kaanum yaavum neeyaaga-7

 

அத்தியாயம் 7

விஷ்வா...கல்லூரியில் மதிய வகுப்பு முடிந்ததும்,ஷங்கருடன் அவனது வீட்டிற்கு,வீடு பார்ப்பதற்காக சென்றான்.

வீட்டின் முன்னே இறங்கியதும்,”காலேஜ்ல இருந்து,ஒரு மூணு கிலோ மீட்டர் தூரம் வரும் போலஎனவும்,

ஆமா விஷ்வா..முன்னாடி காலேஜ் இருந்த ஏரியா அவ்வளவு டெவெலப் ஆகல..அடிப்படை வசதி கூட இல்லாம இருந்துச்சு..காலேஜ் வரவும் தான்,நல்ல டெவலப்மென்ட்..!

இப்போ அங்க அரைசென்ட் நிலம் வாங்கணும்னாலும்,ரொம்ப கஷ்டம்..விலை அப்படி ஏறிப்போய் கிடக்கு..!”என்றவன் வீட்டிற்குள் அழைத்து செல்ல..மதிய நேரம் ஓய்வாக அவனது பெற்றோர் படுத்திருந்தார்கள்.

அவனது அம்மா கீழே படுத்துக்கொண்டு,டிவி பார்த்துக் கொண்டிருக்க,மகனின் நண்பனை பார்த்ததும்,”வாப்பாஎன்றவர் மெதுவாக எழுந்து,கணவரையும் எழுப்பிவிட்டார்.

இருவருக்கும் வயது அதிகமாகிவிட்டது.

அவர் டீ போட எழுந்து செல்ல..”வேண்டாம்மா..வந்து உட்காருங்கஎன்று வலுக்கட்டாயமாக அமர வைத்தவன்,

இவங்களுக்காகவாவது நீ கல்யாணம் பண்ணிக்கணும் ஷங்கர்..”என்றான்.

நாங்களும் அதை தான்-பா சொல்றோம்..பெரியவன் கல்யாணமே வேண்டாம்னு சாதிக்கறான்..எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம்..மிரட்டியும் பார்த்துட்டோம்..கேட்கல..!

இவனையாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னா,அண்ணனுக்கு முடியாம எப்படி கல்யாணம் பண்றதுன்னு கேட்கறான்..இவங்க ரெண்டு பேருக்கு நடுவில மாட்டிக்கிட்டு நாங்க தான் முழிக்கிறோம்..

 எங்களோட ஆசையெல்லாம் இவனுக்காவது கல்யாணம் பண்ணி,பேரன் பேத்தியை கண்ணார பார்த்துடணும்..அவ்வளவு தான்..!வீட்டுக்கு வர்ற மருமக,எங்களை கவனிக்கணும்னு எல்லாம் இல்ல..என் மகனை நல்லபடியா பார்த்துக்கிட்டாலே போதும்..எங்களுக்கு அதுவே ஒரு பெரிய பாரம் குறைஞ்சது போல இருக்கும்..நீயாவது பேசி சம்மதிக்க வைப்பா..”என்றார்.

அவரால் மூச்சு இழைக்காமல் பேசக்கூட முடியவில்லை.

ஹாஸ்பிட்டல் போகலாமாம்மா..ரொம்ப முடியாதது போல இருக்கீங்கஷங்கர் அக்கறையுடன் கேட்கவும்,

காலைல தான்-பா,நானும் அப்பாவும் போயிட்டு வந்தோம்..எங்களுக்கு நீ செய்ற உதவின்னா..கல்யாணம் பண்ணிக்கப்பாஎன்று விஷ்வாவின் முன்னேயே வற்புறுத்தவும்,சங்கடமாக பார்த்தவன்,

வீட்டு சாவி கொடுங்கம்மாபேச்சை மாற்றவும்,பெருமூச்சுவிட்டபடி,சாவியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.

இவர்களின் வீட்டிலிருந்து,ஐந்து வீடு தள்ளி வீடு இருக்க..தனி வீடாக பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.

இந்த வீட்டுல இருந்தவங்க,ஏன் காலி பண்ணிட்டு போனாங்க ஷங்கர்கேட்கவும்,

இந்த வீட்டுக்கு வந்த ஆள்,வேலையே கிடைக்காம ரொம்ப திண்டாடிட்டு இருந்தான்..இங்க வந்த ஆறே மாசத்துல,கவர்மென்ட் வேலை கிடைச்சிடுச்சு.மாறிப் போயிட்டான்..

யார் இங்க வந்தாலும்,ஏதாவது நல்லது நடந்துடுது..காலி பண்ணிட்டு போயிடறாங்க..அப்புறம் எங்களுக்கு தான் கஷ்டமாகிடுது..வருஷத்துல எப்படியும்,ரெண்டு மாசம் வாடகை நஷ்டமாகிடும்..

இப்போ நீ வந்தாலும்,உனக்கு கண்டிப்பா ஒரு நல்ல விஷயம் நடக்கும்..வீடு மாறிப் போயிடுவஉறுதியாக பேசவும்,

நான் ரெண்டு மாசத்துல,ஊருக்கு போயிடுவேன் ஷங்கர்..அண்ணன் தான்,இங்க இருக்க போறான்..அண்ணிக்கு ஏதாவது நல்ல விஷயம் நடந்தா..ரொம்ப சந்தோஷமா இருக்கும்என்றான்.

கண்டிப்பா அவங்களுக்கு குழந்தை பிறந்திடும்...உனக்கும் கல்யாணம் முடிஞ்சிடும்என்றவன்,

நீ ஏன் சரவணன் சார் பொண்ணை,கரெக்ட் பண்ணக் கூடாது?”என்று கேட்கவும்,தூக்கிவாரிப்போட்டது விஷ்வாவிற்கு..!

இந்த கேள்வியை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஏன் திடீர்னு இப்படி பேசற?”கேட்கவும்,

இல்ல..சார் பொண்ணு இப்போவெல்லாம் அடிக்கடி காலேஜ் வராங்க...”என்று இழுத்தான்.

நான் பார்க்கவேயில்லையேசந்தேகமாக கேட்கவும்,

மெயின் ப்ளாக்ல இருந்தபடி போயிடுவாங்க..உன்னோட கிளாஸ் எப்போ வரும்..நீ எங்க இருப்பன்னு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்...கம்ப்யூட்டர் லேப்ல...”என்று இழுத்தவன்,சொல்லலாமா வேண்டாமா என்று இழுக்க..

லேப்ல...என்ன..”என்று புரியாமல் கேட்கவும்,

அங்க சிசிடிவி இருக்கே...அதோட ஆக்சஸ் கோட் வாங்கினாங்களாம்..நீ இருக்கற டைம் மட்டும்,ஆக்சஸ் பண்ணியிருக்காங்க..லேப் டெக்னிஷியன் சொன்னான்...இன்னும் யார்கிட்ட எல்லாம் சொன்னானோ தெரியல...நீ வேற..வேற வீடு பார்க்கணும்னு சொன்னியா..அதான் எதுவும் பிரச்சனையா இருக்குமோன்னு கேட்டேன்..”என்றவன்,விஷ்வாவின் முகத்தை பார்த்துவிட்டு,

இதெல்லாம் ஒரு யூகம் தான்...புரளியா கூட இருக்கலாம்..ஆனா காட்டுத்தீயா பரவிட்டு இருக்குஎன்றான்.

விஷ்வாவால் கோபத்தை அடக்க முடியவில்லை..

எதற்காக இந்த பெண்,இப்படியெல்லாம் செய்கிறாள்..?’கடுப்பானவன்,

நான் கிளம்பறேன்டா..வீடு பிடிச்சிருக்கு.அண்ணாவ ஒரு நாள் கூட்டிட்டு வரேன்என்று கிளம்பவும்,

நான் கேள்விப்பட்டது உண்மையா,பொய்யான்னு நீ சொல்லலையே..?”நேரடியாகவே மீண்டும் கேட்கவும்,

நீயே சொல்றியே..இதெல்லாம் புரளியா இருக்கலாம்..இதுக்கெல்லாம் ரெஸ்பான்ட் பண்ணிட்டு இருக்க முடியாது..கண்டுக்காம விட்டுடணும்என்றான்.

நந்தினி மேம்-க்கு,உன்மேல உண்மையாவே விருப்பம் இருக்கலாமே விஷ்வா..அப்போ நீ அவங்களுக்கு..பாசிட்டிவ் பதிலை கொடுக்கறதில தப்பில்லையே..எனக்கெல்லாம் இப்படியொரு வாய்ப்பு கிடைச்சா மிஸ் பண்ண மாட்டேன்..லட்டு மாதிரி பொண்ணு..கூடவே கணக்கில்லாத சொத்து..கசக்கவா செய்யும்..நீ மிஸ் பண்ணிடாத

எனக்கு இதெல்லாம் உண்மைன்னு தோணலை..அந்த பொண்ணுக்கு இருக்க வசதிக்கும்,அழகுக்கும்,அவங்கள விட வசதி அதிகமான பையனா பார்த்து தான் கல்யாணம் பண்ணிப்பாங்க...

நீ சொல்றியே..நந்தினி மேம்..அவங்க ஸ்டேட்டஸ் பார்த்து தான் பழகவே செய்வாங்க..அவங்களோட பிரண்ட்ஸ் யாரையாவது பார்த்திருக்கியா..?எல்லாருமே ரிச் தான்..இதுல என்கூட வைச்சு காசிப் பேசினா..நம்பவே முடியாது..குறிப்பா நான் நம்பவே மாட்டேன்..லவ்-க்கேல்லாம் வாய்ப்பேயில்லைவேண்டுமென்றே பொய் கூறியவன்,

என்னை மெயின் ரோட்ல டிராப் பண்ணிடறியா..ஓலா புக் பண்ணி போயிடுவேன்என்றான்.

நானே வீட்டுல டிராப் பண்றேன்.எனக்கும் சாரோட வீடு எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையாயிருக்குஎன்றபின் எப்படி வேண்டாமென்று மறுப்பது..!

தேங்க்ஸ்டா..வீட்டுலையே விட்டுடுஎனவும் சந்தோஷமாக ஷங்கர் பைக்கை எடுத்தான்..

வீட்டுக் காவலாளி,விஷ்வாவை பார்க்கவும்,கதவை திறந்தவன்,ஷங்கரிடம்,”உங்க பேர்,அட்ரஸ்,போன் நம்பர் எழுதிட்டு உள்ள போங்க சார்என்றான்.

அந்த தகவல்களைஎல்லாம் கொடுத்துவிட்டு,உள்ளே சென்றவன் வாயிலை பார்த்தே மிரண்டான்..

கெஸ்ட் ஹவுசே மிக அழகாக இருக்க..”இந்த வீட்டை விட்டு,எங்க வீட்டுக்கு வரணும்னு,உனக்கென்ன தலைஎழுத்தாடா..இன்டீரியர் எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு..!”என்றவன் வீட்டை போட்டோ எடுத்துக் கொண்டான்.

இரு..உனக்கு குடிக்க ஜூஸ் ஏதாவது போட்டு வர்றேன்என்று உள்ளே சென்றான்.

சில நிமிடங்களில் கையில் ஆப்பிள் ஜூசோடு வந்தவன்,”எனக்கு தெரிஞ்ச அளவில போட்டிருக்கேன்..”எனவும்,

 நீயாவது பரவாயில்லப்பா..நானெல்லாம் சுடுதண்ணீர் வைக்க கூட கிட்சன் பக்கம் போனதில்ல..அம்மாவுக்கு முடியாம இருந்தாலும்,அவங்களே இழுத்துப் போட்டு,அவங்களே வேலையை எல்லாம் செய்வாங்க..நான் ஏதாவது செய்யப் போனாலும் விட மாட்டாங்க..அவங்களை பார்த்தாலே கஷ்டமா இருக்கும்கவலைப்பட்டவன்,

பொண்ணு பார்க்க சொல்லப் போறேன்என்றான் திடீரென்று..!

தெளிவான முடிவு!இன்னைக்கே வீட்டுக்கு போய் சொல்லிடுஎன்று அவன் தோளை தட்டிக் கூறவும்,

ம்ம்..இன்னைக்கே சொல்லிடறேன்..அப்புறம் சார் வீட்டை போய் பார்க்க முடியுமா?”என்று கேட்டான்.

உன்னோட ஆர்வம் புரியுது ஷங்கர்.ஆனா நீ நினைக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல..உன்னை அறிமுகம் பண்ணி வைச்சா..அது ரொம்ப அதிகப்படியா இருக்கும்.என்னை நீ தப்பா நினைச்சுக்காதே

எனக்கு புரியுதுப்பா..அவர் வீட்டை பார்க்கணும்னு ஆசை..அவ்வளவு தான்..வெளில இருந்து பார்த்ததே போதும்..”என்று பேசிக்கொண்டிருக்கும் போது,அவனுடைய அண்ணன் போன் செய்தான்.

போன் திரையில்,போட்டோவோடு வரவும்,”அண்ணா தான் பேசறான்என்று அவன் முகத்தை காட்டிவிட்டு போனை எடுத்தான்.

என்னண்ணா..இன்னைக்கு அதிசயமா நீயே போன் பண்ணியிருக்க?”கேட்கவும்,

சின்னதா ஆக்சிடென்ட் ஆகிடுச்சு ஷங்கர்..கால்ல லேசான அடி.பாத்ரூம்-க்கு கூட நடந்து போக முடியல..நீ இங்க வர்றியா?”எனவும்,

பதறிய ஷங்கர்,”எப்போ ஆக்சிடென்ட் ஆச்சு..எப்படி?”என்று விசாரிக்க..

ட்ரின்க் பண்ணியிருந்தேன்டா..அதோட காரை டிரைவ் பண்ணிட்டு,ஒரு பைக் மேல மோதிட்டேன்..பெருசா எதுவும் ஆகல..கால் தான் பிரச்சனையா இருக்கு..

நீ அம்மா,அப்பாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்..அவங்ககிட்ட இன்பார்ம் பண்ணாம வா...அவங்களையும் கூட்டிட்டு வந்தா..உன்னையும் வீட்டுக்குள்ள விட மாட்டேன்..என்னைப்பத்தி தெரியும்லஎனவும்,

சரி..யார்கிட்டவும் எதுவும் சொல்ல மாட்டேன்..நான் ஏதாவது பொய்யை சொல்லிட்டே வரேன்..நீ அதுவரைக்கும் உடம்பை பார்த்துக்கோ..!”என்று போனை வைத்தான்.

என்னாச்சு ஷங்கர்

அண்ணாக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம் விஷ்வா..நான் உடனே கிளம்பறேன்.அம்மா,அப்பாகிட்ட ஏதாவது பொய்யை தான் சொல்லணும்.வயசான காலத்துல,அவங்களை அலைய வைக்க வேண்டாம்னு சொல்றான்..இவனை வைச்சுக்கிட்டு என்ன செய்யன்னு தெரியலஎன்றவன்,அவசரமாக புறப்பட்டு செல்ல...

இந்த நேரத்துல,உன் அண்ணன் கூட,எந்த ஹை கிளாஸ் பொண்ணும் இருக்க மாட்டா..அதை மட்டும்  மனசில வைச்சுக்கோஎனவும்,

பொண்ணு பார்க்க சொல்லிட்டு தான்,ஊருக்கே போகப் போறேன்..நீ காலேஜ்ல யார்கிட்டவும்,உண்மையை சொல்லிட வேண்டாம்..அப்புறம் அம்மாகிட்ட யாராவது சொன்னா,நான் மாட்டிக்குவேன்என்றவன் உடனே புறப்பட்டுவிடவும்..அப்படியே சோபாவில் சாய்ந்தவன்,தூங்கிப் போனான்.

அடுத்த மூன்று மணி நேரத்தில், ஷங்கர் அண்ணனை ஹாஸ்பிடல் சென்றே பார்த்தவன்,பார்த்து வண்டி ஓட்ட வேண்டியது தான்டா..என்று பதறியபடி அருகில் வரவும்,

வேணும்னு யாராவது போய் இடிப்பாங்களா..?நீ வேற எரிச்சல கிளப்பிட்டு இருக்காத..!”கடிந்து கொண்டவன்,

இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றேன்னு சொன்னாங்க.இந்தா கார்ட்..ஹாஸ்பிட்டல் பில்லை கட்டிட்டு வாஎன்று கொடுக்கவும்,அண்ணன் இப்படிதான் என்று தெரியும் என்பதால்,அமைதியாக சென்று பில்லை கட்டிவிட்டு வந்தான்.

வீட்டுக்கு போகலாமாண்ணா..கார் புக் பண்ணட்டுமாகேட்கவும்,

நானே புக் பண்ணிட்டேன்..இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடும்என்று எரிச்சல் குறையாமல் பேசியவன்..கார் வந்துவிடவும் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவுடன்,படுக்கையில் விழுந்தவன்,”இந்த ஒருவாரமா அனாதை மாதிரி ஹாஸ்பிட்டல்ல கிடந்தேன்டா..என்கிட்ட பணம் வாங்கி..என்ஜாய் பண்ண,ஒரு நாயும் வந்து எட்டிப் பார்க்கல..”கோபத்தோடு தம்பியிடம் பகிர்ந்துகொள்ள,

ஆபிஸ் பிரண்ட்ஸ் யாரும் வந்து பார்க்கலையா..”கேட்கவும்,

நான் தான் வேலையை விட்டு நின்னுட்டனே..”என்று குண்டை தூக்கிப்போடவும்,

எப்போ வேலையை விட்டண்ணா..என்கிட்ட சொல்லவேயில்லஅதிர்ச்சியாக கேட்க..

ப்ச்..அது வேற விஷயம்..நீ எனக்கு சரியாகற வரைக்கும்  கூட இரு..அது போதும்என்றான்.

அதெப்படிண்ணா முடியும்..எனக்கு காலேஜ் இருக்கு..வேணும்னா ஒரு மூணு நாள்,லீவ் போடலாம்..அதுக்கு மேலயெல்லாம் வாய்ப்பே இல்ல..நீ நம்ம வீட்டுக்கு வந்துடு.தனியா இருந்து,எதுக்கு இவ்வளவு கஷ்டப்படற?”

எனக்கு இங்க தான் பிடிச்சிருக்குடா..அங்க வந்தா,உங்கப்பன் எதாவது கிளாஸ் எடுத்தே,என்னை கடுப்பாக்குவான்..எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஏதாவது பண்ணிடுவேன்னு,பயமா இருக்கும்.அதான் அந்த பக்கமே வர்றதில்ல..இப்பவும் வர வாய்ப்பில்ல..!!

அதனால நீ தான் இங்க இருக்கணும்..வேற வழியேயில்ல..நீ வேலையை விட்டுடு..நீ மாசமாசம் வாங்கற சம்பளத்தை விட,அதிகமா நான் தரேன்..உனக்கொரு நல்ல வேலையையும் நான் ரெடி பண்ணி தரேன்என்று ஆசை காட்டினான்.

உனக்கே வேலையில்லண்ணா..இதுல எனக்கு எப்படி..நீ பணம் கொடுப்ப..!நீ சேர்த்து வைச்சிருக்கதில கொடுத்தாலும்,எத்தனை மாசத்துக்கு கொடுக்க முடியும்...அதுமட்டுமில்லாம உனக்குன்னு ஒரு பிரண்ட் கூட,இந்த ஊர்ல இல்ல..இதுல எப்படி எனக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுப்ப..”சற்று கேலியாகவே கேட்க..

எனக்கு வேலையில்லைன்னு சொல்லவும்,என்னை நீ மட்டமா எடை போட்டுட்ட..!ம்ம்ம்..பரவாயில்ல...என்னோட பிசினஸை பத்தி,உனக்கு சொன்னதில்லை..அதான் இப்படி பேசற..அதுல எவ்வளவு வருமானம் வருது தெரியுமா...எவ்வளவு பணம் வருதுன்னு தெரிஞ்சா,அப்படியே அதிர்ச்சியில செத்தே போயிடுவஎனவும்,

அப்படியென்ன பிசினஸ் பண்றண்ணாஆர்வமாக கேட்டான்.

அதெல்லாம் உனக்கு எதுக்கு..என் பேங்க் பேலன்ஸ் என்னன்னு மட்டும், பாரு..”என்று போனில் காட்டவும்,அதிர்ந்தே போய்விட்டான்.

இவ்வளவு பணம் எப்படிண்ணாஅதிர்ச்சியில் கேட்க..

இது வெறும் வைட் மணி தான்..ப்ளாக் மணி நிறைய இருக்கு..அதான் சொல்றேன்..நீ இங்கேயே இரு..ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் உனக்கும் தொழில் கத்துக் கொடுக்கறேன்என்று தன் தேவைக்காக ஆசை காட்டினான்.

ஷங்கர் பணத்தின் மேல் உள்ள ஆசையில் யோசித்தான்.ஆனால் கண் முன்னே,அப்பா,அம்மா இருவரும் வரவும்,அவர்களை விட்டு தனியே வர முடியாது என்பதால்,அண்ணனிடமே வேறு யோசனை கேட்டான்.

இந்த தொழிலை,நம்ம ஊர்ல இருந்து பண்ண முடியாதாண்ணாஎனவும்,

பண்ணலாமே..அதுக்கு உனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் வேணும்..அதெல்லாம் நீ என் கூட இருந்தா தான் கிடைக்கும்..ஒரு மூணு வருஷத்துக்காவது,என்கூடவே இருந்து தொழிலை கத்துக்கணும்என்று கூறவும்,ஷங்கரால் இதற்கு சம்மதிக்க முடியவில்லை.

அவ்வளவு நாளெல்லாம் என்னால இருக்க முடியாதுண்ணா..அப்பா,அம்மாவுக்கு இப்போவே வயசாகிடுச்சு.அவங்களோட நான் இருந்தே ஆகணும்..

அவங்க காலத்துக்கு பின்னாடி வேணா,உன்கிட்ட வந்து தொழிலை கத்துக்கறேன்..இப்போ உனக்காக வேணா,ஒரு வாரம் கூட இருந்து பார்த்துக்கறேன்.அதுக்கப்புறம் விருப்பம் இருந்தா,நம்ம வீட்டுக்கு வா..”என்று தன் பிடியிலையே நிற்க...இவ்வளவு ஆசைகாட்டியும்,மனம் மாறாத தம்பியை மனதில் மெச்சிக்கொண்டவன்,

சரிஎன்றான்.

ஷங்கரும் அண்ணனுக்கு உதவி செய்ய..அவர்களுக்கான உணவை மட்டும்,பக்கத்திலிருந்த ஹோட்டலில் நேரத்திற்கு கொண்டு வந்து கொடுக்குமாறு ஏற்பாடு செய்துகொண்டான்.

அன்றைய இரவில் அண்ணனுடனே ஷங்கரும் தூங்கிக்கொள்ள...நள்ளிரவில் யாரோ எழுப்புவது போலிருக்கவும்,அண்ணன் தான்,அவசரத்திற்கு எழுப்புகிறான் என்று ஷங்கர் எழுந்து பார்க்க..அவனோ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

யாரோ எழுப்பினது மாதிரி இருந்துச்சேயோசித்தபடியே மீண்டும் படுக்க..

இப்போது ஷங்கரின் காதருகில்,இது தப்பு...என்ற ஆண் குரல் கேட்கவும்,பதறியபடி எழுந்தான்.

சுற்றிமுற்றி பார்க்க..யாருமே இல்லாது போக அண்ணனை எழுப்பினான்.அவனோ எழுந்துகொள்ளாது நன்றாக அசதியில் தூங்கவும்,பெட்ஷீட்டை இறுக போர்த்தி படுத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் மீண்டும்,இது ரொம்ப தப்பு...நீ போயிடு..நீ போயிடுஎன்று பலமாக கத்தவும்,அரண்டு போனவன்,

அண்ணா..அண்ணா...எழுந்துக்க..ஐயோ எழுந்துக்கடா..”என்று எவ்வளவோ எழுப்பியும்,அவன் எழுந்துகொள்ளாது போக...படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு,கைகால்கள் மரத்துப் போயிருக்க..எவ்வளவோ முயற்சி செய்தும்,அவனால் எழுந்துகொள்ளவே முடியவில்லை.

பயத்தில் உடல் வியர்க்க....”யாரு..யார் இப்படியெல்லாம் பேசறீங்க..”என்று குரல் உள்ளே செல்ல கேட்டும் பதிலில்லை..

அருகில் தூங்கிக்கொண்டிருந்த விக்னேஷ் எழுந்துயார்டா..யார் பேசறது...”என்று கேட்கவும்...பதறியபடி எழுந்தான்.

என்னடா..என்ன ஆச்சு..ஏன் இப்படி தூக்கத்துலயே கத்துற..?”கேட்கவும்..அப்போது தான்,கஷ்டப்பட்டு கண் விழித்தவன்,சுற்றி முற்றி பார்த்தான்..அதன்பின் தான்,தான் கண்டது அனைத்தும் கனவென்று உணர்ந்தான்.

ஏதோ கெட்ட கனவுடா..”எனவும்..

எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு,இன்னும் நீ பேய் பயத்துல இருந்து வெளில வரலையாடா...?உன்னை போய் துணைக்கு இருக்க கூப்பிட்டேன் பாரு..என்னை செருப்பால அடிச்சிக்கணும்..!

இனி தூக்கத்துல கனவு கண்டு,கண்ட நேரத்துல,என்னை எழுப்பின..நானே பேயா மாறிடுவேன் பார்த்துக்க..!”எச்சரித்துவிட்டு படுக்க...இன்னமும் பதட்டம் தணியாத ஷங்கர்,பயந்துகொண்டே தூங்காமல் இருந்தான்.

சிறிது கண் அசந்தாலே,யாரோ காதின் அருகே வந்து,பேசுவது போல இருக்க,விடிய விடிய தூங்காமல் விழித்துக்கிடந்தான்.

No comments:

Post a Comment