என்னவோ மயக்கம்-3

ஹாய் பிரண்ட்ஸ்..அடுத்த அத்தியாயம் இதோ.படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.நன்றி.


 3

இரண்டு நாட்களுக்கு பின்.....அருண் தங்கியிருக்கும் வீட்டில்...

“முடியாது..முடியாது,என்னால உன் கூட வரவே முடியாது”கீச்சுக்குரலில் கத்தியவளின் முன்னால் கோபத்துடன் வந்து நின்றான் அருண்.

“நீ வந்து தான் ஆகணும் பிரத்யா.எப்பவும் உன்னைப் பற்றி மட்டுமே நினைக்காதே.நான் நம்ம பேர் கொடுத்துட்டேன்.போகலைன்னா பசங்க கேலி பண்ணியே என்னை கொன்னுடுவானுங்க.புரிஞ்சுக்கோ”தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

“அதெப்படி நீ என்னை கேட்காமல் பேர் கொடுக்கலாம்.கொடுக்கறதுக்கு முன்னாடியாவது என்கிட்ட சொல்லியிருக்கணும்.நீ அதை செய்யாத போது,நான் மட்டும் ஏன் வரணும்.முடியாது போடா”எழுந்து நடையைக் கட்ட முயன்றவளின் பின்னே அவன் போகவில்லை.

அவளுக்கே உறுத்த திரும்பி பார்த்தாள்.

அவன் அமர்ந்திருந்த நிலை,இவளை வாட்ட,திரும்பி அவனிடம் வந்து,”நாம அந்த போட்டில கலந்துக்கிட்டா நாம லவர்ஸ்னு எல்லாரும் நினைச்சுப்பாங்க.அது ஏன் உனக்கு புரியலை”-ஆகப்பெரும் கவலையை பகிர்ந்தவளை,தன் கண்ணே தெறித்துவிழும் அளவிற்கு பார்த்தான்.இல்லையில்லை... முறைத்தான்.

“ஓஹ்..அப்போ இப்போ நமக்கு பேர் என்ன”

“வி ஆர் ஜஸ்ட் பிரண்ட்ஸ்”

“ஆஹான்..நாம பிரண்ட்ஸாஆஆ..வெளில சொல்லிடாத.சிரிச்சிடுவாங்க”-கடுப்பாகிவிட்டான்.

“நீ ஏன் உன்னை பற்றி மட்டுமே நினைக்கற”அவன் கேட்டதையே திருப்பி அவனிடம் கேட்டும்விட்டு,

“என் மாமா காதுக்கு போச்சுன்னா அவ்வளவு தான்.படிப்பே வேண்டாம்னு கூட்டிட்டு போயிடுவார்.இந்த டிகிரியே நான் மேரேஜ் இன்விடேஷன்ல போடறதுக்காக மட்டுமே படிக்கறேன்,அதுக்காக தான் படிக்க வைக்கறாங்க.நீ இப்படி பண்ணா...எப்படி அருண்”

சோகமாகவோ,இல்லை கோபமாகவோ இதை சொல்லியிருந்தால் அருணின் பிரதிபலிப்பு வேறு மாதிரி இருந்திருக்கும்.ஆனால் செல்லமாய் சினுங்கிக்கொண்டல்லவா சொல்கிறாள்..

அவள் மையிட்ட கண்கள்..பேசும் நயனபாஷை..அருணின் மனம் இசைக்கருவிகள் இல்லாமலே ஸ்ருதி லயம் மாறாமல்,ஹை பிட்ச்சில் பாடல் பாடியது.(மானங்கெட்டவன்..வேற என்னத்த சொல்ல..ஹி ஹி)

நித்தமும் பித்து பிடித்து 
நிற்கும் என்னை கொத்தி எடுத்து 
சுத்தி அடிக்கிறதே 
காதல் காத்து

அருணிற்கு நல்ல குரல்வளம்.நம்மூர் அம்மாக்கள் பிள்ளைகளை எல்லா கலை வகுப்பிற்கும் அனுப்பி,பெருமைப்பட்டுக்கொள்வார்களே.அருணின் வீட்டினரும் அப்படித்தான்..ஆனால் அவன் விருப்பமில்லாமல் எதையும் அவனை செய்ய வைக்க முடியாது.

பாட்டும் நன்றாக பாடியவனை ரசித்த மனதை அடக்க முயலாமல்,”சரியான கேடி”என்று முணுமுணுத்தாள்.

ஓயாது அவளது இதழ்களை பார்ப்பவனுக்கும் அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்ததில்,யாருமில்லா இந்த தனிமை அவனுக்கு உச்சக்கட்ட மயக்கத்தை கொடுத்தது.

அவனது கண்களும் அதை பிரதிபலிக்க,ஒருநொடி தயங்கியவள் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள்.உணர்வுகள் இருவருக்குமே பொது.அவன் காட்டிவிடுகிறான்.இவள் கோபம் எனும் திரைகொண்டு மூடிவிடுகிறாள்.அவ்வளவே!

அருண் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு நகராது,குறும்பு குரலில்“ப்ரத்யா.உன் மாமாவோட குட்டி பொண்ணுக்கு அடுத்த வாரம் பர்த்டே.நீ போற தானே”என்றதும் நடைநின்றே விட்டது..

“ஏசிபி ரவீந்தர் வொய்ஃப் ரொம்ப அழகா வேற இருக்காங்க”மயக்கம் தெளியாமல் பேசியவனின் மேல்,தன் கைக்குட்டையை கசக்கி வீசி எறிந்தாள்.

அதை தன் முகம்கொண்டு மூடியவன்,”இப்போ நீ இங்க இருந்து போயிட்டா ரொம்ப நல்லது”என்றான்.

முதலில் புரியவில்லை.புரிந்த பின்னர் போக வேண்டுமென்றே தோன்றவில்லை..அவனின் தடுமாற்றத்தை ரசிக்கவே மனம் உந்தியது.சுவற்றில் தனது இடது காலை மடக்கி வைத்து அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வெளியேறும் காலடி சத்தம் கேட்காமல் இருக்கவே,கைக்குட்டையை முகத்திலிருந்து விலக்கியவன்,அவளின் நிலை காண..இன்னும் இன்னும் ஏதோ செய்தது(வயசுக்கோளாறுன்னு சொன்னா அருண்கிட்ட இருந்து தர்ம அடி விழும்.எனக்கு வேண்டாம்ப்பா..உங்களுக்கும் வேண்டாம் தானே!!!!)

“கிஸ் மீ ப்ரத்யா”திடீரென்று அவன் கேட்க,இவள் அதிரவெல்லாம் இல்லை.எத்தனை முறை கேட்டிருப்பான்..எப்படியெல்லாம் அவனிடமிருந்து எஸ் ஆகியிருக்கிறாள்.அதே தைரியத்தில் தான் அசையாமல் நின்றிருந்தாள்..ஆனால் இன்று ஏனோ..தானே அருகில் சென்று அவனை சீண்டிப்பார்ததே ஆக வேண்டுமென்று மனம் எம்பிக்குதித்தது.(வெளில விழுந்துடாம பார்த்துக்கடியம்மா)

அவனை சீண்டுவது இவளுக்கு அல்வாவை முழுங்க சொல்வது மாதிரி..தித்திப்பாக இருக்கும்..ஏதோ அவனது ஆசையை நிறைவேற்றுவது போல மெல்ல மெல்ல அடியெடுத்து நெருங்கினாள்.

வெகுஅருகில் இருந்தவளின் பக்கம் அருணின் கை கூட நீளவில்லை..அவனுக்கும் சில கோட்பாடு இருந்தது.சில விஷயங்களை எந்த இடத்தில் எப்போது உணர்வுப்பூர்வமாய் அணுக வேண்டுமென்று அளவுக்கதிகமான கற்பனையும் இருந்தது.ஆனாலும் ஆசைகொண்ட மனதை அடக்கவே பெரும்பாடுபட்டு,அவளை வேண்டிக்கொண்டிருந்தான்.

எப்போதும்போல இன்றும் ஓடிவிடுவாள் என்று யூகித்திருந்தான்.அதுவேறு பயத்தையும் பதட்டத்தையும் கொடுத்தது(ச்சி..ச்ச்சி..எதுக்கெல்லாம் பதட்டப்படணும்னு விவஸ்தையே இல்லை..கலிகாலம்)

அதை அவள் உணர்ந்திருக்க வேண்டும்..சீண்டும் மனமில்லாமல் மெல்ல இதழை ஒற்றி எடுத்தாள்..

அருணுக்கு”பத்தலை..பத்தலை..கொஞ்சம் கூட பத்தலை”நிலை.

“வறண்டு போயிருக்கு.ஷாக் அடிக்கவேயில்லை”-என்ன சொல்கிறான் என்று அவளுக்கு புரிவதற்கு முன்பே ஈரப்படுத்தியிருந்தான் அவள் இதழ்களை..வேறொன்றும் செய்யவில்லை.(அடப்பாவிகளா...வெளங்கிடும்)

சூழ்நிலையின் கணம் தாங்காமல் அவனே விலகிவிட,ஓர்வித தயக்கத்துடனே அறையைவிட்டு வெளியேறினாள்.வேகநடையெல்லாம் இல்லை..அதற்கெல்லாம் முழுஉணர்வும் தெம்பும் இருக்க வேண்டும்..இந்த நொடி அவளுக்கோ ஏதோ ஸ்தம்பித்த உணர்வு.

அருணுக்கோ,உடலும் உள்ளமும் தித்தித்தாலும் எதற்காக தன் அறைக்கு அழைத்தோம்..அதையே பேசாமல் அனுப்பிவிட்டோம் என்று எண்ணினாலும் கொண்டாட்டமாகவே இருந்தது..இன்னொருமுறை இதே பேச்சை ஆரம்பிக்க,இங்கேயே வர சொல்வோமே..

அவனின் கூத்தாடிய மனதை அடக்கிவிட்டாள் ப்ரத்யா.இரண்டு நாள் பார்க்கவே வராமல்..கல்லூரிக்கும் வராமல்!!!(ம்ம்..யார்கிட்ட)

இரண்டாம் நாள் மாலை ஷெரின் மூலமாய் தூதுவிட்டு,அவளை ஹாஸ்டலில் இருந்து வெளியே அழைத்து வருவதற்குள் அருண் சோர்ந்து போயிருந்தான்(தண்ணியக் குடி..தண்ணியக் குடி!!).

அருண் வேலை செய்யும் கம்பியூட்டர் சென்டரில் சேருவதற்கு அவள் தயாராக வந்திருக்க,அவனுடன் காரில் ஏறிக்கொண்டாள்.

“பீஸ் எவ்வளவு”கேட்டுக்கொண்டே போனை நோண்டியவளின் கையைப் பிடித்தவன்,”நானே கட்டிட்டேன்”என்றவனின் கவனம் முழுக்க சாலையில் இருந்தது.

“நான் கொடுத்துடறேன் அருண்.ஏற்கனவே உன் வீட்டிலருந்து கொடுக்கற பணத்தை நீ வாங்கறதில்ல.சுயமா உழைச்சு படிக்கணும்னு வேலை பார்க்கற.இதில் என் செலவையும் இப்போ இருந்தே நீ பார்க்கனும்னு நினைக்கறது எனக்கு பிடிக்கலை.உன் உழைப்பு என்னோட டைம் வெஸ்ட் பண்றதுக்காக நீ வீணாக்கக் கூடாது.புரிஞ்சுதா”

அவனிடம் பதிலில்லாமல் போக,”அருண்.நீயே யோசிச்சுப் பார்.நான் பொழுது போகாமல் தான் இப்படி வர்றதே.அதுக்காக நீ இப்படி செலவு பண்ண வேண்டாம்.என்கிட்ட மாமா கொடுக்கற பாக்கெட் மணியே நிறைய இருக்கு.அதையே செலவு பண்ண முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன்.ப்ளீஸ்யா.வாங்கிக்க.உன் சுயமரியாதையை இதுல காட்ட வேண்டாம்.இன்னும் ஆறே மாசம்.அதுக்கு அப்புறம் நீ எவ்வளவு செலவு பண்ணாலும் நான் கேட்கவே மாட்டேன்”என்றாள்.

அருணிற்கு முன்னணி ஐடி கம்பனியில் வேலை கிடைத்திருந்தது.ஆரம்ப சம்பளமே அதிகம் தான்.அவனது திறமைக்கு அது குறைவு தான்.சிறுவயதிலிருந்தே சுயமரியாதை கொள்கைகள் அதிகம்.அது அவனது தாத்தா கற்றுக் கொடுத்தது.

அதிகப்படியான பணம் பிள்ளைகளை சீரழித்துவிடுமென்பதை தன் மகன் மூலம் உணர்ந்தவர் என்பதால்,பேரனுக்கு அன்போடு கண்டிப்பையும்,சில கொள்கைகளையும் கற்றுக் கொடுத்திருந்தார்..அதனால் தான் இது போன்ற சூழ்நிலையிலையும்,இளமை உணர்வை நேர்படுத்தி,நெறியோடு நடந்துகொண்டிருக்கிறான்.அவ்வப்போது தடுமாறுவதும் உண்டு.ஆனால் மீண்டுவிடுவான்..வயசு அப்படி!!

பிரத்யாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருந்தவனின் அருகில் நெருங்கி அமர்ந்து தோள் சாய்ந்துகொண்டாள்.

“நான் இப்படியெல்லாம் யார்கிட்டவும் நடந்ததில்ல.உனக்கு புரியுதா”

“எதை சொல்ற ப்ரத்யா”

“இதோ இப்போ உன்கிட்ட நெருங்கி இருக்கேனே.இதை சொல்றேன்.என் அப்பா பக்கத்தில கூட நான் இப்படி உட்கார்ந்தது கிடையாது.அதுக்கு வாய்ப்பும் அமைந்ததில்ல..இப்போ உன்கூட இருக்கேன்னா,அதுக்கு காரணமே நான் உன்கிட்ட ரொம்ப பாதுகாப்பா உணர்றேன்.இதுக்கு பேர் காதலா ஈர்ப்பா நட்பா,இல்லை அதையும் தாண்டி எதுவுமா எனக்கு நிஜமா தெரியவே இல்லை.ரொம்ப குழப்பமா இருக்கு.அதனால தான் என்னால முழுமையா உன்னளவுக்கு என்னால ஈடுபாடோட இருக்க முடியலை”

“இப்போ எதுக்கு இந்த விளக்கம்”

“நீ எனக்கு செலவு பண்றது பிடிக்கலை.அதுக்கு தான் இந்த விளக்கம்”

“உனக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் ப்ரத்யா.அதுக்காக எனக்கு பிடிச்சதை நான் செய்யாமல் இருக்கவும் மாட்டேன்.எனக்கு எப்பவும் விட்டுக்கொடுத்து பழக்கமே கிடையாது.எனக்கு ஒண்ணு வேணும்னா வேணும் தான்.இப்போ நீ எனக்கு வேணும்..நான் முடிவு பண்ணிட்டேன்.உனக்கும் இதுல விருப்பம் என்பதும் எனக்கு தெளிவா தெரியும்.குழப்பிக்காதே.உன்னை விடற ஐடியா எனக்கு இல்லவே இல்லை..இப்போ நான் லவ் பண்ற விஷயம் என் வீட்டுக்கு தெரியும்”எனவும் அதிர்ந்து போய் பார்த்தாள்.

விலகியவளை இன்னும் இறுக பிடித்தவன்,”எங்க குடும்பத்தில அந்நிய குடும்பங்கள்ல சம்பந்தம் வைச்சுக்கற பழக்கமே கிடையாது”என்றவுடனே தள்ளி அமரப்போனாள்..தடுக்கவில்லை.அதற்கும் வருந்தினாள்.

“சொத்து வெளில போயிடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பாங்க.என் அப்பா அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டார்.அவர் இறக்கற வரைக்குமே என் வீட்ல இருந்து ஒருத்தரும் அவருக்கு உதவி செய்யலை.என்னை மட்டும் என் செலவை மட்டும் பார்த்துப்பாங்க..நாளைக்கு எனக்கும் இந்த நிலை வந்துடும்னு எனக்கு தெரியும்.ஆரம்பத்தில நான் வேலை செய்து படிக்க நினைச்சது வேற.இப்போ சின்சியரா படிச்சிட்டு இருக்கது உனக்காக தான்.சொத்து கொடுக்க மாட்டேன்னு சொன்னாலும் தைரியமா வீட்டை விட்டு வெளில வந்துடலாம் இல்லையா.என் அம்மா தான் வர மாட்டாங்க.அதை அப்போ பார்த்துக்கலாம்”-எளிதாக சொல்லிவிட்டான்.

அவளுக்கு தான் ஒருநொடி என்ன பேசுவதென்றே தெரியவில்லை.ஆனாலும் இன்னும் தான் சொல்லாத காதலுக்காக,எவ்வளவு உறுதியுடன் எதிர்காலக் கனா காண்கிறான்..உள்ளூர வலித்தது.வலியும் சுகமாகத்தான் இருந்தது.

வேறெதையும் யோசிக்காமல் மிகவும் நெருங்கி அவனை ஒட்டிக்கொண்டாள்.மனம் தடுமாறாமல் ஆதரவாய் அவள் உச்சந்தலையில் இதழ் பதித்த அவனின் செய்கை,இன்று அவளை புரட்டிப்போட்டது.

“தேங்க்யூ.தேங்க்யூ வெரி மச் அருண்”

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்.லவர்ஸ் டே பங்க்ஷன்ல நாம கலந்துக்கலாம்.நான் உன் பணத்தை வாங்கிக்கறேன்.டீலா நோ டீலா”

“இல்ல..நான் பணம் கொடுக்கலை.நானே வைச்சுக்கறேன்”பின்வாங்கினாள்.

காதலர் தின கொண்டாட்டம் என்றால்,பூங்கொத்து கொடுத்து நடனமாடும் நிகழ்ச்சி என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..இது கொஞ்சம் வேற தினுசு.இளசுகளின் இளமை கொண்டாட்டத்தின் உச்சக்கட்டம்.மேற்கத்திய கலாச்சாரத்தின் இதுவும் ஓர் அங்கம்.ரசிக்கும் மனம் வேண்டும் என்பான் அருண்!!

அந்த நினைப்பே அருணை வலுக்காட்டாயமாய் ப்ரத்யாவை காதலர் தின கொண்டாட்டத்துக்கு அழைத்து செல்ல வைத்தது.அவர்கள் உறவின் விரிசலுக்கும் அடித்தளமிட்டது..

இன்றோ இருதுருவமாய் நிற்கிறார்கள்.இவள் இங்கே..ஆனால் அவன் எங்கிருக்கிறான்..??முழுதாய் நான்கு வருட பிரிவு.

“பிரத்யா..எருமை ப்ரத்யா”காரே அதிரும்படி கத்திய மதுவின் குரலில் கண் விழித்த ப்ரத்யா,கனவுலகத்தில் ஆழ்ந்து போய்விட்டதை உணர்ந்து சிரித்துக்கொண்டாள்.மது முறைக்க,தோழியின் கோபத்தையும் ரசித்தாள் ப்ரத்யா...

உறவுக்கு..அன்புக்கு..உண்மைக்கு..ஏங்குபவள் இவள்..


No comments:

Post a Comment