ULLAM UNNILE MOOZHGUDHE-32

 

அத்தியாயம் 32

 

காவ்யா ,சக்தி ரிஷப்சன் வேண்டாம் என்று மறுத்த விஷயத்தை போன் செய்து அத்தையிடம் கூறவும்,உடனடியாக மகனுக்கு போன் செய்தார்.

அம்மாவின் அழைப்பு வரவும்,அருகில் இருந்த மனைவியை முறைத்து விட்டு,கடைசி ரிங்கில் போன் எடுத்தவன்,”சொல்லுங்கம்மாஎனவும்,

ரிஷப்ஷன் வேண்டாம்னு ஏன் சொன்ன?”என்று கேட்கவும்,

இவ்வளவு நாள் கழிச்சு ரிஷப்ஷன் வைச்சா,நல்லா இருக்காதும்மா.அதான் வேண்டாம்னு சொல்றேன்என்றான்.

ஏன்,வெளிநாட்டுல இருக்கவன்,அங்க கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு,இங்க வந்து ரிஷப்ஷன் வைக்கிறதில்லயா..!”என்றவர்,

நம்மளால அந்த நேரத்துல எதுவும் செய்ய முடியல.அது எல்லாருக்கும் தெரியும்.யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க..!உங்க கல்யாணத்துல ஒருத்தர்-க்கு கூட சாப்பாடு போட முடியலடா..!!

உன்னோட கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்தணும்னு,நான் கனவு கண்டேன்னு உனக்கும் தெரியும் தானே..!அந்த கனவை ரிஷப்ஷன் நடத்தியாவது நிறைவேத்திக்கறேன் சக்தி.வேண்டாம்னு சொல்லாத கண்ணாஎன்று மகனிடம் கெஞ்சவும்,சக்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

உங்க விருப்படி செய்யுங்கம்மாஎன்றவன் போனை அணைத்துவிட்டு,கண் மூடி நெற்றியில் கைவைத்து படுக்கவும்,

உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் மாமா.உங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்கஎன்று கணவனை சமாதானம் செய்ய முயற்சிக்கவும்,எழுந்து அமர்ந்தவன்,

இதுவும் நல்லதுக்கு தான் காவ்யா.என்னோட மன பயம் போகும்னு நினைக்கிறேன்என்றான்.

ஒன்றும் புரியாமல்,”மன பயமா?எதுக்கு மாமா பயப்படறீங்கஎனவும்,

அவளையே பார்த்தவன்,”இன்னமும் என்னால கார்த்திக்கும்,உனக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தை மறக்க முடியல..!நீங்க ரெண்டு பேரும் மாலை மாத்திக்கிட்டதே என் கனவுல வந்துட்டே இருக்கு..!!

அந்த கனவு என்னை நிம்மதியா தூங்க விட மாட்டேங்குது காவ்யா.ஏதோ ஒரு உள்ளுணர்வு,நீ கார்த்திக்கு சொந்தமானவன்னு சொல்லிக்கிட்டே இருக்கு.என்னால இதுலயிருந்து வெளில வரவே முடியல..”எனவும் ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே செல்லப் போனாள்.

நீ எதுவும் சொல்லலையே?”பாவமாய் கேட்கவும்,

உங்களோட முட்டாள்த்தனமான கற்பனைக்கும்,பயத்துக்கும் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது மாமா..!!உங்களோட கற்பனை நிஜம் இல்ல.எனக்கு வேற எப்படி சொல்லி,புரிய வைக்கிறதுன்னும் தெரியலஎனவும்,

நீ எதுவும் சொல்ல வேண்டாம்.நான் சொல்றதை கேளு.என் மனசில இருக்க பயத்தை வெளில சொன்னாலாவது,என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறேன்..இங்க வந்து உட்கார்என்று அழைக்கவும்,மறுக்க முடியாமல் அவனருகில் அமர்ந்தாள்.

கார்த்திக்கு நான் துரோகம் பண்ணிட்ட மாதிரி ஒரு பீல் காவ்யா..”

நீங்க என்ன பண்ணிங்க? அவரா தானே கல்யாணம் வேண்டாம்னு சொன்னார்?”எனவும் விஷயத்தை சொல்ல முடியாமல்,மனைவியையே பார்த்தவன்,மனதை தைரியப்படுத்திக்கொண்டு விஷயத்தை பகிர்ந்து கொண்டான்.

கார்த்திக் கல்யாணம் நின்னு போறதுக்கு நானும் ஒரு காரணம்என்று இழுக்கவும்,

எதுன்னாலும்,நிறுத்தாம,சொல்ல வந்த விஷயத்தை டைரக்ட்டா சொல்லிடுங்க மாமா?”என்று பொறுமை இழந்து பேசவும்,

அந்த கிருஷ்ணாவுக்கு ,மறைமுகமா தகவல் கொடுத்து,கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்ததே நான் தான்என்றுவிட்டு மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதும் புரியாமல்,”ஏன் மாமா?”என்று கேட்கவும்,

உன்னோட கல்யாணம் நடக்கறது பிடிக்கலஎனவும்,காவ்யா தவறாக புரிந்துகொண்டாள்.

அப்போ என் மேல ஆரம்பத்தில இருந்தே,உங்களுக்கு வெறுப்பு இருந்திருக்கு.சான்ஸ் கிடைக்கவும் பயன்படுத்தி,என்னை அசிங்கப்படுத்திட்டிங்க..!அப்படிதானே மாமாஎன்று நிறுத்தி நிதானமாக கேட்கவும்,

ஹையோ..நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட காவ்யா..!உன் மேல எனக்கு சின்ன வயசுல இருந்தே கோபம் தான்.வெறுப்பு இல்ல..!!அப்பப்போ நீயும் என்னை சீண்டுவ..!நானும் வெறுப்பா பதில் கொடுப்பேன்.

அது அப்பவே முடிஞ்சு போயிடும்.நான் கல்யாணத்தை நிறுத்தினதுக்கும்,என்னோட கனவுக்கும் சம்மந்தமிருக்குஎன்று நேரடியாக விஷயத்தை சொல்ல முடியாமல் தயங்கியவன்,

சில நிமிட மௌனத்திற்கு பிறகு,”கார்த்திக்கோட நீ மணப்பொண்ணா நிற்கும் போது தான்,நீ எனக்கானவளா மட்டுமா இருக்கணும்னு தோணுச்சு காவ்யாஎனவும்,

இதை நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்க..கல்யாணத்தை நிறுத்த திட்டம் போட்டது,ஏன்னு தான் என் கேள்வியே மாமா? ஏன்னா,என்னை கல்யாணம் பண்ண,உங்க ஈகோ எப்பவுமே சம்மதிச்சிருக்காது..

உங்களோட எண்ணமெல்லாம்,அந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு மட்டும் தான் இருந்திருக்குமே தவிர,என்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சு இதை செய்திருக்க மாட்டீங்கஎன்று கணவனைப் பற்றி முழுமையாக அறிந்தவளாய் கேட்கவும்,உண்மையில் அதிர்ச்சியாய் மனைவியை பார்த்தான்.

அவனது பார்வையிலையே தான் சொன்னது தான் உண்மை என்று புரிந்து போக, “நான் உங்களுக்கு என்ன மாமா பாவம் பண்ணேன்..? நீங்க செய்த காரியத்தால,எனக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா? அதைவிட என்னோட அப்பாவோட உயிர்? அவர் திரும்ப வருவாரா?

கிருஷ்ணாவை பற்றி உங்ககிட்ட நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன்.நீங்க நல்ல மனுஷனா இருந்தா,என்ன செய்திருக்கணும்?அவனை கல்யாணத்துக்கு வரவிடாம நீங்க தடுத்திருக்கணும்.

அதை விட்டுட்டு,அவனை கையோடவே கூட்டிட்டு வந்துட்டு,என்னோட கல்யாண வாழ்க்கையையே,ஒரு பேசுபொருளா ஆக்கிட்டிங்களே மாமா...?

நீங்க இப்படியெல்லாம் செய்யணும்னு அவசியமேயில்லையே..!உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு,நேரடியா அத்தைகிட்ட சொல்லியிருந்தா,அவங்களே கல்யாணம் பண்ணி வைச்சிருப்பாங்களே..எதுக்கு இந்த நாடகம்என்று நிறுத்தியவள்..

உங்களோட ஈகோ,என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல விட்டிருக்காது தானே மாமா..இப்பக் கூட,நீங்க எல்லாருக்கும் தியாகியா,ரொம்ப நல்லவனா தெரியறீங்க..!

ஏன்..கார்த்திக் கூட உங்களை ரொம்ப நல்லவரா தான் நினைச்சிட்டு இருக்கார்...நானும் கூட தான் அப்படி நினைச்சிட்டு இருந்தேன்..இப்போ எனக்கு தோணுது மாமா..”என்று நிறுத்தி சக்தியின் முகத்தை வெறுப்புடன் பார்த்தவள்,

உங்களை விட கார்த்திக் மாமா எவ்வளவோ பெட்டெர்..விஷயம் தெரிஞ்ச பின்னாடியும்,கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கறேன்னு தான் சொன்னார்..கைவிடணும்னு நினைக்கல..ஆனா நீங்க...”எனவும்,

நான் உன்னை கைவிடவே இல்லை காவ்யா.கடைசி வரைக்கும் உன் கையை பிடிச்சிட்டு இருக்கணும்னு ரொம்ப உறுதியா இருக்கேன்என்று காவ்யாவின் கையைப் பிடிக்கவும்,அவனின் கையை உதறியவள்,

எதுன்னாலும் நாளைக்கு பேசிக்கலாம் மாமாஎன்று எழுந்து வெளியே செல்லவும்,

நம்ம பிரச்சனை இந்த பெட்ரூம்லயே இருக்கணும்னு நினைக்கிறேன் காவ்யா.பக்கத்து ரூம் வரைக்கும் போக கூடாதுஎன்று அவள் தனியறையில் தூங்கக் கூடாதென்று நேரடியாகவே எச்சரிக்க,

ஒரே ரூம்ல இருந்தாலும்,மனசு ரெண்டு தான் மாமா.எனக்கு இப்போ அப்பா ஞாபகமா இருக்கு.அவரோட இறப்புக்கு நான் மட்டும் தான் காரணம்னு நினைச்சிட்டு இருந்தேன்.இப்போ நீங்களும் காரணம்னு  நினைக்கும் போது,எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல மாமா!!என்று கண்களை துடைத்துக்கொள்ளவும்,

சரி.நீ அந்த ரூம்லயே படு.ஆனா கதவை லாக் பண்ணக் கூடாதுஎனவும்,

நான் எதுவும் தப்பான முடிவுக்கு வந்துட மாட்டேன் மாமா..நீங்க பயப்படாதீங்கஎன்றாள்.

நீ தப்பான முடிவுக்கு போக மாட்ட!நீ எவ்வளவு தைரியமான பொண்ணுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..இது நைட் டைம்..!

இடையில எனக்கு பயமா இருந்துச்சுன்னா,கட்டாயம் நான் அந்த ரூம்-க்கு வருவேன்.நீ லாக் பண்ணாலும்,என்கிட்டே கீ இருக்கு..முன்னாடியே சொல்லிட்டேன்எனவும் கோபமாக பக்கத்துக்கு அறையில் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

வெகு நேரம் இருவருக்கும் பாகுபாடில்லாமல் சரிஎது,தவறு எது என்று  யோசித்துக் கொண்டிருந்தவள்,ஒரு முடிவுக்கு வராமலையே தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்து பார்க்கும் போது,அவளருகில் சக்தி படுத்திருக்க..உங்களோட முழு மனசோட வாழ ஆரம்பிச்சிட்டேன்..இனி என்ன சொன்னாலும்,பிரிஞ்சு போக மாட்டேன்ற தைரியத்துல தான மாமா,உண்மையை சொல்லியிருக்கீங்க..!

 

நாம ஒண்ணா சேர்ந்து வாழாம இருந்திருந்தோம்னா,இப்பவும் உண்மையை சொல்லியிருக்க மாட்டீங்க..நீங்க புத்திசாலி தான்.நான் தான் உலகம் தெரியமா,வீடே உலகம்னு,மண்ணு மாதிரி வாழ்ந்திருக்கேன்என்று மனதிற்குள் பேசிக்கொண்டே எழுந்தவள்...

என் வாழ்க்கையில எதுவுமே நிலைக்க மாட்டேங்குது..!என்ன நேரத்துல பிறந்தேன்னே தெரியலஎன்று யோசித்துக் கொண்டே சிறிது நேரம் குளியலறையில் அழுது கரைந்தவள்,ஒரு முடிவோடு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும்குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா?என்று கோபமாக கேட்டவன்,காவ்யாவின் முகத்தை பார்த்துவிட்டு,

நீ இப்போ அழுகற அளவுக்கு என்ன நடந்துடுச்சு காவ்யா!உன்ன பிடிச்சிருந்துச்சு.அதனால நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தி,நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.நீ கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன்னா,என் லவ் புரியும்..

உன்மேல இருந்த லவ்னால தான்..இத்தனையும் செஞ்சேன்னு புரிஞ்சுக்கோ காவ்யா..!தேவையில்லாம இப்படி நீ அழுது கரையிறதுனால,எதுவுமே நடக்க போறதில்லஎனவும்,

ஆமாம்.என்னோட அப்பா உயிரோட வரப் போறதில்லவெடுக்கென்று சொல்லவும்,சக்தியால் பதில் பேச இயலவில்லை.

நான் அப்படி நடக்கும்னு யோசிக்கல காவ்யா.அந்த ஒரு விஷயத்தை என்னால இன்னமும் ஏத்துக்க முடியல..!அவர் இறந்தவுடனே,அங்க இருக்க முடியாத அளவுக்கு,மனசில குற்றவுணர்ச்சி!அதனால தான்,நான் சென்னைக்கே வந்தேன்.

உன்னோட அப்பா மேல,நீ அவ்வளவு பாசம் வைச்சிருப்பென்னு எனக்கும் தெரியல..!உன்னை கண்டுக்காம இருந்த உன்னோட அப்பா,உன்னோட கல்யாணம் நின்னு போச்சுன்னு,நெஞ்சை பிடிச்சு விழுவார்னும் நான் நினைக்கல..!

 

நீ அவர் போட்டோ முன்னாடி அழுது கரைஞ்சத,என்னால பார்க்கவே முடியல காவ்யா..ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.அப்போ என்னால இதையெல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ண முடியல..எனவும்,

காலம் கடந்து செய்யற எதுவும் தப்பாகி தான் போகும் மாமாஎன்றவள் ஒரு பேகை எடுத்து,அவளது துணிகளை அடுக்கவும்,

என்ன ஊருக்கு போறியாக்கும்?என்று நக்கலாக கேட்டான்.

ஆமாம்

 நீ இப்போ போறதும் என்னோட வீட்டுக்கு தான்ற விஷயத்தை மறந்துடாத காவ்யா

நான் எங்க வீட்டுக்கு போறேன்.மாமாவும் அத்தையும் அங்க தானே இருக்காங்க

இல்லயே!..உன்கிட்ட அவங்க சொல்லலைன்னு நினைக்கிறேன்...மருமக வீட்டுல இருக்குறாங்கன்னு ஊர்ல தப்பா பேசினாங்களாம்.!!

அதனால எங்க வீட்டுக்கே போயிட்டாங்க..இப்போ பதில் சொல்லு..!நீ அங்க போனாலும் என் வீட்டுக்கு தான் போயாகனும்.அதுக்கு இங்கேயே இரு..ப்ளீஸ் காவ்யாஎன்று கெஞ்சவும்,

எனக்குன்னு வீடு இருக்கு மாமா..என்னோட பிடிவாதத்தை பற்றி,உங்க அப்பாவுக்கு தெரியும்.எனக்காக அவர் என் வீட்டுக்கு வருவார்...நான் கிளம்பறேன்என்று கிளம்பவும்,

ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு..நானும் வரேன்..எப்படியும் ரிஷப்ஷன் நடக்க போகுது.அதுக்கு நான் வந்து தானே ஆகணும்எனவும்,

இப்பவும் என்னால உங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாதுன்ற, நமபிக்கையில தான மாமா..உண்மைய சொல்லியிருக்கீங்கஎனவும்,

ஆமாம்..ரிஷப்ஷன் முடியறதுக்குள்ள உன்னை சமாதானம் பண்ணிடுவேன்னு,ரொம்ப கான்பிடன்ட்டா இருக்கேன்என்றவன்,தன்னுடைய லேப்டாப் பேகை மட்டும் எடுத்துக்கொண்டு,

 

வா..போகலாம்என்று காவ்யாவின் கையிலிருந்த பேகையும் பிடுங்கிக்கொண்டு,ஊருக்கு புறப்பட்டான்..

காவ்யாவால்,எதுவும் செய்ய இயலாத நிலை என்று தான் சொல்ல வேண்டும்.கணவனிடம் சண்டையிட்டு எங்கு செல்ல முடியும் அவளால்? கணவனின் வீட்டிற்கு மட்டும் தானே செல்ல முடியும்..!!ஆனால் முடிந்த மட்டும் சக்தியிடமிருந்து விலகியிருக்க விருப்பம் கொண்டாள்.அதை செயலிலும் காட்ட உறுதி கொண்டாள்.

No comments:

Post a Comment