Ullam Unnile Moozhgudhe-31

 அத்தியாயம் 31


சென்னையில் மழையினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது..!!


 மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசாங்கம் நிதி கொடுத்து,உதவி  செய்து கொண்டிருக்க, தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை,மக்களுக்கு செய்து கொண்டிருந்தனர்.


மக்களும் தங்களது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு,கொஞ்சம் கொஞ்சமாக,முயற்சி செய்து கொண்டிருந்தனர்


விஷாலின் அப்பா,இந்த முறையும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருந்தார். ஆனால் அவர் உடல்நிலை மட்டும் சற்று மோசமாக இருந்தது.


இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட விஷால்,தங்கள் வீட்டிற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தவன்,அந்தப் பழைய வீட்டையும் சற்று புதுப்பித்தான்.


 எப்போதும் மகனை கடிந்து கொள்ளும் விஷாலின் அப்பாவும்.. இந்த முறை எதுவும் சொல்லவில்லை.


வீட்டை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்..தன்னிடம் பணம் கேட்காமல் இருந்தாலே போதும் என்பது அவரின் நிலைப்பாடாக இருந்தது..!!


சக்தியும் நண்பனின் வீட்டை புதுப்பிப்பதற்கு,தேவையான அனைத்து உதவிகளையும் செய்தான்.


வீட்டை புதுப்பித்த பின்,முழுதாக ஒருமுறை வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு வந்த விஷால்,"இப்போ தான் மச்சான்..நிம்மதியா இருக்கு. இனி பயப்படாம,நம்ம ப்ளாட்ல இருக்கலாம்" என்றான்.


இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த விஷாலின் அம்மா,"இன்னமும் எதுக்கு நீ அங்க இருக்கணும்..?இங்கேயே வந்துடுப்பா" என்று மகனை ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தி,வீட்டிற்கு அழைத்தார்.


"அது சரி வராதும்மா.அப்பாவோட குணத்துக்கும், எனக்கும் சுத்தமா ஒத்துவராது.நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க..நீங்க சம்மதிச்சா,நானும்,என்னோட மனைவியும், குழந்தையும்..உங்க வீட்டுக்கு வந்து போவோம்"என்றான்.


"உன்னையும்..குழந்தையும் ஏத்துக்கும் போது,உங்க ரெண்டு பேருக்கும் முக்கியமான உறவு...உன்னோட மனைவியை,ஏத்துக்காம இருப்போமா விஷால்..?நாங்க பார்த்த பொண்ணை, நீ கல்யாணம் பண்ணலைன்னு ஒரு கோபம்..! 


"எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டன்னு,உங்க அப்பாவுக்கு மன வருத்தம்..!!..எல்லாத்துக்கும் மேல,உன்னை மனசார ஏத்துகிட்டோம்ன்னு, உன் கிட்ட நேரடியா வந்து சொல்ல முடியல.உங்கப்பாவோட ஈகோ அதுக்கு இடம் கொடுக்கல.


 "இப்போ நீ வந்தா,உங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார் விஷால்.நீயும் பிடிவாதம் பிடிக்காதப்பா.எங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா,நீ உன் வீட்டிலிருந்து..இங்க வர்றதுக்கு,ஒரு மணி நேரம் ஆகும். கொஞ்சம் யோசிச்சிப் பார் விஷால்" எனவும், விஷால் சக்தியை பார்த்தான்.


"என்னை எதுக்குடா பார்க்கிற..? அம்மா கேட்டாங்கன்னா,அவங்களுக்கு பதில் சொல்லு"எனவும்,


" என்ன பதில் சொல்றதுன்னு..தெரியாம தான்டா.. உன்னை பார்க்கிறேன்"என்றான்.


விஷாலையும்,அவன் அம்மாவையும் பார்த்தவன்,"உன்னால அப்பாவோட ஒண்ணா இருக்க முடியாதுன்னு தோணற பட்சத்தில,இங்கே ஏதாவது வீடு பார்த்து வந்துடு.நமக்கு ஆபீஸ் தூரமா இருந்தாலும்,கொஞ்சநாள் வொர்க் ப்ரம் ஹோம்னு சொல்லிட்டு வேலையைப் பாரு.. அப்புறம் வேற எங்கேயாவது மாறிக்கலாம்' எனவும்,


"அந்த ப்ளாட் ஆசை ஆசையா நாங்க வாங்கினது சக்தி..தேனோட உழைப்பு அது..!! அந்த வீட்ட வேற யாருக்கும் விட்டுட்டு வர முடியாதுடா.."எனவும்,


" நீ என்கிட்ட கேட்பதைவிட,தேனு கிட்டயே கேளு..அந்த வீடுதான் தேனுக்கு வேணும்ன்னா,அம்மா அப்பாவை அங்க பக்கத்துல ஒரு வீடு பார்த்து வைச்சுடு.. சிம்பிள்...இதுல நீ ரொம்ப யோசிக்கறதுக்கும், கஷ்டப்படறதுக்கும் எதுவும் இல்ல"என்றான்.


"நீ சொல்றது கரெக்டு தான்.இந்த ஏரியால..இவங்க இருப்பதைவிட,நம்ம ஏரியால இருக்கது..எவ்வளவோ சேஃப்" என்றவன்,


அம்மாவைப் பார்க்க,"எங்களுக்கும் இந்த வீடு உயிர் தான் விஷால்.ஆனால் உன்னை விட,வேற எதுவும் எங்களுக்கு பெருசு இல்ல.நீயும் இங்க இருந்து வேலை பார்க்கிறது கஷ்டம்..!!


"உனக்காக நாங்க இடம் மாறி இருந்துக்கறோம்-ப்பா"என்று கணவரை கேட்காமலேயே சம்மதம் வழங்க,


"அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்லுமா" எனவும்


 'அவரை எப்படி சமாளிக்கணும்னு, எனக்குத் தெரியும் விஷால்.நீ நாங்க தங்கறதுக்கு,ஒரு வீட்டை பார்"எனவும்,


 "என் செல்ல அம்மா..என்னோட செல்லம்மா.."என்று சந்தோஷமாக அம்மாவை கொஞ்சியவன்,


"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,அவ்வளவு சீக்கிரம் வீட்டை பார்த்து,உங்களை கூட்டிட்டு கிளம்பிடுவேன்-ம்மா"என்று உறுதியளித்துவிட்டு நண்பனுடன் கிளம்பினான்.


விஷால் தேன்மொழியை பார்க்க கிளம்பவும் சக்தி தன் வீட்டிற்கு கிளம்ப," கொஞ்சநேரம் தேன்மொழி வீட்டிலேயும் இருந்துட்டு போடா"என்று விஷால் நண்பனை வீட்டிற்கு அழைக்கவும்,


"ஏற்கனவே லேட் ஆச்சு விஷால்.இப்பவே நாலு போன் வந்துடுச்சு.இன்னும் லேட் பண்ணா,எங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிடுவா.அப்புறம் அவர் பேச்சை என்னால கேட்க முடியாது"எனவும்,


"அப்படி ஒன்னும்,நீ காவியா பேச்சை கேட்கற ஆள் இல்லையே"என்று சந்தேகமாக நண்பனை பார்க்கவும்,


"எல்லா நேரமும்,ஒரே மாதிரி இருக்க முடியுமா மச்சான்.சில நேரம் பொண்டாட்டி பேச்சையும் கேட்க வேண்டி தான் இருக்கு" என்றான்.


"என்னால உன்னோட இந்த மாற்றத்தை, இன்னமும் ஏத்துக்க முடியலடா"ஏன்று வம்பு வளர்க்கவும்,


"காவியா முன்னாடி மாதிரி இல்லடா. இப்பவெல்லாம் நான் சொன்ன நேரத்துக்கு வரலைன்னா,கோவிச்சுக்கிட்டு பேச மாட்டேங்கறடா.அவளை சமாதனம் செய்யறதுக்கே,ரொம்ப நேரம் ஆகுது. அவளோட பிடிவாதம் ஜாஸ்தி ஆகிட்டே போகுது" என்று சலிப்பாக பேசுவதுபோல் பேசவும்,


"அப்போ நீ காவியாவோட பிடிவாதத்தையும் ரசிக்கிறேன்னு சொல்லு..!" என்று கிண்டல் செய்தவன்,


"நீங்க ரெண்டு பேரும் ஓகே ஆகிட்டீங்கன்னு புரியுது.என்ஜாய் பண்ணு..! நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம்..!!" என்றவன் கிளம்பிவிட, சக்தியும் மனைவியை பார்ப்பதற்கு ஆவலாக வீட்டிற்கு வந்தான்.


கணவனைப் பார்த்ததும்,கதவை திறந்துவிட்ட காவியா,சக்தியிடம் எதுவும் பேசாமல்,அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்து கொள்ளவும்,"இன்னைக்கும் சமாதானம் செய்யணும் போலயே"என்று காவியாவிற்கு கேட்கும்படி சொன்னவன், மனைவிக்கு எதிரே அமர்ந்து,அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.


காவியா சக்தியை முறைத்து விட்டு,எழுந்து செல்லவும்,அவள் கையை பிடித்து இழுத்து, தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன், அவளை விலக விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு,"எனக்கு ஒரு சந்தேகம் காவியா..நான் உன்ன கெஞ்சணும்ன்றதுக்காகவே... இப்பவெல்லாம் அதிகமா கோவிச்சுக்கறேன்னு தோணுது"என்றான்.


"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. நீங்க கெஞ்சினா,அதுல எனக்கு என்ன கிடைக்கப் போகுது.நான் போன் பண்ணா...இப்ப வரேன்..அப்புறம் வரேன்... கிளம்பிட்டேன்...இப்படி பொய்,பொய்யா சொல்றதுக்கு பதிலா,சரியா எத்தனை மணிக்கு தான் வருவேன்னு சொல்ல வேண்டியது தானே..!!


"ஏன்...கரெக்டான டைம் சொல்ல முடியலன்னாலும்,கொஞ்சம் டைம் ஆகும்னு சொன்னா,எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ல.நானும் நீங்க வந்துடுவாங்கன்னு...எந்த வேலையும் செய்யாம..உங்களையே எதிர்பார்த்து இருக்க மாட்டேன் இல்ல..!" என்று கேட்கவும்,


"அதனாலதான் நான் கரெக்ட் டைம்,சொல்றது இல்ல.நான் நாலு மணிக்கு வந்துடுவேன்னு,சொல்லிட்டா நீ வேற வேலைய பார்த்துட்டு,என்னை நினைச்சு கூட பார்க்க மாட்ட..!இப்போ என்னையே நினச்சிட்டு,எதிர்பார்த்துட்டு இருந்த இல்ல..!!இந்த சந்தோஷம் கொடுக்கிற பீல் வேறு எதிலும் கிடைக்காது"என்றான். 


"போங்க மாமா..நீங்களும்..உங்களோட ஃபீலிங்ஸும்..! எப்ப பார்த்தாலும்,பீலிங்ஸ்.. பீலிங்ஸ்-ன்னு..இந்த ஒரு வார்த்தையை சொல்லியே,என்னை வேற விதமா,டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க..இது நல்லாவே இல்ல..சொல்லிட்டேன்"என்றவள்,சக்திக்கு காபி கலப்பதற்காக கிச்சனுக்குள் செல்லவும்,அவள் பின்னாலேயே சென்றவேன்,அவளை காஃபி கலக்க விடாமல் தொந்தரவு செய்தான்.


சக்தியின் சேட்டைகளை ரசித்தாலும்,அவனால் வேலை கெடுவதால்,கஷ்டப்பட்டு கணவனின் பிடியிலிருந்து வெளியே வந்தவள்,"நீங்க போய் உட்காருங்க மாமா.உங்களால ஒன்னு சுகர் அதிகமா போட்டுடறேன்.இல்லன்னா காபி பவுடர் அதிகமா போட்டுடறேன்.


"அதனாலேயே இப்போவெல்லாம்,நான் காபி போட்டா,என்னாலேயே குடிக்க முடியல.கீழ ஊத்த வேண்டியதா இருக்கு. இனி நீங்க கிச்சன்குள்ளேயே வரக்கூடாது.. வரமாட்டேன்னு சொல்லுங்க.."எனவும், அவளுக்கு வாக்கு கொடுக்காமல், அமைதியாக ஹாலில் வந்து அமர்ந்தான்.


கிச்சனுக்குள் இருந்தபடியே,"இன்னும் நீங்க வரமாட்டேன்னு,உறுதியா சொல்லல" என்று மீண்டும் கேட்கவும்,


"இப்போ நான் உள்ள வரணும்னு தானே, நீ  விடாம கேட்கிற..நீ அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னாலும்,நான் நம்ப போறதில்ல.இப்போவெல்லாம் உன்னோட சேட்டை தான்,அதிகமாகிட்டு இருக்கு..!


"என்னை சீண்டிவிட்டு,நீ வேடிக்கை பார்க்கற..!எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா..!!"என்று மனைவியின் போக்கை, சரியாக கவனித்து கேட்கவும்,காவியாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.


"நீ இன்னும் பதில் சொல்லல"என்று அவளைப் போலவே கேட்கவும்,


கையில் காபியோடு வந்தவள், அவனுக்கு கொடுத்துவிட்டு,"அத்தை போன் பண்ணாங்க"என்று பேச்சை மாற்றினாள்.


"நீ யாருன்னு எனக்கு தெரியும்.பேச்சை மாத்தாம,நான் கேட்டதுக்கு,பதில் சொல்லு..!"என்று பிடிவாதம் பிடிக்க,


அதை கண்டுகொள்ளாமல்,"நமக்கு ரிசப்ஷன் வைக்கப் போறதா,அத்தை சொல்லிட்டு இருந்தாங்க.."என்று நேரடியாக விஷயத்திற்கு வரவும்,சக்தியும் ரொமான்ஸ் மூடில் இருந்து,இயல்பு நிலைக்கு வந்தான்.


"திடீர்னு ஏன்..?என்று கேட்கவும்,


"தேனு அக்காவோட, வளைகாப்பு அப்போ போட்டோ எடுத்துக்கிட்டோமே மாமா..! அதை அத்தைக்கு அனுப்பி வைச்சேன்.. அதைப் பார்த்துட்டு தான்,நமக்கு ரிசப்ஷன் வைக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.."எனவும்,


"அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு" என்றவன்,அறைக்குள் சென்று விட,


"ஏன் மாமா வேண்டாம்னு சொல்றீங்க.."என்று புரியாமல் கேட்கவும்,


" அது தேவையில்லாத பிரச்சனைக்கு வழிவகுக்கும்.நம்ம கல்யாணம் நடந்த முறையை பற்றி,திரும்பவும் எல்லாரும் பேசுவதற்கு,நாமளே வாய்ப்பு கொடுப்பதாக இருக்கும்.


"இப்போ என்ன..உன்னோட வளைகாப்புக்கு,எல்லாரையும் இன்வைட் பண்ணி,கிரேண்டா செஞ்சா போச்சு"என்றவன்,


"அம்மாகிட்டவும் இதையே சொல்லிடு. தேவையில்லாம என்னால..லீவு எடுக்க முடியாது"என்று கூறியவன்,


"எனக்கு சாப்பாடு வேண்டாம்.பசிக்கல..!! ரொம்ப டயர்டா இருக்கு..தூங்க போறேன்…!!!" என்று படுத்துக் கொள்ளவும்,திடீரென்று தன் கணவனுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல்,காவ்யா குழம்பி நின்றாள்.

No comments:

Post a Comment