ல விஷ்வா வரட்டும்.லைட் வெயிட் தான்..ஓட்டிட்டு வரட்டும்...நாம ரெண்டும் பேரும்,என்னோட பைக்ல போகலாம்”என்றவன்,

“புது பைக்கை,பூஜை போடாம,நீ ஓட்ட வேண்டாம் விஷ்வா..நல்ல நாள் பார்த்து தான் எதையும் செய்யணும்”எனவும்,

‘இவனோட சாமி பக்திக்கு அளவே இல்ல’ மனதிற்குள்ளையே அண்ணனை திட்டிக்கொண்டான்.

மூவரும் திட்டமிட்டபடி ஷோரூம் சென்று,அங்கே விஷ்வாவிற்கு பிடித்தது போல,புது மாடல் பைக் வாங்கினார்கள்.

ஹெல்மெட்டை வாங்கி விஷ்வா அணிந்து பார்த்துக் கொண்டிருக்க,ராதிகா”எங்க போனாலும் ஹெல்மெட் போடாம,போகக் கூடாது விஷ்வா..இது உனக்கு மறு ஜென்மம்..செத்துப் பிழைச்சு வந்திருக்க”எனவும்,

“எப்போவாவது ஹெல்மெட் போடாம,நான் போயிருக்கேனா ராதிகா..அன்னைக்கு என்னவோ..மறந்துட்டேன் போல..”என்றவன்,

“எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு”என்று அங்கேயே கேட்க,

“தயவு செஞ்சு,முதல்ல இருந்து ஆரம்பிக்காத விஷ்வா”என்றவள்,

கணவனிடம்,”பைக்ல ஏறும் போதே,ஹெல்மெட் போட்டு இருந்தா தான்,பைக் ஸ்டார்ட் ஆகற மாதிரி எதுவும் இருக்காங்க..”என்று கேட்க..

“இந்த மாடல் பைக்ல இல்ல..பியூச்சர்ல வரலாம்..எல்லா நேரமும் சைன்ஸ் துணைக்கு வராது.நாம தான் ஞாபகம் வைச்சு,ஹெல்மெட் போடணும்.உயிரை காக்கற விஷயத்த மறந்தா...விஷ்வாவோட நிலைமை தான்”என்றவன்,

“இனி ஹெல்மெட் போடாம போகாதடா”என்று தன் பங்குக்கு அறிவுரை கூறியவன்,பைக்கை தங்கள் வீட்டு முகவரிக்கு டெலிவரி கொடுக்க கூறிவிட்டு வந்தான்.

“அடுத்து என்ன பிளான்”கேட்கவும்,

“ட்ரெஸ் பர்சேஸ் பண்ணணும்.போகலமாங்க”ராதிகா கேட்கவும்,

“உனக்கு எவ்வளவு வாங்கினாலும் திருப்தியாகாது இல்ல”சலித்துக்கொள்ளவும்,

“நான் என்ன மாசத்துக்கு நாற்பது புடவையா வாங்கறேன்..ஏதோ தோணும் போது,ஒரு சேலை,ஒரு சுரிதார் அவ்வளவு தான வாங்கிக்கறேன்..இது கூட வாங்கிக் கொடுக்க முடியாதா”என்று சண்டைக்கு கிளம்ப..

“முடியாது”என்று பிரதாப் வேண்டுமென்றே கூறவும்,

“அப்போ நீ வாங்கிக் கொடு விஷ்வா”கேட்கவும்,

“நீ ட்ரெஸ் வாங்கிட்டு,அப்புறம் பில் போடறதுக்கு,என்னோட கார்டையே கேட்கலாம்..இப்படி கேட்கணும்னு அவசியமேயில்ல”எனவும்,

சந்தோஷமாக,“இதனால தான்,உன்னை எல்லாருக்கும் பிடிக்குது விஷ்வா”என்றவள்,சேலை வாங்குவதற்கு சென்றாள்.

“இந்த பொண்ணுங்களுக்கு,யாராவது ஏமாந்தவன் ஒருத்தன் கிடைச்சா போதும்.நல்லவன்னு பட்டம் கட்டி,பில்லை   தலையில கட்டிடுவாங்க”எனவும்,

“அமைதியா இரு பிரதாப்.என்னோட அண்ணிக்கு நான் வாங்கிக் கொடுக்கறேன்.நீ வேணும்னே வம்பிழுத்து,சண்டைக்கு அடிபோடாதே”என்றவன்,ராதிகாவோடு செல்லாமல்,அங்கே போடப்பட்டிருந்த சேரில் அமர,பிரதாப் மட்டும் மனைவியின் பின்னே சென்றான்.

ராதிகா பத்து நிமிடங்களுக்குள் புடவை எடுத்துவிட,”உன்கிட்ட பிடிச்ச விஷயமே இதான் ராதிகா..எதையும் வாங்க ரொம்ப யோசிக்க மாட்ட”பாராட்டிய பிரதாப்,

“போகலாமா”கேட்கவும்,

“சரி”என்று உடன் வர,அவர்களை பார்த்த விஷ்வா,

“என்னைக்காவது ஒருநாள்,லேட்டா செலெக்ட் பண்ணலாமே ராதிகா..துணிக் கடைக்கு வந்துட்டு,பத்து நிமிஷத்துல பில் போட்டு,வெளில போறது,நல்லாவா இருக்கு”கேட்க,

“நான் இப்படித்தான்..உனக்கு வர்றவ அப்படி இருக்க மாட்டா”என்று கிண்டல் செய்ய,இது தேவையில்லாத வாக்குவாதங்களை கொண்டு வரும் என்பதால் அமைதியாகிவிட்டான்.

ராதிகாவும் புதுப்புடவை எடுத்த சந்தோஷத்தில்,இதை கண்டுகொள்ளவில்லை.

முதலில் விஷ்வாவை பைக்கை ஓட்ட விட்டு,அவனை பின் தொடர்ந்தான் பிரதாப்.

ஆளில்லாத சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது,விஷ்வாவிற்கு அவனது அம்மா போன் செய்ய,ப்ளூடூத்தில் ஆன் செய்து பேசினான்.

“எதுவும் முக்கியமான விஷயமாம்மா?”போனை எடுத்தவுடனே கேட்கவும்,

“இல்லப்பா..உனக்கு எதுவும் அவசர வேலையா?”கேட்க,

“இல்லம்மா..வண்டி ஓட்டிட்டு இருக்கேன்”என்று கூறவுமே,ராணிக்கு பயமாகிவிட்டது.

“உன்னை ஆறு மாசத்துக்காவது,பைக் ஓட்டவே கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே ராஜா..ஏன் பைக்கை எடுத்த..?அண்ணன் உன்னை எதுவும் சொல்லலையா..நீ முதல்ல பைக்கை ஓரமா நிறுத்திட்டு,எதுவும் ஆட்டோ பிடிச்சு போ ராஜா”என்று பயம் கலந்த அழுகையில் மிரட்ட..

“அம்மா..அழுகாதீங்க..”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே..

“விசு..பார்த்துப் போ..இடது பக்கம் லாரி வருது”என்ற குரல் கேட்க..யார் இப்படி கூறியது என்று திரும்பி பார்க்க முயலும் போது..சரியாக இடதுபுறமிருந்து,லாரியும் வர..சுதாரித்துக்கொண்டவன்..பைக்கை பிரேக் போட..அவனால் பதட்டத்தில் பேலன்ஸ் செய்ய முடியாமல் பைக்கோடு கீழே விழுந்தான்.

பின்னேயே வந்த பிரதாப்,பதறிப்போய் பைக்கை நிறுத்திவிட்டு ஓட,ராதிகாவும்,”விஷ்வா”என்று கத்தியபடி அவனிடம் சென்றாள்.

ஸ்கூட்டியை தூக்கிய பிரதாப்...விஷ்வாவிற்கு அடிபட்டிருக்கிறதா என்று பார்க்க..சுண்டு விரல் மட்டும் லேசாக நசுங்கி,ரத்தம் வந்து கொண்டிருந்தது..கையிலும் லேசாக சிராய்ப்புகள் இருக்க..தம்பியை தூக்கி நிறுத்தியவன்,அருகிலிருந்த கல்லில் அமர வைத்தான்.

ராதிகா தண்ணீர் எடுத்துக்கொண்டு வர,அதை வாங்கிப் பருகிய விஷ்வா..நிதானத்திற்கு வரவே சில நிமிடங்கள் ஆனது.

பிரதாப்,”என்னடா நீ”என்று கவலையில் திட்ட,ராதிகா கணவனை திட்டினாள்.

“எல்லாம் உங்களால தான்..அதுக்குள்ள பைக் வாங்கணும்னு என்ன அவசியம்..எதுவும் ஆகியிருந்தா...எல்லாத்துக்கும் நீங்க பொறுப்பெடுத்துக்குவீங்களா..?ஒண்ணு வந்தா,இன்னொன்னு மறந்துடுமாம்..ஏற்கனவே பட்ட காயத்தோட வலியே போகல..இதுல அடுத்த காயம்..எப்படிங்க தாங்க முடியும்..”அழுகையோடு கேட்க..

தனக்கு அடிபட்டதை தான் கூறுகிறாள் என்று விஷ்வா நினைத்துக்கொண்டு,”என் மேல தான் தப்பு ராதிகா..போன் பேசிட்டே வந்துட்டேன்..”எனவும்,

“யார் போன் பண்ணாங்க”கேட்க,

“அம்மா தான்”என்றான்.

பிரதாப்பால் எதுவும் கூற முடியவில்லை.

ராதிகா தான்,”ஹாஸ்பிட்டல் போகலாமா விஷ்வா”என்று கேட்கவும் தான்,காதில் பேசிய குரல் அவனுக்கு ஞாபகம் வந்தது.

“நமக்கு பின்னாடி யாரும் பைக்ல பாலோ பண்ணிட்டு வந்தாங்களா பிரதாப்”கேட்க,

“இல்லையே..”ஏன்டா”என்று கேட்கவும்,

“யாரோ...லேடி வாய்ஸ் கேட்டுதுடா..இடது பக்கம் லாரி வருது..பார்த்துப்போ விசுன்னு,காதுக்கு பக்கத்துல வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு...!

“சரியா திரும்பிப் பார்த்தா,அந்த பக்கம் லாரி வருது..உடனே பிரேக் போடலைன்னா...இன்னைக்கே போய் சேர்ந்திருப்பேன்”எனவும்..கணவன்,மனைவி இருவரும் அதிர்ந்து தான் போனார்கள்.

“விசுன்னு கூப்பிட்டதாவா சொன்ன?”சந்தேகமாக பிரதாப் மீண்டும் கேட்க,

“ஆமாம்..விசுன்னு தான் கூப்பிட்டாங்க”எனவும்,

‘இதென்ன சோதனை’என்று கணவன்,மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்க்க,முதலில் சுதாரித்துக்கொண்ட ராதிகா,”ஹாஸ்பிட்டல் போய்,செக்அப் பண்ணிடுவோம் விஷ்வா”எனவும்,

“அந்த அளவுக்கெல்லாம் இல்ல ராதிகா..காதுக்கு பக்கத்துல யாரோ பேசின மாதிரி இருக்கவும்,கொஞ்சம் பயந்துட்டேன்..அவ்வளவு தான்..அடியெல்லாம் பெருசா இல்ல..காலுக்கு மட்டும் வீட்டுல போய் மருந்து போட்டுக்கலாம்”என்றவன்,கர்சிப்பில் காயத்தை கட்டிக்கொள்ள..

“என் பின்னாடி ஏறிக்கடா”என்ற பிரதாப்,ராதிகாவை அவள் வண்டியில் வர சொல்லிவிட்டு,நேராக மருத்துவமனைக்கு தான் சென்றான்.

விஷ்வா எவ்வளவோ கூறியும் கேட்காமல்,முழு உடம்பையும் பரிசோதித்துவிட்டு,அவர்கள் பிரச்சனை எதுவுமில்லை என்று கூறவும் தான் வீட்டிற்கே அழைத்து வந்தான்.

வீட்டிற்கு வந்தவுடன்,விஷ்வாவை தூங்க சொன்ன பிரதாப்..அவன் சென்றதும்,மனைவியுடன் வெளியே வந்தான்.

“விஷ்வாவுக்கு உண்மையாவே,அந்த குரல் கேட்டிருக்குமா ராதிகா”கேட்க..

“விஷ்வாவோட உள்ளுணர்வா கூட இருக்கலாமேங்க..அவன் மறந்த விஷயம்,எதிர்பாராத விதமா ஞாபகம் வந்திருக்கலாமே”எனவும்,

“அவனுக்கு பழசு ஞாபகம் வந்த மாதிரி இல்ல..அப்படி இருந்தா சொல்லியிருப்பான்..இது வேற எதுவோ தான்”என்று மறைமுகமாக கூற...

“ஆவியா இருக்கும்னு சொல்றிங்களா”நேரடியாகவே கேட்கவும்,

“வாய்ப்பு இருக்கு..விசுன்னு கூப்பிட்டா..வேறென்ன அர்த்தம் எடுத்துக்கறது...?நாம கண்டிப்பா,இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லியே ஆகணும்..”என்றவன் போனை எடுக்க..

“அவங்களை பயமுறுத்த வேண்டாம்-ங்க..இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு.அங்க போறவங்களை எந்த ஆவியும் நெருங்காதுன்னு சொல்வாங்க..அங்க விஷ்வாவை கூட்டிட்டு போயிட்டு வரலாம்..”என்றாள்.

“உனக்கெப்படி இந்த கோவில் பற்றி தெரியும்..?”சந்தேகமாக கேட்க,

“மீனாக்ஷி அம்மா தான் சொன்னாங்க.ஒருமுறை சரவணன் சார்-க்கு கூட,ஆவி பயம் வந்துச்சாம்.அந்த கோவில் போயிட்டு வந்த பின்னாடி,அந்த பயமெல்லாம் இல்லாம,தெளிவாகிட்டதா சொன்னாங்க..நாம போகலாம்”எனவும்,

“சரி”என்ற பிரதாப் முன்னே செல்ல..

“எங்களை பிரிக்க..நீயும் நினைக்கிறியே..சரியா ராதா”என்ற குரல் கேட்க...அதிர்ந்து போனவள்..சட்டென்று திரும்ப...தூரத்தில் நின்று,புகை வடிவில்,அழுது கொண்டிருந்த உருவம் தெரியவும்..அப்படியே மடிந்து அமர்ந்தவள்..நினைவில்லாமல் மயங்கிப் போனாள்.

No comments:

Post a Comment