ULLAM UNNILE MOOZHGUDHE-30

அத்தியாயம் 30

 

கடந்த இரு தினங்களாக,புயல் மழை பெய்துகொண்டிருக்கவும்,சக்தி அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலையே இருந்தான்.

 

மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்ததால்,அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல்,அங்கு வாழும் மக்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் இது போல் மழை பெய்தாலும்,இந்த வருடம் மழையினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகமே..!

 

டிவியில் ஒளிபரப்பப்படும் நேரடி காட்சிகளை பார்த்து பயந்து போயிருந்த மஞ்சுளா,காவ்யாவிற்கு அடிக்கடி போன் செய்து,அவளது நலத்தையும்,மகன் நலத்தையும் விசாரித்துக்கொண்டே இருந்தார்.

 

அவராலேயே போனில் சார்ஜ் குறைந்து கொண்டிருக்க,ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த  சக்தி,காவ்யாவிடம் இருந்து போனை பிடுங்கியவன்,”அம்மா...நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன். இங்க கரண்ட் இல்ல.இருக்க பேக்கப் வைச்சு,ஏதோ சமாளிச்சுட்டு இருக்கோம்.நீங்க வேற,நிலைமை புரியாம,போன் பண்ணி எங்களை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க என்று கடிந்து கொள்ளவும்,

 

உங்க ரெண்டு பேருக்கும்,என்ன ஆச்சோ..ஏது ஆச்சோன்னு,ஒவ்வொரு நிமிஷமும்  நாங்க பயந்துட்டு இருக்கோம். நீ என்னடான்னா,அதை புரிஞ்சுக்காம,எங்களைத் திட்டிக்கிட்டே இருக்க..! என்று கிட்டத்தட்ட அழும் நிலையில் பேசவும்,

 

அம்மா..இங்கே நிலைமை கொஞ்சம் மோசம் தான்.ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு இல்ல.இப்போ எவ்வளவோ பரவாயில்லை.. நம்ம கவர்மென்ட் நிறைய முன்னெச்சரிக்கைகள் எடுத்திருக்காங்க. தேவையான உதவிகள் எல்லாமே கிடைக்குது.

 

அதனால நீங்க பயப்படாம இருங்க. நிலைமை சரியானதும் நாங்க ஊருக்கு வந்து,ஒரு பத்து நாள் இருந்துட்டு வர்றோம்என்று அம்மாவை சமாதானம் செய்ய,

 

அப்போ நிலைமை சரியாகற வரைக்கும்,என்னை போன் செய்யக் கூடாதுன்னு சொல்றியாடாஎன்று புரிந்து கொள்ளாமல் மகனிடம் சண்டையிட்டார்.

 

நான் இவ்வளவு எடுத்து சொல்லியும்,இப்படி புரிஞ்சிக்காம பேசினா என்ன அர்த்தம்மா..!உங்களை நான் போன் பண்ண வேணாம்னு சொல்லல.அஞ்சு நிமிஷத்துக்கு..ஒரு தடவை போன் அடிக்கிறிங்க..!நாங்க வேலை பார்க்கிறதா..வேணாமா..?என்னால முடியல..!!

 

நீங்க முதல்ல டிவியை ஆப் பண்ணுங்க.அதுவே உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணும்.ப்ளீஸ்மா புரிஞ்சுக்கோங்கஎன்று எடுத்துச் சொல்லவும்,தனசேகரன் கண் காட்டவும்,போனை வைத்தார் மஞ்சுளா.

 

சக்தி போனை வைக்கவும்,காவ்யா,எதுக்கு மாமா..அத்தைய திட்டறீங்க..நம்ம  மேல இருக்க பாசத்தினால தான,அடிக்கடி போன் பண்ணி விசாரிக்கிறாங்கஎன்று அத்தைக்கு ஆதரவாகப் பேசவும்,

 

உன்னால தான் எல்லாம்..!அவனவன் கரண்ட் இல்லாம,போனை வைச்சுகிட்டு,கஷ்டப்பட்டு வேலையை பார்த்துட்டு இருந்தா,நீ அம்மாவோட கடலை போட்டுட்டு இருக்க..!

 

லைவ் நியூஸ் பார்த்து,அவங்க பயப்படறது போதாதுன்னு,நீயும் உன்னால முடிஞ்ச அளவுக்கு,அவங்களை பயமுறுத்துற..!இனி நீ அவங்களுக்கு போன் செஞ்சு பாரு..அப்புறம் உன்னை வைச்சுக்கறேன்..என்று மிரட்டவும்,

 

நான் இங்க இருக்க நிலைமையை தான் மாமா சொன்னேன்.பொய் ஒண்ணும் சொல்லலையே.நாம வெளில போய்,ரெண்டு நாளாச்சு..! கிரவுண்ட் ப்ளோர் முழுக்க தண்ணி..ஃபர்ஸ்ட் புளோர்ல இருக்கவங்க பயந்துகிட்டே இருக்காங்க..அவங்களை சேவ் பண்றது,பெரிய விஷயமா இருக்கு..”என்றவள்,

 

இந்த  ஜன்னலை லைட்டா,திறந்து பார்த்தாலே பயமா இருக்கு மாமா.அப்படியிருக்கும் போது,எப்படி நான் இங்க எல்லாம் சரியா இருக்குன்னு அத்தைக்கிட்ட பொய் சொல்வேன்...என்றாள்.

 

சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும்,ஒவ்வொரு வருஷமும் இவ்வளவு பாதிப்பு எற்படுதே மாமா..!இதை தடுக்கறதுக்கு.. ஏன்  இன்னும் சரியான பாதுகாப்பு வழி முறைகள் இல்லை என்று சக்தியிடம் கேட்கவும்

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,நம்ம கவர்மெண்ட் எடுத்தாலும், பெரிய அளவில ஏற்படற பாதிப்பை அவங்களாளையும் தடுக்க முடியல.காரணம் நாம இருக்க ஏரியா அப்படி.!ஏரிகள்ல தான் வீட,கட்டியிருக்கோம்.வீட்டைகாலி பண்ணுங்கன்னு சொன்னாலும்,அதை நாம கேட்கிறதில்லை.

 

மழை விட்டதும்,ஒரளவுக்கு பிரச்சனை சரியானதும்,வேற பக்கம் ஷிப்ட் ஆகறதைப்பற்றி யோசிக்கறதே இல்லை.அதுதான் பிரச்சனைக்கெல்லாம் முக்கிய காரணம்..எனவும்,

 

எப்படி மாமா வீட்டை விட்டு போகலாம்னு,யாராலையும் யோசிக்க முடியும் பல வருஷம் உழைப்பை கொட்டி,இந்த ஏரியால வீடு வாங்கி இருக்காங்க..!அப்படியே தூக்கி போட்டுட்டு,போக முடியாது இல்லையா..!!மறுபடியும் முதல்ல இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னா, வாழ்க்கையே வெறுத்துப் போயிடும் மாமா என்றாள்.

 

நீ சொல்ற அதே விஷயம் தான் காவ்யா..!முதல்ல இருந்து எல்லாத்தையும் ஆரம்பிக்க முடியாமதான்,இப்படிப்பட்ட ஏரியால இருந்து,மக்கள் தவிக்கிறாங்க.கவர்மென்ட்டாலையும் எதுவும் செய்ய முடியல.வேற பக்கம் வீடுகட்டி தந்தாலும்,இவங்கள போக முடியல என்றவன்,

 

 ஜன்னல் திரையை திறந்து பார்த்துவிட்டு,”மழை கொஞ்சம் குறையற மாதிரி இருக்க. நான் கீழே போய் நிலைமையை பார்த்துட்டு வரேன் என்று கிளம்ப நினைக்க,

 

அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாமா.வீட்டுக்குள்ளேயே இருங்கஎன்று கணவனை வெளியே செல்ல விடாமல் தடுத்தாள்.

 

இதெல்லாம் சரியே இல்ல காவ்யா.ரெண்டு நாளா உன் முகத்தை மட்டுமே பார்த்துட்டு இருக்கேன்.எனக்கு போரடிக்குது.இந்த நேரம் பார்த்து,விஷாலும் அவங்க அப்பா வீட்டுக்கு போறேன்னு போயிட்டான்.

 

அவனுக்கு போன் பண்ணாலும் ரீச் ஆகல.எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.வேலை பார்க்கவும் முடியலஎன்று புலம்பியவனை பார்ப்பதற்கு,காவ்யாவிற்கு பாவமாகத்தான் இருந்தது.

 

பொழுதுபோக்கிற்கு போன் இருக்கிறது தான்.பேக்கப் இருக்கிறது என்பதற்காக போனையே பார்த்துக்கொண்டும் இருக்க முடியாதே..!!

 

நாம நம்ம ஊர் பக்கமே போயிடலாம் மாமா.எனக்கு ரொம்ப பயமா இருக்குஎனவும்,

 

நீயும் பயந்து,என்னையும் பயப்பட வைக்கிற காவ்யா.இனி வருச கடைசி வந்தாலே,உன்னை கொண்டுபோய்,ஊர்ல தள்ளிட்டு வந்துடணும்.அப்ப தான் எனக்கு நிம்மதிஎனவும்,

 

ஏதோ உங்க கூட இருக்கிறதால தான்,கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் மாமா.இதுல உங்கள மட்டும் இங்க தனியா விட்டுட்டு,நான் மட்டும் ஊர்ல இருந்தா,இப்போ பயப்படறதை விட, மோசமா பயந்துட்டு இருப்பேன்..

 

உங்களை தனியா விட்டுட்டு,நான் மட்டும் ஊருக்கு போறதுக்கெல்லாம் சான்சே இல்லஎன்றவளை புரிந்தும்,புரியாதது போல பார்த்தவன்,

 

போன வருஷமும்,நான் இங்க தான் இருந்தேன் காவ்யா.அப்போவும் மழை தான்.இதே நிலைதான்.அப்போ நீ ஒரு தடவை கூட எனக்கு போன் பண்ணி விசாரிக்கவே இல்லையே..!இப்ப மட்டும் புதுசா என்ன அக்கறை..?”புரியாதவன் போல் கேட்கவும்,காவ்யாவும் ஒரு நிமிடம் தடுமாறி போனாள்.

 

என்ன காவ்யா பதிலையே காணோம்என்று மீண்டும் அவளது மனதில் இருப்பதை,வெளிக்கொண்டு வருவதற்காக சக்தி கேட்கவும்,

 

உங்க மேல அக்கறை எப்பவும் இருக்கும் மாமா.அத்தைகிட்ட உங்களைப் பற்றி கேட்டுக்கிட்டே இருப்பேன்.உங்களை இங்க வேலை செய்ய விடக்கூடாதுன்னு,மாமா கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். அவரும் அதனாலதான் உங்களை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பார்.

 

ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு,அவரும் மறந்துடுவார். நானும் விட்டுடுவேன்.மறுபடியும் அந்த வருஷம் மழை பெய்யும் போது திரும்பவும் இது ஆரம்பிக்கும்.உங்களுக்கு தான் இந்த விஷயம் தெரியல எனவும்

 

அப்போ முன்னாடியும் பாசம் இருந்துச்சுன்னு சொல்ல வர்ற..? எனவும்,

 

ஆமாம்என்றாள்.

 

நம்பறேன்..நம்பித்தானே ஆகணும்.வேற வழியில்லையேஎன்றவன்,

 

ஒரு பிளாக் காபி கிடைக்குமா என்று கேட்டான்

 

எடுத்துட்டு வரேன் மாமாஎன்று உள்ளே சென்றவள்,காபியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு,

 

அன் டைம்ல கேட்கறீங்க..உங்களுக்கு தலை வலியும் இல்ல..எதுவும் சந்தோஷமான விஷயமா மாமா என்று கேட்கவும்,

 

எனக்காக நீ கவலைப்பட்டேன்னு சொன்னியே..!அதுக்காகத்தான்.. அந்த சந்தோஷத்தை அனுபவிக்க தான்...இந்த பிளாக் காபி என்றவன் காபியை ரசித்து பருகினான்.

 

அந்த நேரத்தில்,சக்திக்கு போன் செய்த விஷால்,”அங்க நிலைமை எப்படி இருக்கு சக்தி என்று விசாரித்தான்.

 

 ரொம்ப மோசம் இல்ல விஷால்.ஆனால் இன்னும் 2 நாள் தொடர்ந்து மழை பெய்தால் தாங்காதுன்னு தான் நினைக்கிறேன் எனவும்,

 

சேஃபா இருடா மச்சான்என்றவன்,

 

நம்ம பிரண்ட் மனோஜ் இருக்கான்ல சக்தி.அவனுக்கு போன் செஞ்சு, என் வீட்டு நிலைமை எப்படி இருக்குன்னு விசாரிக்கறியாஎன்று கேட்கவும்,

 

 என்னடா விஷால்..நீ உன் வீட்ல இருக்கேன்னு இல்ல நான் நினைச்சுட்டு இருக்கேன்என்று சக்தி புரியாமல் கேட்கவும்,

 

 நான் வீட்டுக்கு போன உடனே சண்டை வந்துடுச்சுடா..ஒரு பிடிவாதத்துக்காக,நைட் முழுக்க இருந்துட்டு,காலையில சீக்கிரமா கிளம்பி வந்துட்டேன்.இப்போ நம்ம ஆபீஸ் கிட்ட இருக்க, ஹோட்டல்ல தான் தங்கியிருக்கேன்.

 

இப்போ விஷயம் என்னன்னா,அப்பா இருக்க ஏரியால பாதாள சாக்கடையில் விழுந்து,ரெண்டு மூணு பேரு இறந்துட்டதா,நியூஸ்ல போட்டுட்டே இருக்காங்க.

 

கரண்ட் வயர் பாஸாகி,சிலர் இறந்துட்டதாகவும்,நியூஸ்ல சொல்லிட்டு இருக்காங்க.யாருன்னு இன்னும் சரியா தகவல் தெரியலங்கறாங்க.சொந்தக்காரவங்ககிட்ட போன் பண்ணாலும்,யாருக்கும் எதுவும் தெரியலன்னு சொல்றாங்க...ஒரே பதட்டமா இருக்குடா எனவும்,

 

 நீ மனோஜ் கிட்ட விசாரிக்க வேண்டியது தானடாஎனவும்,

 

அவன் ஃபோன் நாட் ரீச்சபிள்ல இருக்குடா.அவன் வீட்ல,வேற யார் நம்பரும் எனக்கு தெரியல.என்னாலயும் இங்க இருந்து போக முடியல.நீ கொஞ்சம் அவன் வீட்டு நம்பர் தெரிஞ்சா,ட்ரை பண்றியா.. நானும் நம்மளோட வேற பிரெண்ட்ஸ் மூலமா..காண்டக்ட் பண்ணி நிலைமை என்னன்னு கேட்கிறேன்என்று சற்று பதட்டமான குரலில் பேசவும்,

 

நான் விசாரிக்கிறேன்டா என்றவன் உடனடியாக தன் அலுவலக நண்பன் மனோஜ்க்கு போன் செய்தான்.

 

விஷால் சொன்னது போல்,மனோஜ் நம்பர் நாட் ரீச்சபிள் என்று வர,அவன் தங்கையின் நம்பர் சக்தியிடம் இருந்ததால்,அவளுக்கு போன் செய்தான்.

 

 அஞ்சலி எனவும்,

 

சொல்லுங்கண்ணா..எப்படி இருக்கீங்க.ரொம்ப நாள் கழிச்சு போன் பண்ணியிருக்கீங்க..இப்போ தான் ஞாபகம் வந்துச்சாஎன்று உரிமையாய் கேட்கவும்,

 

கொஞ்சம் பிசி அஞ்சலி..அதான் கால் பண்ண முடியலல..என்றவன்,

 

உன்னோட அண்ணன் நம்பர்,நாட் ரீச்சபிள்ல இருக்கு.வேற நம்பர் எதுவும் வைச்சிருக்கானா..?எனவும்,

 

எங்க ஏரியால,ரொம்ப இடி மழையா இருக்குண்ணா..அதனால போனை சுவிட்ச் ஆப் பண்ண போறதா,அண்ணன் சொல்லிட்டு இருந்தான் என்றவள்,

 

 என்ன விஷயம்-ண்ணாஎன்று விசாரித்தாள்.

 

நீங்க எல்லாரும் சேஃப் தானே அஞ்சலிஎன்று அவர்களின் நலத்தை விசாரிக்கவும்,

 

 நான் கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல இருக்கேன்-ண்ணா.எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.நீங்க ஓகேவாஎன்று அவளும் விசாரிக்கவும்,

 

 நாங்க ஓகே தான் அஞ்சலி.என்னோட ஃப்ரெண்ட் வீடு,உங்க வீட்டு பக்கம் தான்.அந்த ஏரியால,நிலைமை கொஞ்சம் மோசம்னு சொல்றாங்க.யாராலும் காண்டாக்ட் பண்ண முடியல.அதுதான் மனோஜ் கிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன் எனவும்,

 

டிவிலையும் அதையேதான் சொல்லிட்டு இருக்காங்க-ண்ணா. எங்க வீட்ல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கதினால,கொஞ்சம் தைரியமா இருக்கேன்..எனக்கு ஏதாவது நியூஸ் கிடைச்சுதுன்னா,உடனே உங்களுக்கு ஷேர் பண்றேன்எனவும்,

 

தேங்க்ஸ் அஞ்சலி என்றவன் போனை வைத்து விட்டான்.

 

சிறிது நேரத்தில் போன் செய்த அஞ்சலி,"பத்து பேர்க்கு மேல மழையில அடிச்சிட்டு போனதா சொல்றாங்க..அதுல நாலு பேர் பாடி கிடைச்சிடுச்சாம்.அவங்க டீட்டைல்ஸ் எல்லாம் சரியா தெரியல..

 

உங்க பிரண்ட் வீட்டு ஆட்கள் கூட காண்டாக்ட் பண்ண முடியலன்னும் சொல்றாங்க.வீட்டுக்குள்ள தண்ணீர் போயிடுச்சுன்னும் சொல்றாங்கண்ணா..ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னும் சொல்லும் போது,கொஞ்சம் பயமா தான் இருக்குண்ணா.. எனவும்,

 

ஓகே அஞ்சலி என்று போனை வைத்தவன்,உடனடியாக விஷாலுக்கு போன் செய்தான்.

 

 மறுமுனையில் விஷால்,”எதுவும் நியூஸ் கிடைச்சதா சக்தி என்று விசாரிக்கவும்,

 

 விஷயம் கொஞ்சம் சீரியஸ்னு தான் நினைக்கிறேன் விஷால். எதுவும் உறுதியாவும் தெரியல..மனசை கொஞ்சம் திடப்படுத்திக்கோ..!எனவும் விஷாலுக்கு நம்பிக்கை இழந்து போனது.

 

மிகுந்த வேதனையுடன்,ஒவ்வொரு முறையும்,இந்த மாதிரி சிச்சுவேஷன்ல இருந்து, அப்பா ஏதோ ஒரு லக்ல மீண்டு  வந்துடுவார். சக்தி.பணம் நிறைய இருந்தும்,அவர் வீட்டோட பாதுகாப்புக்காகவும்,அவரோட பாதுகாப்புக்காகவும்,எதுவுமே செஞ்சதில்ல.சின்ன சின்ன அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேத்த மாட்டார்.

 

 நாங்க எடுத்து சொன்னாலும்,அந்த நிமிஷ பயத்துல,செய்வோம்னு சொல்வார்.அப்புறம் மழைக்காலம் முடிஞ்சதும்,அவருக்கு பயம் விட்டுப்போகும்.எப்பவும்போல இயல்பாய் இருக்க ஆரம்பிச்சுடுவார்.

 

நானாவது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து,பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்திருக்கணும்என்று காலம் கடந்து யோசித்த விஷால், மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல், போனை அணைத்து விடவும் சக்திக்கு மனம் கேட்கவில்லை.

 

காவ்யாவிடம் விவரத்தை பகிர்ந்து கொண்டவன்,”நான் நேர்ல போய் பார்த்துட்டு வரேன்என்று கிளம்பவும்,

 

 லூசா மாமா நீங்க..?எப்படி போவீங்க..?கீழ உங்க இடுப்பு உயரத்துக்கு தண்ணீர் நிற்குது..!கார் எடுத்துட்டு கூட போக முடியாத சூழ்நிலைல,அவங்க வீட்டுக்கு எப்படி போக முடியும்.

 

ரிஸ்க் எடுத்து இங்க இருந்து கிளம்பிட்டாலும்,அங்க நீங்க போறதுக்குள்ள, உங்களுக்கு எதுவும் ஆயிடுச்சின்னா,நான் என்ன செய்யறதுஎன்று பதைபதைப்புடன் கேட்கவும்,நண்பனின் குடும்பத்தின் மேல் இருந்த பாசத்தில்,காவ்யாவிடம் எரிந்து விழுந்தான்.

 

நான் உயிரோட திரும்பலைன்னா கூட,உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல காவ்யா.உனக்காக கார்த்திக் எப்போதும் காத்திருப்பான்என்றவன் விறுவிறுவென்று சென்று கதவை திறக்கவும்,அவன் கையைப் பிடித்து இழுத்தாள் காவ்யா.

 

 ஏன் மாமா..லூசு மாதிரி பேசிட்டு இருக்கீங்க..கார்த்திக் எதுக்காக, எனக்காக காத்திருக்கணும்..? கோபத்துடன் கேட்கவும்,

 

 நான் உனக்கு யார் காவ்யா..?ஜஸ்ட் உன்னோட மாமா மகன்.. அவ்வளவுதான்..ஆனால் கார்த்திக் அப்படி இல்லை.. நீ முழு மனசோட கல்யாணம் பண்ண சம்மதிச்ச மாப்பிள்ளை.

 

இப்பவும் உனக்காகவே காத்திருக்கேன்னு சொல்றான்.இதைவிட உனக்கு வேற என்ன வேணும்என்று கிட்டத்தட்ட வெறுப்புடன் பேசவும்,

 

உங்களை இந்த மழையில வெளியில போக வேணாம்னு,நான்  சொன்னதுக்கும்,நீங்க இப்போ,இப்படி பேசுறதுக்கும், என்ன மாமா அர்த்தம்..?எனக்கு நீங்க ஏன் திடீர்னு,இப்படி நடந்துக்கறிங்கன்னு புரியவே இல்லை என்று மிகுந்த கவலையுடன் காவ்யா கேட்கவும்,

 

நான் போனாலும் உனக்கு ஒரு ஆள் இருக்குன்னு சொல்ல வரேன் என்றான்.

 

காவ்யாவிற்கு வந்த கோபத்தில், சக்தியை அடிக்க வேண்டும் என்று தான் நினைத்தாள்

 

ஆனால் அதுவே ஒரு பிரச்சனையை கொண்டு வந்துவிடுமோ என்று பயந்து,தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

ஒருத்தன் போனா,இன்னொருத்தனை ஈஸியா ஏத்துக்குவேன்னு, உங்க மனசுல ஒரு எண்ணம் இருக்கு மாமா.அதனாலதான் இப்படி பேசுறீங்க எனவும்,

 

பேச்சு எங்கோ செல்வதை உணர்ந்து,சட்டென்று சுதாரித்துக்கொண்ட சக்தி,நான் அப்படி சொல்ல வரலஎன்றான்.

 

வேற எப்படி சொல்ல வறீங்க மாமா..இந்த கிருஷ்ணா போனவுடனே, கார்த்திக்கை ஏத்துக்கிட்டேன்..கார்த்திக் வேணான்னு சொன்னவுடனே,உங்களை ஏத்துக்கிட்டேன்.அதனாலதான் நீங்க என்னை இப்படி மட்டமா பேசறீங்க..!!”என்று கண்ணீர் தளும்ப கூறவும்,

 

அப்படி எல்லாம் இல்ல காவ்யாஎன்று காவ்யாவின் தோளை தொட்டு சமாதானம் செய்ய முயன்றவனின், கைகளை தட்டிவிட்டாள்.

 

 நான் யார்கிட்டயும்,பொய்யா நடிக்கல மாமா.என்கிட்ட தான், எல்லாரும் பொய்யாய் இருந்திருக்காங்க.கிருஷ்ணா அவன் தேவைக்காக என்னை பயன்படுத்திக்கிட்டான்னு, எனக்கு தெரியவே தெரியாது.

 

அவன் போன பின்னாடி,அவனுக்காக..நான் ஏன்,கடைசி வரைக்கும் தனியாவே இருக்கணும்னு நினைச்சேன்.அதோட அப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு,ஒரு சந்தோஷத்துல,கார்த்திக் மாமாவுக்கு சம்மதம் சொன்னேன். அவரும் என்னை ரொம்ப ஏமாத்திட்டார்.

 

என்னை உண்மையா லவ் பண்ணி இருந்தா,என்ன ஏதுன்னு தெளிவா,ஒரு நிமிஷம் விசாரிச்சு இருக்கணும்.நான் யாரையும் ஏமாத்தலைன்னு,அவர் நம்பி இருக்கணும்.

 

அவரோட ஒட்டுமொத்த காதலுமே,அந்த ஒரு நிமிஷம் சந்தேகத்துல செத்து போச்சு மாமா.அப்புறம் எப்படி..நான் அவரை மறுபடியும்,என் வாழ்க்கையில ஏத்துக்குவேன்னு,நீங்க இன்னுமும் நினைச்சுட்டு இருக்கீங்க..?

 

உங்களோட தான்..என் வாழ்க்கைன்னு,முடிவான பின்னாடியும்,நான் உங்களை விட்டு விலக தான் நினைச்சேன்.ஏன்னா உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு தான்,நான் நினைச்சுட்டு இருந்தேன்.

 

ஆனால் ஏதோ ஒரு விதத்துல,உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு,நீங்க உணர்த்திக்கிட்டே இருந்தீங்க..!அதனால தான்,நான் இப்பவெல்லாம்,நாம பிரிந்து விடுவோம்னு,சொல்றதே இல்லை.

 

என்னை வேணும்னு நினைச்ச..எந்த உறவையும்,நான் விலக்கி நிறுத்தவே இல்ல மாமா.அப்படியிருக்கும்போது என்னை விரும்பறேன்னு சொல்ற..உங்களை விட்டுட்டு..எப்படி இன்னொருத்தனை,என்னால மனசார நினைக்க முடியும்னு,நீங்க உறுதியா நம்புறீங்க..?

 

சின்ன வயசுல இருந்து,என்னை உங்களுக்கு தெரியும்..என்னை பற்றி,முழுசா தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா மாமாஎன்று மிகவும்,நொந்துபோய் பேசவும்,சக்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

நண்பனின் குடும்பத்தை பற்றிய பிரச்சனையில் இருந்து,முழுதாக விலகி,தங்கள் குடும்ப வாழ்க்கையின் பிரச்சனைக்குள் வந்துவிட்டான்.

 

 வேறு யாரையும் அந்த நொடி,அவனுக்கு நினைவிலேயே இல்லை..!

 

எதிர்பாராமல் மனதில் இருந்ததை,காவ்யா  வெளிப்படுத்தி விட,தன்  மனைவியின் மனதில் தான் இருக்கிறோம்..தன்னை தவிர வேறு யாருக்கும் அவள் மனதில் இடமில்லை என்ற சந்தோஷத்திலேயே, சக்திக்கு மனதில் இருந்த பாரம் எல்லாம் அகன்றார் போல் இருக்க,மனைவியை அணைத்துக்கொண்டான்.

 

என்னை விடுங்க மாமாஎன்று கணவனின் அணைப்பிலிருந்து காவ்யா விலகப் பார்க்க,

 

உன்கிட்ட இருந்து..எதுவோ ஒண்ணு,என்னை தள்ளி நிற்க வச்சுக்கிட்டே இருக்கும் காவ்யா.இன்னைக்கு அந்த தடையெல்லாம்,அப்படியே முழுசா விலகிப் போன ஒரு ஃபீல்.. என்னால முழுமையா உன்னை உணர முடியுதுஎன்றவன் மனைவியின் கண்களை ஆள பார்த்தவன்,

 

இன்னும் உன் கண்ல எனக்கான காதல் இல்ல தான்.ஆனால் என்னை முழுசா ஏத்துக்கற பக்குவம்,உனக்கு வந்துடுச்சுன்னு,உன் கண்ணே  காட்டிக் கொடுக்குது.இப்போ இல்லைன்னாலும்,நாம வாழப் போற சந்தோஷமான வாழ்க்கையில,ஏதோ ஒரு நொடி,உன்னோட லவ் முழுசா வெளிப்ப்படும்னு,எனக்கு நம்பிக்கை வந்துடுச்சுஎன்றவன்,காற்றுப்புகாமல் மனைவியை அணைத்துக்கொண்டான்.

 

காவ்யாவின் மனதிலோ,சத்தியை வெளியே செல்ல விடாமல், தடுத்து நிறுத்தியதே,பெரும் மகிழ்ச்சியை கொடுக்க,அந்த சந்தோஷத்திலேயே,கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அவனின் பேச்சை அப்படியே ஆமோதித்து,முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டாள்.

 

அப்போ நீங்க வெளியில போக மாட்டீங்க தானே மாமா என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கவும்,

 

நானே நினச்சாலும் போக முடியாது போல காவ்யா.மழை ஆக்ரோஷமா பெய்துட்டு இருக்கு.இந்த இருட்டுல,நான் எப்படி போவேன்னு,எனக்கும் தெரியல என்றவன்..

 

 பால்கனி கதவைத் திறந்து பார்த்துவிட்டு,”நாளைக்கும் வெளியில எங்கேயும் போக முடியாதுன்னு தான்நி னைக்கிறேன்என்றவன்,தன் முயற்சியை கைவிட்டுவிட்டு,சோபாவில் அமர்ந்து கொள்ளவும்..

 

இப்போவாவது புரிஞ்சுதேஎன்று மனதில் சக்தியை திட்டியவள்,

 

இருங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்என்று எழுந்துகொண்டவளை தடுத்தவன்,

 

உனக்கு பசிக்குதாஎன்று கேட்டான்.

 

இல்ல மாமா..”எனவும்,

 

இந்த நிமிஷம்,என் மனசுல இருக்க சந்தோஷத்தை உன்கிட்ட பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன் காவ்யா..என்னோட சந்தோஷத்தை நீயும்,ஃபீல் பண்ணனும்னு நினைக்கிறேன்.உனக்கு சம்மதமா?”என்று கண்கள் மின்ன கேட்கவும்,அவளால் எப்படி மறுக்க முடியும்..!

 

ஒன்றும் பேசாமல் மௌனம் சம்மதம் என்று அமைதியாக இருக்க,”எனக்கு உன்னோட பதில் வேணும் காவ்யாமறுத்துவிடாதே என்ற தொனியிலையே மீண்டும் கேட்கவும்,தொண்டையில் வார்த்தை வர மறுத்தாலும்,கண் எடுக்காமல் பார்க்கும் சக்தி அவளுக்கு புதிதாக  தெரிந்தான்.

 

அவனின் அந்த பார்வையே..காவ்யாவின் மனதில் ஒரு பதட்டத்தை கொடுக்கவும்,அதனால் எழுந்த எரிச்சலில்(?)..”உங்க சந்தோஷத்தை காட்டுங்க பார்ப்போம்...”என்று திமிராகவே அவனுக்கு பதில் சொன்னாள்..அவனும் அவள் பாணியிலையே பதில் கொடுத்தான்..அவனின் சந்தோஷத்தை முழுதாக,மனைவியை உணர வைத்த பின்னர் தான்..அவளை உணர்வுக்கே கொண்டு வந்தான்.

 

அவள் உள்ளமும் அவனுள் மூழ்கிப் போகத்தான் செய்தது..!!

 

No comments:

Post a Comment